May 01, 2010

லிஃப்கோ சர்மா

லிஃப்கோ புத்தக கம்பெனியின் ஸ்தாபகர் சர்மா தீவிர வைஷ்ணவர். லிட்டில் ஃப்ளவ்ர் கமபெனி ( லிஃப்கோ) துவக்கிய போது அவரது  பள்ளி முதல்வர் ஃபாதர் வெர்ஜரிடம் போய், அவரது ஆசிகளைக் கேட்டார். வெர்ஜர் தந்த பெயர்தான் லிஃப்கோ!

தினமணி கதிரில் அவரைப் பற்றி எழுதுவதற்காக அவரைப் பார்க்கச் சென்றேன். ( ஜூன் 1969). அவரைப் பேட்டி கண்டு ஒரு கட்டுரையை எழுதினேன். அது தினமணி கதிரில் வெளியாயிற்று
.
பிறகு சில வருஷ்ங்கள் கழித்து திரு சர்மா காலமானார். அவர்  காலமான சில நாட்கள் கழித்து லிஃப்கோவிலிருந்து எனக்கு ஒரு கவர் வந்தது. பிரித்துப் பார்த்தேன். ஒரு கடிதமும் செக்கும் இருந்தன. சர்மாவின் புதலவர் திரு வரதன் எழுதி இருந்தார்: “ எங்கள் தந்தையார் காலமாவதற்கு முன்பு ஒரு விரிவான உயிலை எழுதியிருந்தார். அதில் அவருக்கு உதவிய பலரைப் பற்றி நனறியுடன் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிய தொகையை அனுப்பும்படி எழுதியிருந்தார். . அதன்படி உங்களுக்கு இத்துடன் ஒரு செக் அனுப்புகிறேன்.”

என் பெயருக்கு முன்னால் ஒரு வரிசை எண் இருந்தது. 157 என்பது என் நினைவு. செக தொகை: ரூ.5. ( மிக குறைந்த  தொகை என்று உதட்டைப் பிதுக்காதீர்கள். எழுபதுகளில் 5 ரூபாய்க்கு ஒரு டாலர்!)

உயிலில் பெயர்களைக் குறிப்பிட்டதுடன் பணமும் ஒதுக்கி வைத்த லிஃப்கோ சர்மா அசாதாரண மனிதர்தான்!

7 comments:

  1. நீங்கள் ஒரு வாழும் பொக்கிஷம்! உங்களிடமிருந்து நீங்கள் சந்தித்த பெரியவர்களின் செயல்கள் பற்றி படிக்கும் போது மனது மகிழ்கிறது!

    ReplyDelete
  2. <<< snkm said... >>>>
    நீங்கள் சொல்வதை ஏற்றால் அது மன்னிக்கமுடியாத குற்றம்,,,
    என் பதிவு பிடித்து இருந்தால் லேசாக ஷொட்டு கொடுங்கள்.கொடுக்கவிடடாலும் ப்ரவாயில்லை.

    ReplyDelete
  3. சார்! லிப்கோ சர்மா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எத்தகைய மாமனிதர் என்பது உங்களின் இந்த வைரக்கல் போன்ற சிறு குறிப்பில் பளிச்சிட்டது!

    ReplyDelete
  4. நன்றி ரவி பிரகாஷ் அவர்களே,
    வைரக்கல் என்று குறிப்பட்டது சரியே. சம்பவங்கள் சின்னதாக இருப்பினும் அதில் வைரம் இருக்கக்கூடும். அவை நம்மை செதுக்கும். பண் படுத்தும்

    ReplyDelete
  5. Dear Sir,

    "நீங்கள் சொல்வதை ஏற்றால் அது மன்னிக்கமுடியாத குற்றம்,,,
    என் பதிவு பிடித்து இருந்தால் லேசாக ஷொட்டு கொடுங்கள்.கொடுக்கவிடடாலும் ப்ரவாயில்லை. "

    It shows your greatness... Keep it.
    this is only ஷொட்டு

    Regards
    Ranga

    ReplyDelete
  6. இப்படி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் நினைவில் வைத்து பாராட்டும் அவர் எத்துணை பெரிய மனிதர் ?அவரை மறக்காமல் இருக்கும் நீங்களும் தான்

    ReplyDelete
  7. லிப்கோ பெயரைக் கேட்கும்பொழுது நினைவிற்கு வருவது அவர்கள் வெளியிட்ட ஆங்கில - தமிழ் அகராதி. பள்ளி நாட்களில், ஆங்கிலம் கற்க ஆரம்பித்தவர்கள் எல்லோரும் விரும்பி, வாங்கி, உபயோகித்த புத்தகம். என்னுடைய உறவினர் ஒருவர் லிப்கோவில் மிக நீண்ட காலம் பணிபுரிந்தார்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!