July 14, 2010

கோளறு பதிகம்- 5 --வாள்வரி

பாடல் -5
வாள் வரி அதள தாடை வரிகோவ ணத்தார்
      மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவை யோடு கொலை யானை கேழல்
      கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரி அதளதாடை - வாளைப் போன்ற கூரிய வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன மேலாடையும் ( அதள் = தோல்)

வரிகோவணத்தர் - வரிகளையுடைய புலித்தோலால் ஆன இடை ஆடையும் அணிந்த சிவபெருமான்

மடவாள் தனோடும் உடனாய் - அன்பு மனையாளோடு சேர்ந்து

நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து - தாமரையும் வன்னிமலரும் கொன்றைமலரும் கங்கை நதியும் தன் திருமுடியின் மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - தானாக என் உள்ளம் புகுந்து அங்கே நிலைநின்றதால்

கோளரி உழுவையோடு - கொடுமையே வடிவான புலியும் ( உழுவை - புலி)

கொலை யானை - பயங்கரமான யானையும்

கேழல் - காட்டுப் பன்றியும்

கொடு நாகமோடு - கொடிய நாகமும்

கரடி - கரடியும்

ஆளரி - ஆளைக் கொல்லும் சிங்கமும்

நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அவை அடியார்களுக்கு மிக நல்லவைகளாக இருக்கும்

2 comments:

  1. Pramatham......Thank you sir.

    Kothamalli

    ReplyDelete
  2. Thank you so much. I like these posts so much!You are doing a good service for the tamil community

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!