January 14, 2010

கமலாவும் கத்திரிக்காய்க் கூட்டும்.

என் அருமை மனைவி கமலாவுக்கு உள்ள எத்தனையோ நல்ல வழக்கங்களில் ஒன்று தினமும் என்னைக் கேட்டு எனக்கு இஷ்டமான சமையலை செய்வது தான். அதே சமயம் அது அவளுக்கு இஷ்டமான சமையலாகவும் அமைந்துவிடும். இது எப்படி என்று கேட்கிறீர்களா?
     நேற்று காலை நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன். கமலாவின் ’நோ-ஹௌ’வை யாவரும் தெரிந்து கொள்ளட்டும!
       ”ஏன்னா, உங்களைத்தானே, இன்றைக்கு என்ன சமையல் செய்யட்டும். வீட்டில் கத்திரிக்காய்தான் இருக்கிறது. கூட்டு செய்யட்டுமா?" என்று  கேட்டாள்.
         “கூட்டா கமலா  வேண்டாம். எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு செய்யேன்” என்றேன்.
  "எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்புதானே? செய்துவிடுகிறேன். அப்புறம்    அம்மா செய்கிற மாதிரி இல்லை, அப்படி இப்படி’ என்று ஆடக்கூடாது.”
   ”சரி வாயைத் திறக்காமல் சாப்பிடுகிறேன். போதுமா.?”
  ”இப்போ இப்படித் தான் சொல்லுவீங்கோ. அப்புறம் ஆயிரம் நங்கு நடிப்பீங்க.
எண்ணெய் க்கத்திரிக்காய் குழம்பு சமாசாரமே வேண்டாம்பா!”
    ”அப்படியானால் கத்திரிக்காயைச் சுட்டு, புளி மசியல் செய்யேன்.”
    ”ஐயோ, மசக்கையே! புளி மசியல் வேண்டுமாம். கேஸ் அடுப்பில் கத்திரிக்காயை சுட முடியுமா. அதற்கு கரி அடு்ப்பு வேண்டும், வருஷத்தில் ஒருநாள் கத்திரிக்காயைச் சுடுவதற்கு கரி அடுப்பையும் ஒரு மூட்டை கரியையும் நான் கட்டிக் காப்பாற்ற வேண்டுமா?....உங்க அருமை அக்கா சரோஜாதான் இன்னும் கரி அடுப்பு வைத்துக் கொண்டிருக்கா. என்னதான் ஆயிரம் சம்பாதித்தாலும், கேஸ் அடுப்பு வாங்க அவாளுக்கு மனசு வராது. அக்காகிட்டே நீங்க சீராடப் போகும்போது, தினமும் மூணு வேளையும் கத்திரிக்காயை சுட்டு மசியல் பண்ணிப் போடச் சொல்லி திருப்தியாக சாப்பிட்டு விட்டு வாங்க.”
”அதை விடு கமலா. இப்போ நான் சொல்வதைச் செய். பொடி போட்டு கறி பண்ணிவிடு. அட்டகாசமாக இருக்கும்” என்றேன், பொய்யான உற்சாகத்துடன்.  
”பண்ணிவிடுகிறேன். ஆனால் வீட்டை தலைகீழாகத் திருப்பினால் கூட ஒரு பிடி தனியா கிடையாது நானும் நாலு நாளாக தனியா வாங்கிண்டு வாங்கன்னு கத்திண்டிருக்கேன். ’சேர்ந்தா தனியாவா’ன்னு பேத்தலான சிலேடை ஜோக் அடித்துக் கொண்டு மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி பொடி போட்டு கறி பண்றது. சொல்லுங்கோ?”
      ”இதோ பார் கமலா இப்போ என்னை கடைக்குத் துரத்தாதே. கத்திரிக்காயை வெறுமனே பொன் நிறமா வதக்கி வைத்துவிடு”
    ”வெறும் வதக்கல் தானே.  ஆஹா பண்ணிவிடுகிறேன். ஆனால் உங்கள் பெண் இருக்காளே ராங்கிக்காரி வாயில வைக்கமாட்டாளே! கத்திரிக்காயை. நிறுக்கா இலையிலிருந்து ஒதிக்கிவிடுவாளே. இந்த பிடிவாத குணங்களெல்லாம் அப்படியே உங்க அம்மாதான். ஹூம் ... கல்யாணம் ஆன புதுசுலே நான் இப்படித்தான் கத்திரிக்காய் வதக்கலை உங்க அம்மா இலையிலே போட்டுவிட்டேன். அப்படியே அதை விஷம் மாதிரி ஒதுக்கி வைத்ததும் இல்லாமல் ஒரு ’பாட்டு’ வேறு பாடினாளே, எத்தனை வருஷமானாலும் மறக்குமா! அப்போ உங்க அம்மா பாடினா, இப்போ உங்க பொண்ணு பாடுவா. தாராளமா வதக்கல் பண்றேன். பாட்டை கேக்ணும்னு என் தலையிலே எழுதியிருந்தா அதை எத்தாலும், யாராலும் அழிக்க முடியாது.”
      ”இதுக்காக ஏன் கண்ணைக் கசக்கறே கமலா? கத்திரிக்காய் போட்டு மோர்க் குழம்பு பண்ணிவிடு.”
    ”ஐயோ ... இந்த மனுஷனுக்கு வர்ற யோசனையைப் போய்  யார் கிட்ட சொல்லுவேன்? நேற்று சாயந்திரம் உங்க ஆபீஸ் சிநேகிதர்களை அழைத்துக்கொண்டு வந்தீங்க. அவர்களுக்கு காபி போட்டு கொடுக்கச் சொன்னீங்க. அதனாலே பால் தீர்ந்து போய் விட்டது. மோர், ஒன்ஸ்மோர் தான். இந்த அழகில் மோர்க்குழம்பு, தயிர்ப் பச்சிடி என்று சொல்றீங்க.”
   ”விடு கமலா. அப்போ வந்து ரஸவாங்கி பண்ணிவிடேன்.”
   ”கோலி குண்டு சைஸ்ல கத்திரிக்காய் வாங்கிண்டு வந்திருக்கீங்க . நீள கத்திரிக்காயில் தான் பண்ண முடியும் .குண்டு கத்திரிக்காயில் பண்ணால் வாயில் வைக்க வழங்காது. எனக்கேன் பொல்லாப்பு? நீங்க சொன்னதைப் பண்ணி விடுகிறேன்.”
    ”கமலா,  ரஸவாங்கி வேண்டாம். கத்ரிக்காய் கூட்டு பண்ணிவிடு.”
     "கத்திரிக்காய் கூட்டா? ஹூம்....சரி... உங்க இஷ்டப்படியே கத்திரிக்காய்க் கூட்டு பண்ணிவிடுகிறன். உங்களுக்குப் பிடித்ததைப் பண்ணுவதை விட எனக்கு வேறு என்ன வேலை?”
  இப்படியாக நேற்று காலை "என்" (அதாவது கமலாவின்) இஷ்டப்படியே கத்திரிக்காய் கூட்டு செய்தாள் கமலா!

14 comments:

  1. சார், நிஜமாவா? படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை. பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Kadugu sir,

    " WISH YOU AND YOUR FAMILY A VERY HAPPY PONGAL "

    I enjoyed reading your post. It was very amusing and funny.
    CONGRATS....

    ReplyDelete
  3. இனிய பொங்கல் வாழ்த்துகள் சார். பொங்கல் அன்று கமலா கட்டுரை வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஏற்கனவே ஒரு முறை அப்புசாமி தளத்தில் படித்திருந்தாலும் மீண்டும் படித்து சிரித்தேன்.என் தந்தைக்கும் அனுப்பி அவர்களையும் சிரிக்க வைத்தேன்."எல்லாரும் சிரிப்பா சிரிக்கறாங்க" அப்படின்னு ஒருத்தரை குறை சொல்றதுக்குதான் சொல்லுவோம். அதுவே உங்க விஷயத்தில் பாராட்டாகி விட்டது :-)

    ReplyDelete
  4. வீட்டுக்கு வீடு வாசப்படி. :)))))

    நேரமிருந்தால் இங்க போய் பாருங்க, இதே மாதிரி ஒரு போஸ்ட் 2 நாள் முன்னாடிதான் போட்டேன்.http://kirukkugiren.blogspot.com/2010/01/blog-post.html

    ReplyDelete
  5. Though I have read similar articles, I enjoyed this one too. You and Mami are welcome to our home (East Tambaram) and I will ask my amma / wife to prepare whichever Brinjal recipe you prefer! - R. Jagannathan

    ReplyDelete
  6. அன்புள்ள ஜகந்நாதன் அவர்களுக்கு, உங்கள் அழைப்புக்கு நனறி. இந்த கத்திரிக்காய் கட்டுரை 1978’ல் - ஆம் 31 வருஷங்களுக்கு முன்பு- எழுதியது. இதே பாணியில் பலர் எழுதி இருக்கக்கூடும். காரணம், வீட்டுக்கு வீடு வாசற்படி!
    மேலே ஒருவர் BLOG முகவரி ஒன்றைக் கொடுத்து இருக்கிறார், அங்கு போய்ப் பாருங்கள், அதுவும் சுவையான கட்டுரைதான்.
    தொடர்ந்து கமலா கட்டுரைகளைப் போட் எண்ணியுள்ளேன்.

    ReplyDelete
  7. கடுகு மற்றும் ஜகந்நாதன் அவர்களுக்கு,

    என்னுடைய BLOGக்கு வருகை தந்ததற்கும், கருத்துகளை பதிவு செய்ததற்கும் நன்றிகள் பல.

    Brinjal Recipe - என்றவுடன் என் மனைவி செய்யும் "கத்தரிக்காய் பருப்பு அடைச்ச கறி" ஞாபகம் வந்தது.இதில் அவர் ஒரு நிபுணர் என்றே கூறலாம். சிங்கப்பூர் வரும் வாய்ப்பு வந்தால் அவசியம் வீட்டுக்கு வரவும்.Infact, I can assure that it tastes So delicious that you can plan a trip to Singapore just for that.

    ReplyDelete
  8. Lalgudi Rajesh avargalin invitation romba tempting aaga irukkiradhu! Intha maathiri samaikkum manaiviyai vaiththukkondu yeppadi intha blog-i dhairyamaagap pottaar?! - R. Jagannathan

    Srimaan Kadugu avargalukku,

    I just managed to make a red - green spectacle using cellophane paper. Regretfully it seems it is not made properly as my wife and I could not get the 3D well though there was some difference between viewing the picture with and without the spec. Let me get my nephew (!) to make another spect and try. Please bear with us. Thank you,
    - R. Jagannathan

    ReplyDelete
  9. Reg the glasses: The red colou isfor the left eye and the green for the right eye.
    You can add another layer of the cellaphnae paper pieces. Double layer will make the colors little darker and you wil be able to see the flower popping out.
    In the masthead, the ladies hands will also appear in 3-D incluuding. The bangles, leaves etc. and the tamil words Kadugu Thalippu will also pop out. - Kadugu

    ReplyDelete
  10. sir chinna vayasil naanga ( nnanum en annanum) unga rasigargal.kamala, thochu ellaam enga jigiri dosthugal. Unga thirudan pidi machine kathayai pathivetram seiyyavum.
    nanri,
    anbudan
    sathianarayanan

    ReplyDelete
  11. அன்புள்ள தமிழ் பயணி, திருடன் பிடி மெஷின் பின்னால் போடுகிறேன். நாளை வரும் பலாப்பழத்தை விட இன்றைக்கு வரும் களாப் பழத்தை ரசிக்க முயற்சியுங்கள் :) !!!!!

    ReplyDelete
  12. உங்களுக்கு அவ்ளோ இளக்காரமாய் போச்சா?இங்க வந்து எங்க சமையலை சாப்பிட்டு பாருங்க கமலா மாமி அருமை தெரியும்

    ReplyDelete
  13. When someone writes an pаrаgгaph he/shе keeps the thought οf а user in hіѕ/hеr mіnԁ that how а usег can knοw it.

    Ѕo that's why this piece of writing is amazing. Thanks!
    Here is my web blog : Bodylastics reviews

    ReplyDelete
  14. After Reading ' NAANUM DELHI GANESHUM ' reminds me of A joke about TINDA CURRY and I also shared the same with Delhi Ganesh After getting his number from you . I will comment then and there . Thanks - Shyamala Ranganathan , indian BAnk

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!