January 14, 2010

குஷ்வந்த் சிங்கும் நானும்

முன் குறிப்பு - 1
.தலைப்பைப் பார்த்ததும் ‘ சரிதான்.. விட்டால், ஷேக்ஸ்பியரும் நானும், தொல்காப்பியரும் நானும் என்றெல்லாம்  இந்த  ஆள் சரடு திரிப்பார் போலிருக்கிறதே என்று சிலர் நக்கல் அடிக்கக் கூடும். அவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் அபிமான வாசகர்கள் 10,00,000 பேர் -- (ஊப்ஸ்...ஐந்து பூஜ்யங்கள் அதிகமாக டைப் ஆகிவிட்டது. நான் அகிம்சாவாதி என்கிற காரணத்தால் அவற்றை  ’அடிக்க’  மனசு வரவில்லை.! அப்படியே இருந்து விட்டு போகட்டும்!) அப்படி கூறமாட்டார்கள்
முன் குறிப்பு -2
இல்லஸ்ட்ரேடட் வீக்லியின் விசிறி நான். அதில் ஆர். கே. நாராயண் தொடர் கதைகள் எழுதி வந்ததும்  முக்கிய காரணம். வீக்லிக்கு 70’களில் குஷ்வந்த் சிங் ஆசிரியர் ஆனார். பல மாற்றங்களைச் செய்து சர்க்குலேஷனை உயர்த்தினார்.  ஒவ்வொரு வாரமும் “ஆசிரியர் பக்கம்” எழுதுவார். பல சமயம் அதில் கிளு கிளு செய்திகளும் இருக்கும்  (ILL-LUST-RATED WEEKLY!). யாராவது பிரமுகர் காலமாகி விட்டிருந்தால் இரங்கல் கட்டுரையும் அவர் எழுதுவார். அப்படி எழுதும்போது குறிப்பிட்ட பிரமுகருடன் தன்னைச் சம்பந்தப்படுத்தி, கிட்டத்தட்ட  ஒரு ஜம்பக் கட்டுரையாக எழுதிவிடுவார்..அதாவது   இப்போது நான் எழுதும் “....நானும்” வரிசை கட்டுரைகளைப் போல என்று வைத்து கொள்ளுங்களேன்!
அவரைக் கேலி செய்ய நினத்து ஒரு கட்டுரையை எழுதினேன். தாகூர், மெரிலின் மன்றோ, கார்ல் மார்க்ஸ் ஆகியவர்கள் காலமான சமயம் வீக்லியும் இருந்து, அதன் ஆசிரியராக குஷ்வந்த் சிங்கும் இருந்திருந்தால் ‘ஆசிரியர் பக்கத்தி’ல் எப்படி எழுதி இருப்பார் என்று ஒரு கட்டுரைய் அவர் பாணியில் எழுதி  அனுப்பினேன்.  மறு வாரமே அதை ’ஆசிரியர் பக்கத்தில் சிறு குறிப்புடன் வெளியிட்டு விட்டார் .
குஷ்வந்த் சிங்கின் குறிப்பு” என்னை யார் கேலி பண்ணினாலும் திட்டினாலும் நான் ஒரு பொழுதும் ஆட்சேபித்ததில்லை. ’அவர் தெரியும்’, ’இவர் தெரியும்’ என்று அல்டாப்பாகப் பேசுபவன் என்று தான்  என்னைப் பற்றி பல வாசகர்கள் கருதுகிறார்கள். புது டில்லி வாசகர் -----------------ஒரு நையாண்டிக் கட்டுரை அனுப்பியுள்ளார். அதை இங்கு தருகிறேன்.
(அந்தக்  கட்டுரை ஆங்கிலத்தில் தொடர்கிறது.)

5 comments:

  1. /என் அபிமான வாசகர்கள் 10,00,000 பேர் / - This is no exaggeration, but true! Probably not every reader responds to the blog or writes to you! You are bringinging smiles and wide grins to the faces of all your reader. I do share them with my family members.
    I think the "புது டில்லி வாசகர் -----------------ஒரு நையாண்டிக் கட்டுரை " and your article in Illustrated Weekly will follow later though you have mentioned "அதை இங்கு தருகிறேன்." Eagerly awaiting the same.

    Happy Pongal!
    -R. Jagannathan

    ReplyDelete
  2. Thank you for your kind words.
    I have since posted my parody article which was published by Kushwant Singh in his page in Illustrated Weekly-- Kadugu.

    ReplyDelete
  3. Yes.. I agree with Mr. R. Jagannathan...
    Regards
    Nagappan

    ReplyDelete
  4. யதிராஜ சம்பத் குமார்January 21, 2010 at 8:47 PM

    தன்னுடைய எண்ணம் தவறென்றால் வெளிப்படையாகவே அதனை ஒப்புக்கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்ளும் பெருந்தன்மையாளர். இவரிடம் இருக்கும் இவ்விசேஷ குணம் அநேக பத்திரிக்கையாளர்களிடம் இருப்பதில்லை. நல்ல பதிவு!! கடுகிற்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  5. Yes. He piublished my Paradoy in his Joke Book also

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!