April 20, 2010

பெரிய மனிதர் ஸ்ரீஸ்ரீ பிரகாசா

 ஸ்ரீஸ்ரீ பிரகாசா என்ற பெயரை உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்,
காரணம் இவர் 55 வருஷத்திற்கு முன்பு தமிழ்நாட்டின் கவர்னராக இருந்தவர். அந்த பதவிக்கே தன் கண்ணியத்தாலும் நடவடிக்கைகளாலும் பெருமை சேர்த்தவர்.
1956’ம் வருஷம் அவர் சென்னையிலிருந்து பம்பாய்க்கு  மாற்றப்பட்டார். பம்பாய்க்கு புறப்படுவதற்கு முன் தினம் அவர் வேடந்தாங்கல் போய் வர விரும்பினார். அங்கே போய்த் திரும்புவத்ற்குள் மாலை ஆகி விட்டது.
கவர்னர் வரும்போது ரயில் கேட்டுகள்: மூடி இருந்தால் அவருடைய கார் நிற்கவேண்டி  இருக்கும் எண்ணி, எல்லா கேட்களையும்  திறந்து வைத்திருக்கும்படியும், அந்த வழியே செல்லும் ரயில்களை அங்கங்கே நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள்..
       அப்போது  நான் மாணவன். தாம்பரம் கிருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருருந்தேன்.  செங்கற்பட்டிற்குப் போவதற்கு தாம்பரத்தில்  மாலை ஆறு மணிக்கு ரயில் ஏறினேன்.  ரயிலும் புற்ப்பட்டது. நாலைந்து நிமிஷங்களுக்குப் பிறகு, அதாவது அரை பர்லாங்கு  தூரம் போனதும்  ரயிலை நிறுத்திவிட்டார்கள்.
கவர்னரின் கார் சென்ற பிறகுதான் கேட்  மூடப்படும். அப்புறம்தான் ரயில் போகும்” என்றார் ரயிலின் கார்ட்..வேறு வழியில்லாமல் காத்திருந்தோம். சுமார் இரண்டு மணி நேரம் கழிந்த பிறகு கவர்னரின் கார் லெவல் கிராசிங்கைக் கடந்து சென்றது.   அதன் பிறகு எங்கள் ரயில் கிளம்பியது..
காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் எங்கள் ரயில் செங்கற்பட்டுக்கே போய் சேர்ந்திருக்கும். அதாவது,  கவர்னர் வேடந்தாங்கலை விட்டு புறப்படுவதற்கு முன்பேயே  தாம்பரத்தில் இருந்த ரயிலை நிறுத்திவிட்டிருந்தார்கள்.
உடனே நாங்கள் ஒரு காரசாரமான் கடிதத்தை ஹிந்து பத்திரிகைக்கு எழுதத் தீர்மானித்தோம். ஒரு கடிதத்தைச் சூட்டோடு சூடாக எழுதி மறுநாள் தபாலில் அனுப்பிவிட்டோம்.  இரண்டு தினங்கள் கழித்து ஹிந்துவில் அது வெளியாயிற்று.
கவர்னர் ஸ்ரீ ஸ்ரீ பிரகாசா அதற்குள் பம்பாய்க்குப் போய் பதவியை ஏற்றுவிட்டார்.
 ஹிந்துவில் வந்த கடிதம் அவர் பார்வைக்குப் போயிருக்க வேண்டும், அவர் உடனே    தன் காரியதரிசி மூலம் ஹிந்துவிற்கு ஒரு கடிதம் எழுதினார். தன்னால் இததனை பேர் வீணாகக் காத்துக் கிடந்ததற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். “இனி எப்போதும் இதுமாதிரி எற்படாதபடி பார்த்துக் கொள்வேன்.” என்றும் எழுதி யிருந்தார்.
அவரது பெருந்தன்மை எங்களுக்குச்  சிலிர்ப்பூட்டியது!
.

4 comments:

  1. அப்போவே கடுகு துடுக்கு தானா?well done .அது மாதிரியான தலைவர்கள் ஹ்ம்ம்

    ReplyDelete
  2. Sir,
    Spicyness of kadugu came out even at that time !!!!!!!! Is it incresed after this or reduced ? Reply through another article...

    Kothamalli

    ReplyDelete
  3. முகமூடிApril 21, 2010 at 2:17 PM

    இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் அரிய ஜீவராசிகள் ஆகிவிட்டார்கள். இனி புத்தகங்களிலும், இல்லை யாராவது சொல்லக்கேட்டாலோதான் உண்டு.

    ReplyDelete
  4. இப்போதுதான் மன்மோகன் சிங்கும் இம்மாதிரி ஒரு நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்ததாகப் படித்த நினைவு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!