
இரண்டு பாகங்களாக வந்த அகராதியில் பல பதங்களுக்கு அர்த்தம் போட்டதுடன், பதங்களை நன்கு அறிந்துகொள்ள உதவிட, இலக்கியப் புத்தககங்களிலிருந்து வாசகங்களையும், பொன்மொழிகளையும் உதாரணமாகப் போட்டிருந்தார். ( இப்படிப் போடப்பட்ட உதாரணங்கள் மட்டும் ஒரு லட்சத்து பதினாலாயிரத்திற்கு மேல் என்கிறார்கள்!)
இந்த பணிக்காக நிதி உதவி கேட்டுப் பலரை அவர் அணுகினார். அந்த காலத்தில் பிரபல கல்விமானாகவும் அரசியில் செல்வாக்கு உடையவராகவும் இருந்த செஸ்டர்ஃபீல்lட் பிரபுவை அணுகினார். ஆனால் அவர் ஆர்வத்துடன் உதவ முன் வரவில்லை.
மிகுந்த பிரச்னக்குப் பிறகு அகராதி வெளிவந்தது.
அந்த சமயம் செஸ்டர்ஃபீல்ட் அதைப் பாராட்டி இரண்டு கட்டுரைகள் தானாகவே எழுதினார். தான் தந்த ஆதரவாலும் ஊக்கத்தாலும்தான் அகராதியை ஜான்சனால் உருவாக்க முடிந்தது என்கிற தொனியில் அந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தன. அதைப் படித்த ஜான்சனுக்கு மிகுந்த கோபம் வந்தது. செஸ்டர்ஃபீல்டுக்குச் சூடாகக் கடிதம் எழுதிவிட்டார்.