April 01, 2010

உதிரிப்பூ - துவளாதீர்கள்

 வெற்றியைக் கண்டு துள்ளினாலும் தவறில்லை. தோல்வியைக் கண்டு துவளக் கூடாது. அப்படித் துவண்டால் தோல்வி உங்களை வெற்றி கொண்டு விடும்.
    என் மிக நெருங்கிய  நண்பன் ராமசாமியின் கதையைக் கூறுகிறேன். நானும் அவனும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.
    அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு முன் பள்ளிக்கூடத்தில் "செலக் ஷன்' பரீட்சை என்று வைப்பார்கள். அதில் நல்ல மார்க் வாங்குகிறவர்களைத் தான் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுத அனுமதிப்பார்கள். நிறையப் பேர் வடிகட்டப்படுவார்கள்.
 பரீட்சையில் என் நண்பன்  பொதுவாக 100க்கும் மேற்பட்ட  மார்க்குகளை வாங்கக் கூடியவன். கணக்குப் பாடத்தில் கோட்டைவிட்டு விட்டான்.
    எல்லா மாணவர்களின் மார்க் லிஸ்ட்டையும் அவரவர்களிடம் ஹெட்மாஸ்டர் கொடுத்தார். ஆனால் ராமசாமியின் லிஸ்டைத் தரவில்லை. ராமசாமி செலக் ஷனில் நிறுத்தப்பட்டிருந்தான். அது தான் நோட்டீஸ் போர்டில் போட்டாயிற்றே. ஏன் மார்க்லிஸ்டைத் தரவில்லை.
    ஹெட்மாஸ்டர் சற்றுக் கிண்டலாக "கடைசியாக ராமசாமியின் மார்க்கைப் படிக்கிறேன். நமது பள்ளிக்கூட வரலாற்றில் ராமசாமி ஒரு சாதனை படைத்திருக்கிறான்.
அவன் கணக்கில் வாங்கியிருக்கிற மார்க் முழுதாக பூஜ்யம். கால், அரை என்று கூடப் போட முடியாதபடி அபாரமாக எழுதியிருக்கிறான்'' என்றார். எல்லா மாணவர்களும் சிரித்தார்கள்.
    ராமசாமி ஏதோ பிரச்னையால் வெறும் பேப்பரை மடித்து கொடுத்திருக்கிறான். நன்றாக மார்க் வாங்கக் கூடியவன் "ஏன் இப்படிச் செய்தான்?' என்று அனுதாபததுடன் அவனைத் தனியாகக் கூப்பிட்டு ஹெட்மாஸ்டர் விசாரித்திருக்க வேண்டும். ஆனால் அவனை அவமானப்படுத்திவிட்டார்.
    ராமசாமி "ஓ"வென்று அழுது விட்டான். அந்தச் சமயம் அவன் நெஞ்சில் ஒரு தீர்மானம் உருவாகி இருக்க வேண்டும்.
    நம்புங்கள். அடுத்த ஆண்டு அதே பாடத்தில் பள்ளி இறுதித் தேர்வில் வாங்கிய மார்க்  நூற்றுக்கு நூறு.
    பின்னால் பி.ஏ., எம்.ஏ., என்று பாஸ் செய்து, இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் சேர்ந்து மளமளவென்று உயர்ந்து குறைந்த வயதிலேயே தென்னிந்தியாவிற்கே மேலாளராக ஆனான்.  சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றான்.
    ஹெட்மாஸ்டரின் கேலி அவனைத் துவளச் செய்திருந்தால் அவன் வாழ்க்கையே பூஜ்யமாயிருக்கும்.

9 comments:

  1. அருமையான பதிவு. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. டேய் பயாலஜியில 150க்கு 20 மார்க் எடுத்துர்ரா அப்படினு எங்க வாத்தியர் கெஞ்சுனார்.. ( 50 மார்க் பிராக்டிகல்ல போட்ருவார்) நான் ஒன்னும் சொல்லலை.. ரிசல்ட் வந்தப்ப 175 எடுத்தேன் 200க்கு.. எங்க பயாலஜி அய்யா சந்தோஷமா பாராட்டினார்.. ஆனா வகுப்புல அவர் செஞ்ச நக்கலுக்கும், பிராக்டிகல் நோட்டுப் புத்தகங்களை கிழிச்சி அவமானப்படுத்தியதற்கும் நான் அவருக்குக் கொடுத்த தண்டனை 175 மார்க்..

    ReplyDelete
  2. Wow!

    Good example and good post

    http://www.virutcham.com

    ReplyDelete
  3. இந்த ஹெட்மாஸ்டர் மனோபாவம் நிறைய பெற்றோர்களிடமும் காணப்பட்டது / காணபடுகிறது. இதன் தாக்கமோ என்னவோ, இப்போதைய தலைமுறையை நிறையவே ஊக்கபடுத்துகிறார்கள் இந்தகால பெற்றோர்கள்.

    பதினோராம் வகுப்பில் நான் பெயிலான போது என் தந்தை என்னிடம் வந்து ஒரு பத்து ரூபாயை கொடுத்து "போனா போறது. சும்மா அதையே நினைச்சுகிட்டு இருக்காதே. வெளில போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வா!" என்றார். அதற்கப்புறமும், கல்லூரி விட்டு வெளியே வரும் வரையில் நான் பார்டர் மார்க்கில் தான் பாஸ் செய்தேன் என்பது வேறு விஷயம். ஆனால் அவர் கொடுத்த தன்னம்பிக்கை மிக பெரியது.

    அதை விட அதிகமான தன்னம்பிக்கையை என் பெண்ணிற்கு கொடுத்து வருகிறேன். அதனால் தானோ என்னவோ, "உம்மாச்சிக்கு தேங்க்ஸ் சொல்லுடி" என்றால், "அட போப்பா!, சிவனா வந்து பரிட்சை எழுதினார் - நான் தானே படிச்சு எழுதினேன்" என்கிறாள் இந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் ராட்சஷி.

    ReplyDelete
  4. <<<<< Kannan said...அவர் கொடுத்த தன்னம்பிக்கை மிக பெரியது......அதை விட அதிகமான தன்னம்பிக்கையை என் பெண்ணிற்கு கொடுத்து வருகிறேன். >>>>
    பாராட்டுகிறேன். உங்கள் தந்தை இதைவிட சிறந்த பாடத்தை உங்களுக்குச் சொல்லித் தந்திருக்க முடியாது!

    ReplyDelete
  5. <<< ஜெயக்குமார் said...அருமையான பதிவு. . நான் அவருக்குக் கொடுத்த தண்டனை 175 மார்க்..>>> பாராட்டுகள். மனதில் உறுதி வேண்டும் என்று சும்மாவா சொன்னார் பாரதி

    ReplyDelete
  6. Thiru Kadugu AvarkaLee, How to type New post in Tamil. here I searched but not seen anything. Please explain how to post my views in Tamil.I want to talk to you in phone. Kindly provide me your Phone Number and E mail Id please. Moreover the Hyperlink for your topics is given in right side pan only. To read new topics we have to scrool to the end each time. But you are providing new topics at the top. If you provide hyperlinks at the top regular readers will directly touch the new topics.
    RailRaja

    ReplyDelete
  7. <<<< railraja said... >>>>
    நிங்கள் பக்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.
    தமிழ் டைப் செய்ய: முதலில் www.azaghi.com போய் ‘அழகி’யை டவுன்லோட் செய்து கொள்ளூங்கள் அப்ங்கு எல்லா வழிமுறைகளையும் விள்க்கி இருக்கிறார்கள்.

    LINK பற்றி எழுதியது புரியவில்லை. எனக்கு BLOG வித்தை அதிகம் தெரியாது,
    உங்கள் e-mail ID எனக்கு இங்கு தெரிவியுங்கள்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!