May 31, 2010

ஒரு மேதைக்கு அஞ்சலி - கடுகு

சில தினங்களுக்கு முன்பு ஒரு எழுத்தாளர் காலமானார். அவர் என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவர். கதையோ நகைச்சுவையோ எழுதுபவர் அல்ல. அவர் எழுதிய பெரும்பாலான புத்தகங்கள் கணிதம் தொடர்பானவை. கணிதம் இவ்வளவு சுவையானதா என்று என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வியந்து ரசிக்கச் செய்தவர்.
அவர்: மார்ட்டின் கார்டனர்.
தனது 95-வது வயதில் சென்ற ஞாயிறு ( மே 22, 2010) அமெரிக்காவில் காலமானார்.
கார்டனர், 1956’ம் ஆண்டு “ சயண்டிஃபிக் அமெரிக்கன்’ என்ற பத்திரிகையில் 'மேதமேடிகல் ரிக்ரியேஷன்ஸ்' என்ற தலைப்பில் கணிதப் புதிர்களையும் கணிதம் தொடர்பான சுவையான தகவல்களையும் கட்டுரைகளக எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து 25 வருஷங்கள் எழுதினார்.
          நான் டில்லி் போன பிறகுதான் சயண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையை பார்க்க முடிந்தது. சென்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்தில் பழைய இதழ்கள் பைண்ட் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. எல்லாம் அரை அங்குல தூசியுடன் இருந்தன. எல்லாவற்றையும் படித்தேன். போட்டோ காபி வசதி இல்லாத கற்காலம் அது. ஆகவே எனக்குப் பிடித்தவற்றை நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்டேன். அவருடை தீவிர ரசிகனானேன்.
  அவர் எழுதியவை  எல்லாம் புத்தகங்களாக வெளியாகி லட்சக்கணக்கில் விற்பனை ஆகி வருகின்றன.  அவரது பல புத்தகங்களை வாங்கிப் படித்தேன்
புதிர் மன்னன் சாம் லாயிட், டூட்னீ போன்றவர்களைச் சாதாரண வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர். மார்ட்டின் கார்டனரின் கட்டுரைகளை படித்துதான் எனக்கு புதிர்களின் மீது தீவிர ஆர்வம் ஏற்பட்டது,  இது தொடர்பான பல அரிய புத்தகங்களை தேடி வாங்கிப் படித்து, நல்ல நாவலைப் படித்ததை விட அதிக திருப்தி அடைந்துள்ளேன்.

மார்ட்டின் பின்னால் தத்துவ கட்டுரைகளையும் எழுதினார். புத்தகங்களாகவே பல விஷயங்களை எழுதினார். 1938’ லிருந்து 95 அவர் எழுதியவைகளிலிருந்து மிகச் சிறந்தவற்றை தேர்ந்து எடுத்து ‘தி நைட் ஈஸ் லார்ஜ்” என்ற தலைப்பில் ஒரு தடிமனான புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார்கள். அதில் நமது வேதங்களைப் பற்றியும் எழுதி இருந்தார்.
*          *                *
 .  அவர் காலமாகி விட்டார் என்பதால் ஏற்பட்ட வருத்தத்துடன், அவரை  நேரே சந்திக்கத் தவறி விட்டோமே  என்ற கூடுதல் வருத்தமும் இப்போது எற்படுகிறது.
காரணம், அவர் அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லட் என்ற பகுதியில் 2002-ம்  ஆண்டு வரை வசித்து வந்தார் என்ற தகவல் எனக்கு முன்னமேயே  தெரியாமல் போனது என் துர்பாக்கியம்.  காரணம் 2001 மற்றும் 2002 ஆண்டுகளில் நான் சார்லட்டிற்கும் அந்த பகுதி வழியாகவும் பல தடவை போயிருக்கிறேன், அவர் அங்கு இருப்பது தெரிந்திருந்தால் எப்படியாவது சந்தித்துவிட்டு வந்திருப்பேன்,
           சார்லட்டில், மார்ட்டின் கார்டனரின் அபிமானிகள் - இதில் பல கணித வல்லுனர்களும் உண்டு -- 2000 ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் கூடுகிறார்கள். அந்த கூட்டத்திற்கு ஜி-ஃபார்-ஜி என்று   பெயர் வைத்திருக்கிறர்கள்.  ( G4G அதாவது GATHERING FOR GARDNER). அப்போது பல கட்டுரைகளைப் பலர் படிக்கிறார்கள். எல்லாம் கணிதம், மற்றும் கணிதப் புதிர்கள் தொடர்பானவைதான். இந்த வருஷம் மார்ச் மாதம், நடந்த கூட்டத்தின் பெயர் G4G9. கடைசி 9 , ஒன்பதாவது கூட்டம் என்பதை குறிக்கும்.)


 முதல் வருட கூட்டத்தில்  படிக்கப்பட்ட கட்டுரைகளை இண்டர்நெட்டில் போட்டிருந்தார்கள். அதை டவுன்லோட் செய்து அச்சடித்து வைத்திருக்கிறேன்.  மிகச் சிறந்த புத்தகம், ( இவை எல்லாம் என் சுயப் பிரதாபம் அல்ல. என்னைப் போன்ற சாதாரணமானவர்களையும் ஈர்த்த மார்ட்டின் கார்டனரின் பெருமையை விளக்கவே குறிப்பிட்டு உள்ளேன்.)
    ஒரு விஷயம். மார்ட்டின் கார்ட்னர் எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்பதை குத்து மதிப்பாகக்கூட சொல்லமுடியாது.  அவர் எழுதிய புத்தகங்களை மட்டும்  வைக்க அவருக்கு   ஆறு பெரிய ஷெல்ஃப்கள் தேவைப்பட்டன! 
      அவரைப் பற்றிய ஒரு குட்டித் தகவல். அவர் படித்துப் பட்டம் பெற்றது: பி.ஏ (தத்துவம்). கணிதத்தை அவராகவே படித்து தேர்ச்சி அடைந்திருக்கிறர்.
      அந்த அரிய அறிவாளியின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.

14 comments:

  1. இதுவரை அறியாத தகவல்கள். நன்றி சார்.

    ReplyDelete
  2. இதுவரை நான் கேள்விப்படாத ஒரு எழுத்தாளரைப் பற்றிய சுவையான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி! மார்ட்டின் கார்ட்னர் என்கிற பெயரைத் தலைகீழாகத் திருப்பினாலும் அதே மார்ட்டின் கார்ட்னர் என்று வருவது ஒரு சுவாரஸ்யம். இதே போல் Come on என்கிற வார்த்தையைத் தலைகீழாக்கினால் Go away என்கிற வார்த்தை கிடைக்கும்படியாகவும் ஒரு டோர்மேட்டில் பார்த்து ரசித்திருக்கிறேன். நிற்க. கோழியா, முட்டையா புதிரில் உள்ளது சேவல். அது கோழியாகவே இருந்தாலும், முதலில் வந்தது முட்டை அல்ல; கோழிதான்! முட்டை முதலில் வந்திருந்தால், அதை அடைகாக்க ஒரு கோழி தேவைப்பட்டிருக்குமே! :)

    ReplyDelete
  3. wnanRi. மார்ட்டின் கார்ட்னர் புத்தகங்களில் ஆயிரமாயிரம் சுவையான தகவல்கள், புதிர்கள் உள்ளன. சிலவற்றைப் பின்னால் போடலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

    ReplyDelete
  4. Thanks sir. Recently I read a book "The man who counted" which is a story with mathematical puzzles. If you get a chance, do read it.

    ReplyDelete
  5. Respected sir,
    I got aquainted with the work of Gardner through his classic- Fads and Fallacies in the name of Science.
    Its a fantastic book and feels quiet funny eventhough its a serious book.

    ReplyDelete
  6. உங்களுடைய கடைசி 3 கட்டுரைகளும் வழக்கமான நகைச்சுவை நடையிலிருந்து விலகி சீரியஸ் ஆக அமைந்தாலும், மிகச் சிறப்பாக இருக்கின்றன. பெறிய மனிதர்களை அறிமுகப்படுத்தி, அர்த்தமுள்ளதாக எழுதிய உங்களுக்கு மிக்க நன்றி. பின்னூட்டம் எழுதியவர்களும் இவற்றை சிறப்பித்து விட்டனர் - குறிப்பாக டோண்டு ராகவன் அவர்களுக்கும் நன்றி. - ஜகன்னாதன்

    ReplyDelete
  7. >>>> Jagannathan said...
    உங்களுடைய கடைசி 3 கட்டுரைகளும் வழக்கமான நகைச்சுவை நடையிலிருந்து விலகி சீரியஸ் ஆக அமைந்தாலும்<<<<,

    உண்மை. நம்ம கடையில் பாப்கார்னும் இருக்க வேண்டும்: பொறி விளாங்காயும் இருக்க வேண்டும். இது தான் என் கொள்கை.

    ReplyDelete
  8. மதிப்பிற்குரிய ------------------
    -------------- தொடர்ந்து எழுதுங்கள், ------
    அன்புடன்
    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  9. கடுகு....... said...
    >>>>>>>>> மதிப்பிற்குரிய ------------------
    -------------- தொடர்ந்து எழுதுங்கள், ------
    அன்புடன்
    திருமதி சுப்ரமணியம் >>>>>>>> வணக்கம். உங்கள் பின்னூட்டம் 30-40 வரிகளில் நீளமாக இருந்தது. அதை முழுமயாகப் போடாததற்குக் காரணம் அதில் நீங்கள் என்னைச் சற்று அதிகமாகவே பாராட்டி இருக்கிறீர்கள். போடுவதற்குக் கூச்சமாக இருக்கிறது. .. சில நாட்கள் கழித்துப் போடுகிறேன்.-- கடுகு

    ReplyDelete
  10. heartfelt thanks.

    ulamarntha nanri:

    ReplyDelete
  11. நெகிழ வைக்கும் அஞ்சலி. கார்ட்னரைப் பற்றிய இன்னொரு சிறந்த கட்டுரை சொல்வனத்தில் சேதுபதி அருணாசலம் எழுதியது:

    மார்ட்டின் கார்ட்னர் என்றொரு மாயப்புதிர்

    ReplyDelete
  12. சேதுபதி அருணாசலம் அவர்கள் எழுதிய கட்டுரை மிகவும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  13. <<<< NSR said...
    Thanks sir. Recently I read a book "The man who counted" which is a story with mathematical puzzles. If you get a chance, do read it. >>>
    Thank you at on. I found the book. I will be buying it soon.

    ReplyDelete
  14. Dear Agasthian Sir,

    Please find the ebook link for " The man who counted"
    http://arvindguptatoys.com/arvindgupta/count.pdf

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!