May 01, 2010

டேவிட் வெல்ஸ்

 என் மேஜையின் மீது மூன்று  புத்தகங்கள் உள்ளன. டேவிட் வெல்ஸ் ( DAVID WELLS)   எழுதியவை, மூன்று புத்தகங்களும் கணிதம் சம்பந்தமானவை. மூன்றும் அற்புதமான புத்தகங்கள்.முதல் புத்தகம் எண்களைப் பற்றியது. புத்தகத்தின் பெயர்: சுவையான மற்றும் ஆச்சரியமான  எண்கள். 220 பக்கங்கள். அப்பப்பா, எத்தனை தகவல்கள். எல்லாம் சுவையானவை; மிகவும்  எளிமையானவை. கணக்கு என்று பயப்படாமல் படிக்கக்கூடியது.
இரண்டாவது புத்தகத்தின் பெயர்: சுவையான மற்றும் ஆச்சரியமான  கணிதம். கிட்டதட்ட 250 புத்தகங்களிலிருந்து சிறிது பெரிதுமாகக் கணிதம் பற்றிய பல பகுதிகளைத்  தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.. அந்தப் புத்தகங்களின் பட்டியலும் உள்ளன. 310 பக்க  புத்தகததைப் படிக்கும்போது மனதிற்குள் : ஐயோ.. இன்னும் 200 பக்கம்தான் இருக்கிறதா, இன்னும் 150 பக்கம்தான் இருக்கிறதா, இன்னும் 100 பக்கம் தான் இருக்கிறதா, என்று மனது அடித்துக் கொள்ளும். எல்லாம்.அவ்வளவு சுவையான விஷயஙகள். 250 புத்தகங்களை  அவர் படித்திருக்கவேண்டும்.
மூன்றவது புத்தகம்: சுவையான மற்றும் ஆச்சரியமான  கணிதப் புதிர்கள்,  375 பக்க புத்தகதில்  568 கணிதப் புதிர்கள் உள்ளன. ( சாம் லாயிட், மார்ட்டின் கார்ட்னர், எச்..ஈ,டூட்னி ஆகியவர்கள் எழுதிய புத்தகங்களில் உள்ள பல புதிர்கள் இதில் இருந்தாலும்  சுமார் 100 புதிய புதிர்களையும்  தந்துள்ளார்
வெல்ஸ் எழுதிய இன்னும் இரண்டு புத்தகங்களை வலைபோட்டுத்  தேடிக்கொண்டிருக்கிறேன்..
         இருங்கள். சுவையான தகவல் இனிமேல்தான் வரப் போகிறது. வெல்ஸ் பிரைமரி பள்ளி மற்றும்  செகண்டரி பள்ளியில் கணக்கு வாத்தியார்! ஆமாம். கணக்கு வாத்தியார்!.. நம்புங்கள்.
வெல்ஸ் கணிதப் பாடம் படிக்க கேம்பிரிட்ஜில் சேர்ந்தார். பரீட்சையில் தோல்வியுற்றார். அதற்குப் பிறகு அங்கே படிப்பைத்  தொடரவில்லை ( என்று நினைக்கிறேன்). கணக்கு வாத்தியாராகி விட்டார்!
இவரது புத்தகங்களை பிரசுரித்திருப்பது: பெங்குவின் நிறுவனம்!

பின்குறிப்பு:  பல அரிய கணிதத் தகவல்களும்.பாஸ்கரா, ஐன்ஸ்டீன். இயூலர், பால் எர்டோஸ், கலிலியோ,ஃபிப்பனொக்கி, ராமானுஜன்,  நியூட்டன்   போன்றவர்களைப் பற்றிய பல செய்திகள புத்தகங்களில் உள்ளன. அவைகளை. அவ்வப்போது போடப் பார்க்கிறேன். பயப்படாதீர்கள், அவை கணிதமாக இருக்காது. கதையாக இருக்கும்.

7 comments:

  1. இப்போது புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது! குழந்தைகளை புத்தகங்கள் படிக்க செய்தால்அவர்களின் செயல் திறன் அதிகமாகும்!

    ReplyDelete
  2. சார், நான் உங்கள் நீண்ட கால ரசிகன். ‘கேரக்டர்னு நான்தான் என்னமோ பிரமாதமா எழுதறேன்னு நினைச்சுட்டிருந்தேன்.என்னைவிடப் பிரமாதமா எழுதி என்னை மூக்குடைச்சுட்டார் கடுகு’ என்று திரு.சாவி அவர்கள் உங்களைப் பற்றி ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அதை நிரூபிக்கிறது உங்கள் பதிவு ஒவ்வொன்றும்!

    ReplyDelete
  3. ரவிபிரகாஷ் அவர்களுக்கு,
    சாவி என்றும் என் நன்றிக்கு உரியவர். அவர் எழுத்து மூலமாகவும் நிறையப் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவைகள் எதையும் போடமாட்டேன. காரணம் அவை என் மீதுள்ள அன்பு காரணமாக எழுதப்பட்டவை/ சொல்லப்பட்டவை.

    ReplyDelete
  4. இந்த புத்தகங்கள் எங்கு கிடைக்கும் சார்? Net - ல் தேடினால் வேறு ஏதோ டேவிட் வெல்ஸ் பற்றித்தான் வருகிறது.

    எஸ்.வி.ராகவன்

    ReplyDelete
  5. பழைய புத்தகங்களை தேட http://www.abebooks.com/
    என்ற தளத்திற்குச் சென்று தேடவும்.
    புத்தகத்தின் பெயரையும் சேர்த்துத் தேடவும்.
    Penguin Book of Curious and interesting Mathematics
    ----------------- Numbers
    ---------------- Puzzles.

    ReplyDelete
  6. <<< padma said... thanks for sharing sir>>
    இந்த பிளாக் துவக்கியதே எனக்குத் தெரிந்ததையும் தெரியாததையும் எழுதுவதற்காகத்தானே!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!