April 28, 2010

புது மனைவி கமலாவிற்கு -கடுகு

ஒரு  கவிதை போல் நீ உறங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலை வேளையில் உன்னை எழுப்பிக் காப்பி போடச் சொல்லாததைத் தவறாக எண்ணாதே.
நேற்றுக் காலை நீ காப்பி போட்டபோது இடுக்கியின் பிடி தளர்ந்து வெந்நீர்ப் பாத்திரம் அப்படியே கீழே விழ, அருகில் நின்று கொண்டிருந்த என் காலில் கொட்டிச் சிறிது ரணத்தை ஏற்படுத்தியது. நான் அங்கு நின்றது என்னுடைய தவறு. இடுக்கி பிடி தளர்ந்தால் வெந்நீர்ப் பாத்திரம் கீழே விழுமே என்று எனக்குத் தெரிந்திருக்க வேண்டாமோ? சே. என்ன கணவன் நான்!
அப்புறம் காலைச் சிற்றுண்டிக்குத் தோசை வார்த்தாயே,  அடாடா///அதிலும் உன் சாமர்த்தியத்தைக் கண்டேன். ஆசைக் கணவன் சாப்பிடச் சின்னச் சின்ன விள்ளல்களாக இருந்தால் சௌகரியமாக இருக்கும் என்று தானே தோசையைத் திருப்பும்போது ஒன்பது துண்டுகளாத் திருப்பினாய்? ஒரேயடியாகத் திருப்புவதை விட இப்படிப் பல துண்டுகளைத் திருப்புவது சிரமமான வேலை. இருந்தும் என் மேல் இருக்கும் ஆசையினால் நீ சிரமத்தைப் பொருட்படுத்தவில்லை. தோசை முறுவலாக இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். ஊத்தப்பம் மாதிரி இருந்தாலும், எனக்குப் பிடிக்கும் என்று நான் சொல்லியிருந்ததை ஞாபகம் வைத்துக் கொண்டு ஒரு துண்டு படு
மெல்லிசாகவும் மற்றது ஒரு இஞ்ச் கனமாகவும் நீ வார்த்த சாமர்த்தியத்தை நான் எப்படி விவரிப்பேன்!
நமக்குக் கல்யாணமாகிய முதல் நாளிலேயே இத்தனை சாமர்த்தியத்தைக் காட்டி விட்டாயே, செல்லமே!
காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக பவுடர் உப்பைத் தவறுதலாகத்தான் போட்டுவிட்டாய். இருந்தாலும் நம்பு, என் மனோரஞ்சித மலரே, உப்புப் போட்ட காப்பியின் ருசி இவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று எனக்கு இதுவரை தெரியாது, அடாடா, என்ன டேஸ்ட்!
தோசைக்கு மிளகாய்ப் பொடி பண்ணியதிலிருந்து உன் சிக்கனத்தையும் சமையல் தேர்ச்சியையும் கண்டறிந்தேன். பருப்பு விற்கும் விலையில் மிளகாய்ப் பொடியில் பருப்புகளைப் போடுவது ஊதாரித்தனம். உன் மிளகாய்ப் பொடி அப்படி ஒன்றும் மோசமாக இல்லையே. கண்ணில் நீர் வந்ததும் ஒரு நல்லதற்குத்தான். கண்களும் சுத்தமாகின்றன. நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதால், ஒரு தோசை சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடுகிறது. ஏழெட்டுத் தோசை சாப்பிட்டால் வீணாக உடல் பருக்கும், தொப்பை விழும்! ஆகா! அந்த அருமையான தோசையும் காப்பியும் இன்னும் என் நாக்கிலேயே இருக்கின்றன. உன்னை எழுப்பி, இன்றைக்கும் காப்பி போட்டுத் தோசை செய்து கொடுக்கும்படி சொல்ல எனக்கு மனமில்லை. நீ தூங்கிக் கொண்டே இரு. இதோ இரண்டே நிமிஷத்தில் தெருக்கோடி மீனாட்சி பவனிலிருந்து ஆறு தோசை, இரண்டு கப் காப்பி வாங்கிக் கொண்டு ஓடி வந்து விடுகிறேன்.
சமத்துக் கண்ணே, தூங்கு.  நான் வருவதற்குள் எழுந்து காப்பி போட்டுவிடாதேடா, ப்ளீஸ்
தயவு செய்து.. ப்ளீஸ்!

( வீட்டுப் பரணைக் காலி பண்ணிய போது கிடைத்த பழைய ஏட்டுச் சுவடி!)

20 comments:

  1. நான் சாப்பிட்ட ரவா உப்புமா நினைவிற்கு வந்தது!

    ReplyDelete
  2. எத்தனை நல்ல கணவர் சார்

    ReplyDelete
  3. <<>>
    ரவா உப்புமாவின் ருசி மனதிலும், உப்புமா வாயிலும் ஒட்டிகொண்டதா!

    ReplyDelete
  4. உப்புமா வாயில் ஒட்டிக்கொண்டதா இல்லை பாத்திரத்திலா?

    ReplyDelete
  5. ரவா உப்புமா தான் universally known first dish for newly wed போல, எனக்கும் அந்த யோக(சாப)ம் கிடைத்தது, என்ன சாம்பிள் பீசு போல கொஞ்ஞ்சமா செய்து சக்கரை போடாத கேசரியா இருந்தது..

    ReplyDelete
  6. முகமூடிApril 28, 2010 at 2:24 PM

    //ரவா உப்புமாவின் ருசி மனதிலும், உப்புமா வாயிலும் ஒட்டிகொண்டதா!// பாத்திரத்திலிருந்து வந்தாத்தானே வாயில ஒட்ட :0)
    அன்று முதல் பசங்களுக்கு ஸ்கூல் திறந்து புது புத்தகங்கள் வந்தால் வீட்ல உப்புமா தான்...பின்ன புக்ஸ்கு அட்டை, லேபிள் ஒட்ட பசை வேண்டாமா!!!!

    கட்டுரை ப்ரமாதம் ஓய்!!

    ReplyDelete
  7. பார்த்து சார்! உங்க நக்கலையும் நையாண்டியையும் நாங்க ரொம்ப ரஸிச்சாலும், உங்க மனைவி இதை படிச்சுட்டு உ்ங்களை தாளிச்சு எடுத்திருப்பாங்களே!

    ReplyDelete
  8. DR.KVM said...veettukku veedu vasappadi >>>

    வீட்டுக்கு வீடு ‘வாஸ்து’ப்படி!

    ReplyDelete
  9. கடுகுன்னு பேரை வெச்சுண்டு நல்லா காரமாத்தான் போடுறீர். பயங்கர நகைச்சுவை உணர்வு. ரொம்ப ரசித்தேன்.

    ReplyDelete
  10. அருமையான நகைச்சுவை. என்ன இதை முதலில் படித்திருந்தால், மனைவியிடம் நல்ல பேரு வாங்கி இருக்கலாம். இப்ப ரொம்ப லேட்டு.

    ReplyDelete
  11. சூப்பர் சார்....வாய் விட்டு சிரித்தேன்..
    //கண்ணில் நீர் வந்ததும் ஒரு நல்லதற்குத்தான். கண்களும் சுத்தமாகின்றன. நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதால், ஒரு தோசை சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடுகிறது. ///
    டாப்பு....கலக்குங்க....

    ReplyDelete
  12. நானோ சாப்பாட்டில் சைவம். என்னவருக்கு மாமிசம் இல்லாமல் சாப்பாடு இறங்காது.. நாங்க இப்போ காதலிக்கறோம்..ம்... திருமணம் முடிந்ததும் எப்படியும் இதுபோல ஒரு நிகழ்ச்சி கட்டாயம் நடக்கும் என்று எனக்குதோணுது.. இலங்கையிலிருந்து மித்ரா

    ReplyDelete
  13. கமலாவும் கத்தரிக்காயும் என்று ஒரு கதை படித்திருக்கிறேன். அதை பதிவு செய்யுங்களேன் ப்ளீஸ்.

    ReplyDelete

  14. இதைக் கிளிக் செய்யுங்கள். கத்திரிக்காய் கூட்டு ருசிப்பதற்கு.
    http://kadugu-agasthian.blogspot.com/2010/01/blog-post_14.html

    பதிவின் அடியில் Label: கமலா என்பதைக் கிளிக் செய்தால் எல்லா கமலா கட்டுரைகளும் வரும்.

    -கடுகு

    ReplyDelete
  15. thank you very much

    ReplyDelete
  16. Kadugu sir, where can I get your books?

    ReplyDelete
  17. Kadugu sir, where can I get your books?

    ReplyDelete
  18. வருகிற செப்டம்பர் 2016க்குப் பிறகு தொரடர்பு கொள்ளுங்கள். புத்தகங்களுக்கு!
    அதுவரைபிளக்க கட்டுரைப் படியுங்கள். ANONYMOUS ஆக பின்னூட்டம் போட வேண்டாம். -கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!