எழுத்துருக்களும் நானும் என்ற ஒரு பதிவில் திருப்புகழ் ஸ்வரப் புத்தகம் அச்சடிப்பதற்காக விசேஷ ஸ்வர எழுத்துரு செய்து கொடுத்ததாக எழுதி இருந்தேன். அது என்ன என்று சிலர் கேட்டிருந்தனர்.
ஸ்வர எழுத்துரு என்று எதுவுமே கிடையாது. இது நானே வைத்த பெயர்.
நமது கர்நாடக சங்கீத ஸ்வரப்புத்தகங்களில் வழக்கமாக நாம் உபயோகிக்காத - அல்லது தமிழிலேயே இல்லாத எழுத்துருக்கள் இருப்பதைப் பார்த்திருக்கக்கூடும். உதாரணத்திற்கு சில எழுத்துக்களை இங்குள்ள படத்தில் பாருங்கள்.
சில மெய் எழுத்துகளின் கீழே புள்ளி இருக்கும். ரி நி ரீ போன்ற சில எழுத்துகளின் மேல் கொக்கியுடன் ஒரு புள்ளியும் இருக்கும். இப்படி இரண்டு உயிரெழுத்துகளை ஒரே மெய்யெழுத்தின் மீது கணினியில் அச்சடிக்க முடியாது ஆகவே ஒரு உயிரெழுத்தை மட்டும் மெய்யெழுத்தின் மேல் டைப் செய்து பேப்பரில் பிரிண்ட் எடுத்து விட்டு பிறகு ஒரு ஆர்டிஸ்ட்டு பேனாவினால் புள்ளியோ, கோடோ. கொக்கியோ போட்டுக் கொடுப்பார். இப்படிப் போடப் படுபவை ஒரே சீராக இருக்காது. ஆகவே இம்மாதிரி எழுத்துகளை
எழுத்துருவிலேயே சேர்த்து நேரிடையாக டைப் செய்ய வகை செய்தேன். அப்படி நான் உருவாக்கிய முருகா எழுத்துருவைத்தான் (TM-MURUGA.TTF) படத்தில் காட்டியுள்ளேன். ஏதோ கர்நாடக ஸங்கீதத்திற்கு நான் செய்த சிறிய பணி,
பின் குறிப்பு. - ஸ்வர புத்தகங்கள் அச்சடிப்பவர்களுக்கு இந்த எழுத்துரு தேவை எனில் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். எழுத்துரு இலவசம்.
ஜீனியஸ் சார் .நீங்க
ReplyDelete<<< padma said...ஜீனியஸ் சார் .நீங்க >>>
ReplyDeleteஉங்களைப் பற்றி உசத்தியாக எண்ணி இருந்தேன். GENIUS என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவராக இருக்கிறீர்களே!!! :)
பத்மா சொன்னது போல நீங்கள் ஜீனியஸ் அல்ல!
ReplyDeleteசாதனை செய்த பிறகும் இவ்வளவு தன்னடக்கம் உள்ள நீங்கள் சூப்பர் ஜீனியஸ்
சேகர்
ரொம்ப உபயோகமான ஃபாண்ட். ஸ்வரப்புஸ்தகத்துல கூட சில தப்புக்கள் இருக்குன்னு சொல்லிட்டு வாத்தியார் திருத்துவார். ப்ரிண்டிங்குக்கும் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்.
ReplyDeleteநல்ல சேவை. வாழ்க!
நமஸ்காரங்கள்!
ReplyDeleteகடுகு அவர்களே: உங்களின் TM-MURUGA.TTF எழுத்துருவை எனக்கு அனுப்பமுடியுமா? நான் ஆங்கிலத்திலும், தமிழிலும் இப்படிப்பட்ட எழுத்துருவுக்காக தேடிக்கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஎன்னுடைய வலைமுகவரி: ashoksubra@gmail.com
நன்றி
அஷோக் சுப்ரமணியம்
dear அஷோக் சுப்ரமணியம் ,
ReplyDeleteI have sent the font to you now
ஸ்வர வரிசையில் ஒரு ப (பஞ்சமம்) தானே - அதற்கு ஏன் கீழே ஒரு புள்ளி காட்டியிருக்கிறீர்கள்?
ReplyDeleteகால பிரமாண குறியீடா?
<<< kggouthaman said...ஸ்வர வரிசையில் ஒரு ப (பஞ்சமம்) தானே - அதற்கு ஏன் கீழே ஒரு புள்ளி காட்டியிருக்கிறீர்கள்? கால பிரமாண குறியீடா? >>>
ReplyDeleteசங்கீதத்தில் நான் புலி இல்லை. (மக்குப்) புளி!
யாரோ கேட்டுக்கொண்டபடி செய்து கொடுத்தேன்.
அவ்வளவுதான்!
Dear Kadugu Sir
ReplyDeleteGreat font. Would it be possible for you to send the smae to my mail id (mcsekar@gmail.com)
Thank you very much.