August 13, 2010

புள்ளிகள்: : ஜீனா லோல்லா பிரிகிடா

டில்லியில் நடை பெரும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு ஒவ்வொரு சமயமும் எனக்கு பிரஸ் பாஸ் கிடைக்கும். அது மட்டுமல்ல திரைப்பட நிகழ்ச்சிகள் பத்திரிகையாளர் கூட்டம் ஆகியவற்றிற்கும் அழைப்புகள் வரும்,. ஒரு சர்வதேச திரைப்படவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். ஹாலிவுட் நடிகை  ஜீனா லோல்லா பிரிகிடா.  கவர்ச்சிக் கன்னி என்ற பெயர் பெற்றவர்.
டில்லியிலுள்ள சாஸ்திரி பவனில் பத்திரிகையாளர் கூட்டம். அப்பொழுது ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஐ. கே. குஜரால். அவரே பத்திரிகையாளர் கூட்டம் நடந்த ஹாலுக்குள்   நுழைய முடியாத அளவுக்குக் கூட்டம். (பாதி பேர் சாஸ்திரி பவனில் உள்ள அமைச்சகத்து அலுவலர்கள்.)
ஜீனா வரும்போதே கவர்ச்சியும் ஃபிரெஞ்சு சென்டும் தூக்கி அடித்தன. நாலு சம்பிரதாயமான வார்த்தைகளைப் பேசிய பிறகு குஜ்ரால் நிருபர்கள் கேள்வி கேட்கலாம் என்றார்.  இந்த மாதிரி நிருபர் கூட்டங்களில் பலர் கேள்விகள் கேட்க முந்துவார்கள். பெரும்பாலான கேள்விகள் என்னவோ அபத்தமாகவே இருக்கும். இரண்டு மூன்று நிருபர்கள் கேள்வி கேட்ட பிறகு. அதாவது சப்தம் அடங்கிய பிறகு நான் எழுந்து ஒரு கேள்வி கேட்டேன். ”ஜீனா .... உங்கள் பெயர் இத்தாலி மொழி அகராதியில் இடம் பெற்றிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். ”மேடுகளும் பள்ளங்களும் ( Hills and Vales)  உள்ள ( Landscape ) அழகானப் பிரதேசம்" என்று  பொருளாமே?” என்று கேட்டேன்.  (என்ன பொருள் என்பது இப்போது சரியாக நினைவில் இல்லை.)

 உடனே அமைச்சர் குஜ்ரால் என்னைப் பார்த்துக் கையை ஆட்டி "நோ... நோ. ப்ளீஸ்" என்று சொன்னார். அத்துடன்  "நெக்ஸ்ட்" என்றும் சொல்லிவிட்டார். ஜீனாவோ  அவரைப் பார்த்து ”எதற்கு ’நோ’ சொல்கிறீர்கள்?. அவருடைய கேள்விக்கு நான் பதில் சொல்லுகிறேன்” என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து ”இந்தக் கேள்வி கேட்டதற்கு உங்களுக்கு நன்றி  உங்கள் கேள்வியில் ஒரு தவறு இருக்கிறது. என் பெயர் இத்தாலி மொழி அகராதியில் இல்லை. ஃபிரெஞ்சு மொழி அகராதியில் தான் உள்ளது.. இது எனக்கு ஃபிரெஞ்சு மக்கள் அளித்த மிகப் பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன்” என்றார்.. பலத்த கை தட்டல். 
     நிருபர் கூட்டம் முடிந்த பிறகு அறிமுகமில்லாத பலர் என்னிடம் வந்து கைகுலுக்கிப் பாராட்டினார்கள்.. ஜீனா கை குலுக்கி இருந்தால் இன்னும் உச்சி குளிர்ந்து போயிருப்பேன். ஹூம்....!

10 comments:

  1. kadugu sir
    i've been following your blog for some time.it is quite interesting and inspirational.recently i came across a story which was intersting.i give the link.if you like the story,please post it.
    thank you
    http://www.inspirational-short-stories.com/toss-a-coin.html
    regards
    devaraj

    ReplyDelete
  2. Gina's Musical "come September" with Rock Hudson was a big hit in India.There was on song in film "Naan"(jayalalitha ,ravichandran) that was copied from "come september" tune

    raju-dubai

    ReplyDelete
  3. devaraj அவர்களுக்கு,
    நண்றி.. பார்க்கிறேண்

    ReplyDelete
  4. raju-dubai அவர்களுக்கு, காபி அடிப்பதைக் கலையாக ஆக்கிவிட்டவர்களாச்சே நம்மவர்கள்!

    ReplyDelete
  5. சுவாமி,அவர் ஜீனா லோலோ ப்ரிகிடா !!!
    ஒரு மானை கடா ஆக்கிவிட்டீரே!
    LOL

    ReplyDelete
  6. வலைஞன் said... ..ஒரு மானை கடா ஆக்கிவிட்டீரே....

    ஜீனாவின் பெயரைத் திருத்திவிட்டேன். கவலையை விடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பெயர் ‘கவலைஞன்’ என்று ஆகிவிடும்! :)

    ReplyDelete
  7. கடுகு சார்,

    இதோ நண்பர் ராஜு- துபாய் குறிப்பிட்ட நான் படப் பாடல் (வந்தால் என்னோடு) ....

    http://www.youtube.com/watch?v=F7X3EDr0ZEY&p=6090FCAC3EADBD35&playnext=1&index=63

    ReplyDelete
  8. நன்றிகள் 100 gm கடுகு சார்!
    இவண்,
    கவலை இல்லாத வலைஞன்

    ReplyDelete
  9. உளுந்துAugust 16, 2010 at 9:15 PM

    காபி அடிப்பது என்ற சொல்லை நான் ஆட்சேபிக்கிறேன் யுவர் ஹானர் ! யாரும் கேட்டிராத துபாய் பாட்டை உல்டா பண்ணினால்தான் அது காபி. எல்லாருக்கும் தெரிந்த ட்யுனை உபயோகித்தால் அது காபி ஆகாது. உ-ம் கற்பூர நாயகியே -கருப்பான கையாலே;ரஸ்புடின்-நான்தானே ஒரு புது கவிதை

    ReplyDelete
  10. உளுந்து,

    நீங்கள் சொல்வது போல், இதைப் பார்த்து நம் இசை ஞானி Inspire ஆகியிருப்பாரோ ?
    (எந்தப் பூவிலும் வாசம் உண்டு.....)

    http://www.youtube.com/watch?v=IrnOlVqdqFE&feature=related

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!