கேலியும் நையாண்டியும் கலந்த கவிதைகள் ஆங்கிலத்தில் ஏராளமாக இருக்கின்றன.
தமிழில் இத்தகைய கவிதைகள் அதிகம் வரவில்லை. ஔவையார் சில எழுதியுள்ளார். காளமேகப் புலவர் நிறைய சிலேடைகளுடன் எழுதித் தள்ளி இருக்கிறார். இவையெல்லாம் அந்தக் காலத்தோடு நின்று விட்டது. இன்று கேலிப் பாடலோ, கார்ட்டூனோ, கட்டுரையோ எழுதினால் பாராட்டு கிடைகிறதோ இல்லையோ அர்ச்சனைகள் கிடைக்கும் அரச்சனை செய்ய நேராகவே வந்து விடுவார்கள்.
’கல்லைத்தான், மண்ணைத்தான்’ என்று இராமச்சந்திரக் கவிராயரர் இன்று பாடினால் ரேஷன் அமைச்சருக்குக் கோபம் வந்து விடும். அவர் மம்தாவாக ஆகி, நடவடிக்கை எடுக்கக்கூடும்
ஆங்கிலத்தில் இத்தகைய லிமெரிக்ஸ், க்ளாரிஹ்யூஸ், லைட் வெர்செஸ், என்ற வகைகளில் கவிதைகள் ஏராளமாக உள்ளன.
இந்தப் பதிவில் ஐந்து கவிதைகளைத் தருகிறேன். ஆஸ்திரேலியா, லண்டன், டில்லி , பாஸ்டன், சென்னை, டில்லி ஆகிய ஐந்து இடங்களிலிருந்து வருகின்றன அவை.
ஆஸ்திரேலியா
பீட்டர் போர்ட்டர் (1929-2010) என்ற ஆஸ்திரேலியக் கவிஞர் ஒருகவிதை எழுதினார்.
In Australia
Interalia
Mediocrities
Think they are Socrates!
இது clerihew வகைப்பாடல். இதைப் படித்துச் சிரித்து விட்டுப் போகவேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய அரசு, இதை பெரிய தேசத் துரோகமாகக் கருதி இருக்க வேண்டும். அதன் காரணமாக, ஒரு இலக்கிய முயற்சிக்கு பீட்டர் நிதி உதவி கேட்டபோது உதவி தர மறுத்து விட்டதாம். அதனாலோ என்னவோ பீட்டர் இங்கிலாந்திற்குக் குடி பெயர்ந்து விட்டார். அவர் மேலும் பிரபல மடைந்த பிறகு ஆஸ்திரேலியா புக் ரிவ்யூ ஒரு கவிதை போட்டி வைத்தது. அதற்கு ‘பீட்டர் போர்ட்டர் கவிதைப் போட்டி ‘ என்று பெயரிட்டுப் பரிகாரம் தேடிக் கொண்டது!இங்கிலாந்து
இங்கிலாந்தில் நடந்த கதையை கேளுங்கள். இது சார்லஸ் இரண்டாம் மன்னரைப் பற்றியது - இரண்டாம் சார்லஸ் (1630 - 1685) ஒரு நகைச்சுவைப் பிரியர். அவர் மீது ஒரு கேலிப் பாடலை எழுதி அவருடைய படுக்கை அறையின் கதவில் ஒட்டிவிட்டார் ஒருவர். (ஆமாம்..உண்மை!)
அந்தப் பாடல்:
We have a pretty witty King
Whose word no man relies on
He never said a foolish thing
Nor ever did a wise one!
இந்தப் பாடலைப் பார்த்த சார்லஸ் மிகவும் சிரித்தபடியே ரசித்தாராம். அப்போது அங்கு இருந்த தன் நண்பரிடம் அவர் சொன்னது : “ இந்தப் பாட்டில் எழுதியிருப்பது உண்மைதான். நான் முட்டாள் தனமாக எதுவும் சொல்வதில்லை. காரணம் அவை என் வாயிலிருந்து வருபவை. அதேமாதிரி நான் கெட்டிக்காரத்தனமான காரியம் எதுவும் செய்ததில்லை என்று கூறப்படுவதையும் ஏற்றுக்கொள்கிறேன். காரணம் நான் செய்யும் எல்லாக் காரியங்களும் எனக்காக என் அமைச்சர்கள் செய்கிறர்கள்!”. என்று கூறினாராம்.
இரண்டாம் சார்லஸின் ஒரு பொன் மொழி: நான் சொல்வதைப் புரிந்து கொள்பவர்களிடம் மேற்கொண்டு வார்த்தைகளுக்கு அவசியமில்லை. அப்படி அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், மேலும் வார்த்தைகளைக் கூறுவது பயனில்லை.
டில்லி
சரி, கொஞ்சம் சொந்தப் பெருமையைச் சொல்லாவிட்டால் எனக்கு தூக்கம் வராது. பார்க்கப்போனால் எனக்குத் துக்கம் வரும்! ( படிக்கும் உங்களுக்கு
தூக்கம், துக்கம் இரண்டும் வரலாம்! )
நான் பணியாற்றிக்கொண்டிருந்த விளம்பர நிறுவனத்தில் வருடாந்திர அலசல் கூட்டம் ஏதாவது ஐந்து நட்சத்திர ஓட்டலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தினமும் காலை 10.00 முதல் மாலை 6.00 வரை நடைபெறும். கடந்த ஒரு வருடத்தில் அலுவலகங்களில் நாங்கள் தயாரித்த விளம்பரங்களைப் பற்றியும் அதற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் விமரிசனங்கள் பற்றியும் வாதங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் காரசாரமாக நடைபெறும்.
கடைசி தினம் கூடுதலாக இரவு 8.00 மணிக்கு மேல் நிறைவு விழா நடக்கும். கோப்பைகள் நிறைந்து வழியும் ஆண்களும் பெண்களும் ஆடுவார்கள்; தள்ளாடுவார்கள். அதில் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். சிறந்த விளம்பரங்களைத் தயாரித்தக் குழுவினருக்கு நல்ல பரிசுகளும் விளம்பரங்களைச் சொதப்பியவர்களுக்கு கிண்டல் பரிசுகளும், கம்பனி சேர்மன் தருவார்.
இந்த விழாவில் நானும் ஏதாவது செய்யவேண்டும் என்று தீர்மானித்து, கிரியேட்டிவ் டைரக்டரிடம் எனக்கு பத்து நிமிடம் மைக் வேண்டும் என்று சொன்னேன். ”அதற்கென்ன ஜமாய்”என்று உற்சாகமாக ஒத்துக்கொண்டார். உடனை நாலைந்து நையாண்டிப் பாடல்களை எழுதினேன். அலுவலகத்தின் படே படே ஆசாமிகளின் பெயர்களையும், கவர்ச்சி ராணிகளின் பெயர்களையும் போட்டேன். கிரியேட்டிவ் டைரக்டரிடம் ஒரு பாட்டை மட்டும் தனியாகப் படித்துக்காட்டினேன். (அவர் பெயர் நிலாய் சென் ). அது அவரைப் பற்றிய கேலிப்பாடல். அதைக்கேட்டு அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ’புகுந்து விளையாடு’ என்று உற்சாகமாகச் சொன்னார்.
அன்று நான் படித்த கவிதை.
Our Creative Director Niloy Sen.
A great master of Brush and Pen,
Creates wonderful designs but then...
Only God knows when!
இன்னும் பல கவிதைகளைப் படித்தேன். பலரைக் காலை வாரி இருந்தேன்!
விசில் அடித்து ரசித்தார்கள்!
இதன் பலன் அடுத்து வந்த ஒவ்வொரு வருடாந்திர நிகழ்ச்சியிலும் என்னுடைய கலாட்டா கச்சேரி இடம் பெற்றுவிட்டது!
பாஸ்டன்
சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு சென்னைக் கல்லூரிகளைப் பற்றி ஒரு கேலிக் கவிதை இருந்தது. அதில் GENTELMEN OF LOYOLA., என்றெல்லாம் இருக்கும். வேறு சில கல்லூரிகளை பற்றி ’ஒரு மாதிரி’யான வர்ணனை (உ...ம்: ---------- OF PACHAIYAPPA) இருக்கும். (விவரங்களைக் கேட்காதீர்கள், ப்ளீஸ்!)
புகழ் பெற்ற ஹார்வர்ட் சர்வகலாசாலை இருப்பதாலோ என்னவோ பாஸ்டனில் இருப்பவர்களை பற்றியும் ஒருவிதமான அபிப்பிராயம் அந்தக் காலத்தில் இருந்திருக்கவேண்டும்.
வெகு நாட்களுக்கு முன்பு, நான் படித்த ஒரு கேலிக் கவிதையை இங்கு தருகிறேன்..
- "And this is good old Boston,
- The home of the bean and the cod,
- Where the Lowells talk only to Cabots,
- And the Cabots talk only to God!
- "Boston Toast"
- by Harvard alumnus John Collins Bossidy
ஐம்பதுவருஷத்திற்கு முன்பு ஆர். எஸ் மணி என்பவர் ஒரு நகைச்சுவைப் புத்தகத்தை எழுதினார். அதற்கு கல்கி அவர்கள் ஒரு முன்னுரை எழுதித் தந்தார். கிட்டத்தட்ட நகைச்சுவையைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி அற்புதமாக எழுதி இருந்தார். 32 பக்க முன்னுரை. (துரதிர்ஷ்டம், அந்த புத்தகத்தைப் பல வருஷங்களாகத் தேடிக்கொண்டே இருக்கிறேன். கிடைக்கவில்லை!)
அதில் மண்ணடியை பற்றி வந்த பாடலைத் தருகிறேன்.
மண்ணடியாம் மண்ணடி
அளந்து பார்த்தால் எட்டடி
இப்படி ஒரு வெட்டு, அப்படி ஒரு குத்து
ஆளு விழுந்தான் செத்து.
இது எப்படி இருக்கு!
பிற்சேர்க்கை (28 ஆகஸ்ட் 2012)
இரண்டு அதிசயமான COINCIDENCES பற்றி்க் கூறவேண்டும்.
26.8 12 அன்று கேலிக் கவிதைப் பதிவை வெளியிட்டேன். அதில் இடம் பெற்ற இரண்டு கேலிப் பாடல்களைப் பற்றிய தகவல் இது. அந்த பாடல்களில் ஒன்று, இரண்டாம் சார்லஸ் பற்றியது : மற்றொன்று மண்ணடியைப் பற்றியது.
நான் தற்சமயம் NIGEL REES தொகுத்த MARK MY WORDS என்ற 600 பக்க, பொன்மொழிகள் புத்தகத்தை வரி விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். 455 பக்கம் வரை வந்து விட்டேன். 27ம் தேதி 456-ம் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். அங்கு முதலில் கண்ணில் பட்டது : இரண்டாம் சார்லஸ் பற்றி பாடல்! இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த பாடலை எழுதியவர்: JOHN WILMOT, Earl of Rochester என்ற தகவலும் கிடைத்தது.
சிறிது நேரம் கழித்து இண்டர் நெட்டில் தினமலரைப் படிக்கப் போனேன். அதில் வந்திருந்த செய்தி: மண்ணடியில் கொலை!
படத்தைப் பார்க்க!
(எனக்கு ஞான திருஷ்டி இருக்கிறது என்று தோன்றுகிறது. தில்லு முல்லானந்தா என்று பெயரை மாற்றிகொண்டு ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டியதுதான்!)
பிற்சேர்க்கை (28 ஆகஸ்ட் 2012)
இரண்டு அதிசயமான COINCIDENCES பற்றி்க் கூறவேண்டும்.
26.8 12 அன்று கேலிக் கவிதைப் பதிவை வெளியிட்டேன். அதில் இடம் பெற்ற இரண்டு கேலிப் பாடல்களைப் பற்றிய தகவல் இது. அந்த பாடல்களில் ஒன்று, இரண்டாம் சார்லஸ் பற்றியது : மற்றொன்று மண்ணடியைப் பற்றியது.
நான் தற்சமயம் NIGEL REES தொகுத்த MARK MY WORDS என்ற 600 பக்க, பொன்மொழிகள் புத்தகத்தை வரி விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். 455 பக்கம் வரை வந்து விட்டேன். 27ம் தேதி 456-ம் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். அங்கு முதலில் கண்ணில் பட்டது : இரண்டாம் சார்லஸ் பற்றி பாடல்! இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த பாடலை எழுதியவர்: JOHN WILMOT, Earl of Rochester என்ற தகவலும் கிடைத்தது.
சிறிது நேரம் கழித்து இண்டர் நெட்டில் தினமலரைப் படிக்கப் போனேன். அதில் வந்திருந்த செய்தி: மண்ணடியில் கொலை!
படத்தைப் பார்க்க!
(எனக்கு ஞான திருஷ்டி இருக்கிறது என்று தோன்றுகிறது. தில்லு முல்லானந்தா என்று பெயரை மாற்றிகொண்டு ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டியதுதான்!)
//மண்ணடியாம் மண்ணடி
ReplyDeleteஅளந்து பாத்தால் எட்டடி
இப்படி வெட்டு, அப்படி ஒரு குத்து
ஆளு விழுந்தான் செத்து. //
அருமை. ஆங்கிலக் கவிதைகளும் ”பலே” சொல்ல வைத்தன.....
Sir,
ReplyDeleteI salute your memory power
------------------
Kadugu is great
At times grates
jokes in haste
Epitome of taste
Time - he never waste
Never underestimate
------------------
respectfully
Venkat
Mister Venkat is gent-intelli
ReplyDeletePraises my postings highli
Writes nice short verses
(Or are they con-verses?)
His hearty shorty comments
Are for me real ornaments.
- Kadugu
Sir,
DeleteYour reply made my day.
Thanks
Venkat
அறிந்து கொண்டேன்...
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
நிலாய் சென் பற்றிய கவிதை நல்ல நகைச்சுவை.
ReplyDeleteபரத் குமார்
இப்படியெல்லாம் நீங்களும் உங்கள் வாசகர்களும் ’கவித’ பாட ஆரம்பித்தால் நான் இங்கு என்ன செய்வது?
ReplyDelete‘நிலோய் சென்’ பற்றிய உங்கள் ஆங்கில clerihew (இந்த வார்த்தையே எனக்கு புதுசு) அபாரம்! மற்றவர்களைப் பற்றிய கவித- களையும் போடலாமே!
-ஜெ.
ReplyDelete(Or are they con-verses?) -
No, they are 'pro' verses!
-R. J.
(Or are they con-verses?)
ReplyDeletePro verses, converses?
Why not reverses!!!
boss.... pichu udhareenga.. gr8
ReplyDelete