July 17, 2010

நெஞ்சைத் தொட்ட பாடல்: GOD THE ARTIST

சில வருஷங்களுக்கு முன்பு பழையப் புத்தககடையில் ஒரு புத்தகத்தை வாங்கினேன். தலைப்பு:   Poems that touch the heart. (மனதைத் தொட்ட பாடல்கள்.).
ஏ.எல் அலெக்ஸாண்டர் என்பவர் தொகுத்தது.  அமெரிக்க ரேடியோவில் முப்பதுகளில் மனித நேய நிகழ்ச்சிகளை  நடத்தி மிகவும் பிரபலமடைந்தவர். மிகச் சிறந்த ரேடியோ நிகழ்ச்சியாளர் என்ற விருதை நியூ யார்க் மேயர் வழங்கி உள்ளார். இந்த 400 பக்கப் புத்தகம் 1941-லிருந்து 1963-க்குள் 31 பதிப்புகள்  வெளிவந்துள்ளது. அதிலிருந்து ஒரு பாடல்.

GOD THE ARTIST 
God, when you thought of the pine tree, 
    How did you think of a star?
God, when you patterned a bird song,
    Flung on silver string,
How did you know the ecstasy
    That crystal call would bring?
How did you think of a bubbling throat
     And a beautifully speckled wing?

God, when you fashioned a raindrop,
    How did you think of a stem
Bearing a lovely satin leaf
    To hold the tiny gem?
How did you know a million drops
     Would deck the morning's hem?
Why did you mate the moonlight night
     With the honey suckle vines?
How did you know Madeira bloom
     Distilled ecstatic wines?
How did you weave the velvet dusk
     Where tangled perfumes are?
God, when you thought of a pine tree
     How did you think of a star?

              -- Angela Morgan

கம்பன் ( பாடிய )  ரசித்த  ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே’ பாடல் நினைவுக்கு வருகிறதா?

Madeira is a fortified Portuguese wine  made in the Madeira islands.
 ----------------------
மதி அவர்களின் பின்னூட்டம்:  மூங்கில் இலை மேலே, கம்பன் பாடியது இல்லை என்று நினைக்கிறேன். கம்பர் ஒருநாள் வயல்வெளி வழியாகச் செல்லும்போது ஏற்றக்காரர் ஒருவர் ”மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே” என்று பாடியது கம்பர் காதில் விழுந்தது. அடுத்தவரியை நின்று கேட்க நேரமில்லை, சென்றுவிட்டார். ஆனால் அவரால் அன்று தூங்க இயலவில்லை. அடுத்தவரி என்னவாக இருக்கும் என்று யோசித்து, யோசித்து, அவரால் முடிவுக்கு வர இயலவில்லை. மறுநாள் அதே இடத்திற்கு சென்று ஏற்றக்காரர் வரும்வரை காத்திருந்தார். “மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே” என்று முடித்தபோது கமபர் ஆனந்தத்தில் துள்ளிகுத்தித்தார் என்று சொல்லக்கேள்வி.
மதி

மதி  அவர்களுக்கு நன்றி. திருத்தம் செய்து விட்டேன். கம்பனின் ’ஆழியான் ஆழி’ பாடல் ஞாபகத்தில் தவறாக  இதை எழுதி விட்டேன் - கடுகு

4 comments:

  1. கடவுளின் படைப்பைப் பார்த்து / நினைத்து வியக்காதோர் யார்! எழுதியவரும் சாதாரண ஆளில்லை - அவர் ஒரு தேவதை (Angel - a)! - R. Jagannathan

    ReplyDelete
  2. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே’ பாடல்’ கம்பன் எழுதியது தெரியாது. அது ஒரு சினிமாப் பாடல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் - அந்த முதல் வரி ராகத்தோடு இன்னும் காதில் ஒலிக்கிறது! - ஜெ.

    ReplyDelete
  3. மூங்கில் இலை மேலே, கம்பன் பாடியது இல்லை என்று நினைக்கிறேன். கம்பர் ஒருநாள் வயல்வெளி வழியாகச் செல்லும்போது ஏற்றக்காரர் ஒருவர் ”மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே” என்று பாடியது கம்பர் காதில் விழுந்தது. அடுத்தவரியை நின்று கேட்க நேரமில்லை, சென்றுவிட்டார். ஆனால் அவரால் அன்று தூங்க இயலவில்லை. அடுத்தவரி என்னவாக இருக்கும் என்று யோசித்து, யோசித்து, அவரால் முடிவுக்கு வர இயலவில்லை. மறுநாள் அதே இடத்திற்கு சென்று ஏற்றக்காரர் வரும்வரை காத்திருந்தார். “மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே” என்று முடித்தபோது கமபர் ஆனந்தத்தில் துள்ளிகுத்தித்தார் என்று சொல்லக்கேள்வி.
    மதி

    ReplyDelete
  4. மதி அவர்களுக்கு, மிக்க நன்றி

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!