April 14, 2010

அன்புடையீர்...

வணக்கம். 

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
என் பிளாக்கிற்கு வந்து, நான் எழுதியவகளைப் படித்துவரும் உங்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றி,.
 நான ஒரு விளம்பரக் கம்பெனியில் கிரியேட்டிவ்  டிபார்ட்மெண்டில் 50-வது வயதில் வேலைக்குச் சேர்ந்தபோது அவர்களுக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது.  ஐம்பது வயதிற்குப்  பிறகு கற்பனைத் திறன் குறைந்து போய்விடுமே, இவரை வேலைக்கு எடுத்துக்கொள்வது  ‘ரிஸ்க்’தானோ என்று யோசித்தார்  கிரியேட்டிவ்  டைரக்டர் டெனிஸ் ஜோசஃப்.  ஆனால் சுமார் பத்து வருஷங்களுக்குப் பிறகு, ஒரு நாள் அவரிடம் “  டெனிஸ்.. நான் அடுத்த வாரம் ரிடயர் ஆகிறேன்” என்றேன்.
“ அப்படியா?...நத்திங்க் டூயிங்... என்ன கதையாக இருக்கிறது? ஒரு வருஷம் எக்ஸ்டென்ஷன் தரச் சொல்லி இப்பவே மேனே ஜிங்  டைரக்டருக்கு லெட்டர் எழுதறேன் ” என்றார். அவருடைய  கடிதத்திற்கு மறு நாளே பம்பாயிலிருந்து எம்.டி ஃபேக்ஸில்  . உத்தரவை அனுப்பிவிட்டார். இதில் முக்கியமானது டெனிஸ் அனுப்பிய கடிதத்தில் இருந்த ஒரு வாசகம்தான்.”  "Age cannot wither him nor custom stale his spelndor"  என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டு ஆரம்பித்து. ” The quotation implies that he has a lot more years in his Tamil head than his "sixty" shown on his birth certificate."  என்று எழுதி இருந்தார். (டெனிஸ் விளம்பர உலகில் ஒரு  பெரிய விருதான : COPYWRITER OF THE YEAR:"  விருதை அதற்கு இரண்டு வருஷத்திற்கு முன்புதான் வென்ற ஜீனியஸ்.)

இந்த தாளிப்பு பிளாக்கை  ஆரம்பிக்கும் போது நான் சற்று பயந்தது உண்மைதான்.. பல துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இதைப் படிக்கக்கூடும்,.ஆகவே அவர்களிடம் பாஸ் மார்க்காவது வாங்க முயற்சி பண்ண்வேண்டுமே என்ற கவலை தொத்திகொண்டது.
பரவாயில்லை. இந்த நாலு மாதத்தில் டிஸ்டிங்க்‌ஷன் கிடைத்ததா இல்லயா என்பது முக்கியமில்லை, ஃபெயில் ஆகவில்லை என்பதே முக்கியம்! டெனிஸ் ஜோசஃப் எழுதிய மாதிரி. இந்த தலையில் கொஞ்சம் சரக்கு இருக்கிறது போலும்!
ஆண்டவனுக்கு நன்றி.
பின்னூட்டம் போட்டுப் பாராட்டியவர்களுக்கு நன்றி.
அதை விட “ என்னய்யா போர் அடிக்கிறீங்க” என்று எழுதாமல் இருந்த நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு கூடுதல் நன்றி.
மீண்டும் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

22 comments:

  1. சார் ஜாம்பவான நீங்கலாம் இப்படி சொன்ன கத்துக்குட்டி நான்லாம் என்ன செய்றது .நீங்க திராட்சை ரசம் .வயது ஆக ஆக மதிப்பு ஜாஸ்தி .
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  2. பத்மா சொல்றதைப்பார்த்தா வைன் என்று அர்த்தம் வருதே....?

    ReplyDelete
  3. WINE is fine. WHINE எனபதை விட...

    ReplyDelete
  4. ராஜ சுப்ரமணியன்April 14, 2010 at 10:21 AM

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். விக்ருதி வருஷத்திலும் உங்கள் அருமையான எழுத்துப் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    -அரசு

    ReplyDelete
  6. Sir,
    In the name of tamil new year, you have done self propogation.....first time.
    Still i loved it......Happy new year to you and your family. Hope you will entertain us in the new year also.

    Kothamalli

    ReplyDelete
  7. As you have wished us and treated us with a grand feast for this Tamil New Year, I also take courage and wish you, your family members and friends and followers of this blogsite a very Happy New Year! (If MK takes offence for this violation from his ruling, I am sure you will use your wit and wisdom to bail me out.)

    Mr. Dennis Joseph should have been a wise boss who could identify, recognise, motivate and retain valuable assets to his organization. The few words you have quoted from his letter to the M.D. are enough to prove his capability and control over the language.

    -R. Jagannathan

    ReplyDelete
  8. <<>>
    இந்த BLOG என் சுயப்பிரதாப BLOG என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேனே!

    தொடர்ந்து சுவையான் தகவல்களைத் தர முயற்சிக்கிறேன். பாராட்டுகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  9. அரசு அவர்களுக்கும் ராஜ சுப்பிரமணியன் அவர்களுக்கும் ஆர். ஜகன்னாதன் அவ்ர்களுக்கும்: உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  10. <<<<< R, Jagannathan said ........Mr. Dennis Joseph should have been a wise boss.... The few words you have quoted from his letter to the M.D. are enough to prove his capability and control over the language.>>>

    More than that he dictated this letter to his secretary in my presence!

    ReplyDelete
  11. Aiya,
    ungal naadai - very interesting! Wishing you and your family a happy Tamil new year!
    I do visit your blog daily, please continue your writing!

    Regards,
    Essex Siva

    ReplyDelete
  12. உங்களுடைய அனுபவங்களும் எழுத்துகளும் என் போன்ற அறிவிலிகளுக்கெல்லாம் பள்ளிப் பாடம் போல. மிகவும் ஊன்றி தொடர்ந்து படித்து வருகிறேன். தொ...................................................................டருங்கள்............

    ReplyDelete
  13. Happy Tamil New year!

    I am a biggest fan of your blog :) it always brings a smile to my face.

    ReplyDelete
  14. Basildon Siva அவர்களுக்கு
    மிக்க நன்றி

    James Arputha Raj அவர்களுக்கு
    மிக்க நன்றி
    ராமுடு அவர்களுக்கு:
    மிக்க நன்றி

    ReplyDelete
  15. iniya tamil puthandu vazhthukal

    ReplyDelete
  16. வருணன அவர்களுக்கு: உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  17. கனகாம்பரம் பற்றி என் பின்னோட்டத்திற்கு உங்கள் பதில் காணுமே! - ஜகன்னாதன்

    ReplyDelete
  18. <<< Jagannathan said...கனகாம்பரம் பற்றி என் பின்னோட்டத்திற்கு உங்கள் பதில் காணுமே!>>>

    replied. My internet is down.

    ReplyDelete
  19. இதோ என்னுடைய மதிப்பீடு நூற்றுக்கு எண்பது மார்க்குகள்.
    இருபதை ஏன் குறைத்தேன் என்று யாராவது கேட்டால் சொல்லுவேன்.

    ReplyDelete
  20. <<<< kggouthaman said...இதோ என்னுடைய மதிப்பீடு நூற்றுக்கு எண்பது மார்க்குகள்.இருபதை ஏன் குறைத்தேன் என்று யாராவது கேட்டால் சொல்லுவேன்.>>>>யாரைக் கேட்டு 80 மார்க கொடுத்தாய்? உங்க அப்பா வீட்டு சொத்தா? என்றுதான் 18965 பேர் கேட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் TRASH பண்ணிவிட்டேன். உங்களைத் தப்பாக யாராவ்து பேசினால் என் மனசுக்குப் பொறுக்காது!:)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!