July 21, 2010

புள்ளிகள்: எச். ஜி. வெல்ஸ்

என் தாய் வேலைக்காரி'

பல வருஷங்களுக்கு முன்பு படித்த தகவல். இந்த தகவலை எத்தனை பேரிடம் சொல்லி இருப்பேன் என்று எனக்கே தெரியாது.

பிரிட்டிஷ் எழுத்தாளர் எச். ஜி. வெல்ஸ் ஒரு பெரிய வீடு கட்டி முடித்திருந்தார். வீட்டைப் பார்க்க அவருடைய நண்பர் வந்திருந்தார். எல்லா அறைகளையும் சுற்றிக் காண்பித்தார். மாடியில் ஒரு சின்ன அறையைக் காட்டி, ``இதுதான் என் அறை'' என்றார் வெல்ஸ்.

``கீழே ஒரு பெரிய அறையைக் காட்டினாயே, அது உன் வீட்டுப் பணிப் பெண்ணுக்கு என்று சொன்னாயே... அந்த அறையை நீ உனக்கு வைத்துக் கொண்டு இந்த அறையை அவளுக்குக் கொடுத்து விடுவதற்கு என்ன? எல்லா வீடுகளிலும் பணிப் பெண்ணிற்கு சிறிய அறைதான் கொடுக்கிறார்கள்.'' என்றார் நண்பர்.

``ஆமாம். உண்மைதான்... அதனால்தான் நான் பெரிய அறையை பணிப்பெண்ணிற்குத் தருகிறேன். காரணம், என் அம்மா ஒரு பணிப் பெண்ணாக இருந்தவள்'' என்றார் வெல்ஸ்!

2 comments:

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!