January 14, 2010

’இது’ ---ஜிங்குடு எழுதிய ஆராய்ச்சி உரை


தமிழிலேயே ஒப்பற்ற வார்த்தை ’இது’ என்பதுதான். அந்த காலத்தில் ஆயிரம் முகம் ராம் குமார் என்று ஒரு நடிகர் இருந்தார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடிய திறமை இருந்ததால் இப்படி அழைக்கப்பட்டார். அதே போல் "இது"  என்ற வார்த்தை ஒரு ஆயிரம் முகம் ராம் குமார். அது இடத்திற்குத் தகுந்தாற்போல் அர்த்தத்தை மாற்றிகொள்ளும்.
 *                       *                  *
உதாரணத்திற்கு "இது" மொழியில் ஒரு சொற்பொழிவைத் தருகிறேன்,படியுங்கள்.
இதில் வரும் எல்லா "இது"விற்கும் சரியான அர்த்தத்தை உங்களை அறியாமலேயே சரியாகப் புரிந்து கொள்வீர்கள்!
*                  *                          *                  *
பெரியோர்களே! தாய்மார்களே! இன்று நடைபெறும் மாபெரும் இந்த "இது" வில் என்னை நீங்கள் அன்புடன் "இது" செய்வது எனக்கு உண்மையிலேயே "இது" வாக இருக்கிறது.
ஒரு சிலர் இப்படி எல்லாம்’இது’ங்க வேண்டுமா? என்று கேட்டார்கள்  ’இது’ங்குகிறவர்கள் ’இது’ங்கட்டும். அதனால் நமக்கு ஒரு "இது"வும் இல்லை. என்னைப் போன்ற இளஞர்களுக்கு நீங்கள் ’இது’ங்கும் "இது" .ஒரு பெரிய "இது" மாதிரி.நான் மேன்மேலும் என் "இது"வில் சிறந்து ’இது’ங்க உதவும் என்று கூறி என்னுடைய "இது"வை இத்துடன் ’இது’ங்கிக் கொள்கிறேன். வணக்கம்!

6 comments:

  1. இது ரொம்பவே இதுவா இருந்ததுங்க.நீங்க இது மாதிரி இது இன்னும் நெறைய விதவிதமான 'இது'வ 'இது'ங்க.'இது'க்கள்!...சாரி..வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. என்ன ஒரு இது இருந்தா, இந்த மாதிரி இதுங்களை எல்லாம் இங்கே இதுங்கிகிட்டு இருப்பீங்க? எங்களுக்கும் ஒரு இது இல்லை, அதனால இதுகளை எல்லாம் இதுங்கிகிட்டு இருக்கோம்!

    ReplyDelete
  3. ஜிங்க்டுவிற்கு ஆயிரகணக்கான் இதுகள் இதுங்கி இருப்பதால், தனித்தனியே த்ன்னுடைய இதுவை இதுங்க முடியவில்லை என்பதை என் மூலம் இதுங்கிக் கொள்கிறார். - கடுகு

    ReplyDelete
  4. rombavum idhu vaa irundhudhu. Naraya idhugala ethir paarkirom.

    ReplyDelete
  5. ”இது” நல்லாயிருக்கு. ”இது” போலவே எழுதவும்..

    ReplyDelete
  6. இதுல ஒரு பெரிய இது என்னன்னா, இது மாதிரி பெரிய பெரிய இதுவெல்லாம் இது உள்ளவங்களாலதான் இதுங்க முடியும்.
    இது உண்மையிலேயே ஒரு இதுதான். உங்களுக்கு இதுவா இருக்கோ இல்லையோ எனக்கு பெரிய இதுதான்.

    (அஜித்துக்கு "அது"ன்னா, கடுகு சாருக்கு "இது")

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!