December 26, 2012

சாமுவேல் ஜான்சன் கொடுத்த மூக்குடைப்பு

  பிரபல ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் செய்த ஒப்பற்ற பணி: பிரம்மாண்டமான ஆங்கில அகராதியை கிட்டத்தட்ட தனி நபராகத் தயாரித்தது தான். அதுவும் சுமார் எட்டு வருஷ ின உழைப்பு. 1755'ம் ஆண்டு பிரசுரமானது. அதற்கு முன்பு ஒரு சில அகராதிகள் வந்திருந்தாலும் இத்தனை சிறப்பாக அவை இல்லை. அதனாலோ என்னவோ அடுத்த 150 வருஷத்திற்கு (ஆம், அடுத்த 150 வருஷத்திற்கு) வேறு ஆங்கில அகராதிகள் எதுவும் பிரசுரமாகவில்லை.)
இரண்டு பாகங்களாக வந்த அகராதியில் பல பதங்களுக்கு  அர்த்தம் போட்டதுடன், பதங்களை நன்கு அறிந்துகொள்ள உதவிட, இலக்கியப் புத்தககங்களிலிருந்து வாசகங்களையும், பொன்மொழிகளையும் உதாரணமாகப் போட்டிருந்தார். ( இப்படிப் போடப்பட்ட உதாரணங்கள் மட்டும் ஒரு லட்சத்து பதினாலாயிரத்திற்கு மேல் என்கிறார்கள்!)

இந்த பணிக்காக நிதி உதவி கேட்டுப் பலரை அவர் அணுகினார். அந்த காலத்தில் பிரபல  கல்விமானாகவும் அரசியில் செல்வாக்கு உடையவராகவும் இருந்த செஸ்டர்ஃபீல்lட் பிரபுவை அணுகினார். ஆனால் அவர் ஆர்வத்துடன் உதவ முன் வரவில்லை.
மிகுந்த பிரச்னக்குப் பிறகு அகராதி  வெளிவந்தது.
அந்த சமயம் செஸ்டர்ஃபீல்ட் அதைப் பாராட்டி இரண்டு கட்டுரைகள்  தானாகவே எழுதினார். தான்  தந்த ஆதரவாலும் ஊக்கத்தாலும்தான் அகராதியை  ஜான்சனால் உருவாக்க முடிந்தது என்கிற தொனியில் அந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தன. அதைப் படித்த ஜன்சனுக்கு மிகுந்த கோபம் வந்தது. செஸ்டர்ஃபீல்டுக்குச் சூடாகக் கடிதம் எழுதிவிட்டார். 

ஜான்சனின் மகத்தான விசிறியாக இருந்த பாஸ்வெல்,  அந்தக் கடிதத்தை தன்னிடம் தரும்படி கேட்டுக் கொண்டே இருந்தார்.  ஆனால் ஜான்சன் ரவே இல்லை. கடைசியாக 26 வருஷத்திற்குப் பிறகு  அந்தக் கடிதத்தின் வாசகத்தை தன் நினைவிலிருந்து டிக்டேட் செய்தார். பாஸ்வெல் அதை எழுதிக் கொண்டார்.  சில வருஷங்கள் கழித்து, அவர் எழுதிய கடிதத்தின் கார்பன் காபி   ிடத்ு. ைப் பாஸ்வெல்லிடம்  கொடுத்தார்.
சரி, இத்தன முன்னுரை எற்கு என்று கேட்கிறீர்களா? அந்தக் கடிதத்தின் இலக்கியத் தன்மைக்கே ஓஹோ போடலாம். இஅந்த மூக்குடைப்புக் கடிதத்தைப் பியங்கள்.

(7th February 1755)

To The Right Honourable   The Earl of Chesterfield.
 
My Lord,
I have been lately informed, by the proprietor of The World, that two papers, in which my Dictionary is recommended to the public, were written by your lordship. To be so distinguished is an honour which, being very little accustomed to favours from the great, I know not well how to receive, or in what terms to acknowledge.  

When, upon some slight encouragement, I first visited your lordship, I was overpowered, like the rest of mankind, by the enchantment of your address, and could not forbear to wish that I might boast myself Le vainqueur du vainqueur de la terre;—that I might obtain that regard for which I saw the world contending; but I found my attendance so little encouraged, that neither pride nor modesty would suffer me to continue it. 

When I had once addressed your Lordship in public, I had exhausted all the art of pleasing which a retired and uncourtly scholar can possess. I had done all that I could; and no man is well pleased to have his all neglected, be it ever so little.
Seven years, my lord, have now passed, since I waited in your outward rooms, or was repulsed from your door; during which time I have been pushing on my work through difficulties, of which it is useless to complain, and have brought it, at last, to the verge of publication, without one act of assistance, one word of encouragement, or one smile of favour. Such treatment I did not expect, for I never had a patron before.
The shepherd in Virgil grew at last acquainted with Love, and found him a native of the rocks.
Is not a patrons my lord, one who looks with unconcern on a man struggling for life in the water, and, when he has reached ground, encumbers him with help? The notice which you have been pleased to take of my labours, had it been early, had been kind; but it has been delayed till I am indifferent, and cannot enjoy it: till I am solitary, and cannot impart it;  till I am known, and do not want it. I hope it is no very cynical asperity not to confess obligations where no benefit has been received, or to be unwilling that the public should consider me as owing that to a patron, which providence has enabled me to do for myself.
Having carried on my work thus far with so little obligation to any favourer of learning, I shall not be disappointed though I should conclude it, if less be possible, with less; for I have been long wakened from that dream of hope, in which I once boasted myself with so much exultation,

My Lord,
Your lordship's most humble,
most obedient servant,


SAM. JOHNSON.
**********************
பரிதாபமான பின்குறிப்பு:
ஜான்சன் யாரிடமோ பணம் கடன் வாங்கி இருந்தார். அதை அவரால் குறித்த காலத்திற்குள் திருப்பித் தர முடியவில்லை. கடன் கொடுத்தவர் புகார் கொடுக்க,  இவர் கைது செய்யப்பட்டார்.
சாமுவேல் ரிச்சர்ட்சன் என்ற தன் நண்பருக்கு ஜான்சன் கடிதம் எழுதினாராம். அவர் பணம் கொடுத்து உதவினார். அது சரி கடன் தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 6 பவுண்ட்! (500 ரூபாய்!)

என் பின்னூட்டம்!
 இப்படித்தான் பலர், தங்கள் குடும்பம்தான் பாரதியாருக்கு உதவியது போல் சொல்வார்கள். எங்கள் தாத்தாதான், பேனாவுக்குப் போட பாரதியாருக்கு   இங்க் கொடுத்தார், பென்சில் சீவ பிளேடு கொடுத்தார் என்று சொல்வார்கள். பாரதியார் இருந்தபோது இப்படி அவர்கள் சொல்லி இருந்தால், ஜான்சனை விடப் பலமாகக்   குத்து விட்டிருப்பார் மகாகவி!

5 comments:

  1. அருமை. நன்றி.

    ReplyDelete
  2. அந்தக் காலத்திலும் 'பெரிய மனுஷர்கள்' இப்போது போலத்தான் இருந்திருக்கிறார்கள்! ஜான்சனின் கடிதத்தைப் படித்ததும் The Earl of Chesterfield நாக்கைப் பிடுங்கிக் கொண்டாரா இல்லை 'கை எச்சில் ஆகிவிடும்' என்று வாயை மூடிக்கொண்டிருந்தாரா! (ஜான்சனின் அந்தக் கால ஆங்கிலத்தைப் படிக்க மூச்சு வாங்கிவிட்டது!) - ஜெ .

    ReplyDelete
  3. எத்தனை அழகாய குத்தியிருக்கிறார் ஜான்சன். அருமை. சற்றே சிரமப்பட்டுத்தான் (ஆங்கில)க் கடிதத்தைப் புரிந்து கொண்டேன். பாரதியாக இருந்திருந்தால் இன்னும் ஆவேசமாக பொரிந்திருப்பார் என்பதே என் கருத்தும் ஸார்.

    ReplyDelete
  4. ரிஷப‌ன்ஜி வ‌லையிலிருந்து உங்க‌ளின் வ‌லைக்கு முத‌ன் முத‌லாய் வருகிறேன்.
    வாழைப் ப‌ழ‌த்தில் கோணி ஊசி ஏற்றி இருக்கிறார். SAM. JOHNSON ஆல் The Earl of Chesterfield ந‌ம்ம‌ளிட‌ம் அறிமுக‌மாகிறார்.
    கல்வியே, செல‌வத்தினும் நிர‌ந்த‌ர‌மான‌து, புக‌ழ்வாய்ந்த‌து என்ப‌த‌ற்கு இந்த‌ க‌டித‌ம் ஒரு சாட்சி.
    கற்றோருக்கு ப‌திவ‌ரிட‌மெல்லாம் சிற‌ப்பு.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!