ஒரு பவுண்டு சம்பளம்!
ஜான் - பால்
சில நாட்களுக்குமுன்பு ஒலிம்பிக் நிறைவு நாள் நிகழ்ச்சிகளை டிவி-யில் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பிரபல பீட்டில்ஸ் பாடகரான
காலம் செந்ற ஜான் லென்னன் பாடிய பாடலை ஒலிம்பிக் அரங்கில் ஒளிபரப்பியதைப் பார்த்தேன்.
துவக்க நாள் விழாவில் மற்றொரு பீட்டில் பாட்கர் பால் மெக்கார்ட்னி அரங்கத்திற்கு வந்து பாடினார்.
பீட்டில்ஸ்களைப் பற்றி பல செய்திகளை பல வருஷங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் அந்த காலத்தில் படித்திருக்கிறேன். முக்கியமாக அவர்களுடைய மானேஜர் ப்ரையன் எப்ஸ்டீனைப் (BRIAN EPSTEIN) பற்றியும் அவருடை சுய சரித்திரத்தையும் படித்திருக்கிறேன்.
பீட்டில்ஸ் இவ்வளவு பிரபலமானதற்குக் காரணம் அவர்தான் என்று கூறுவார்கள்.
( அந்த கால கட்டத்தில் STEIN-களைப் பற்றி ஒரு நையாண்டி பாடலும் பிரபலமாக இருந்தது. அதை இங்கு தருகிறேன்:
There’s a wonderful family named Stein.
There’s Gert and there’s Epp and there’s Ein;
Gert’s poems are bunk,
Epp’s statues are junk,
And no one can understand Ein.
---------------------------
Gert -Gertrude-Stein- Writer
Epp --Sir Jacob Ep-stein - Sculptor
Ein - Albert Ein- stein - Scientist)
--------------------
இனி இரண்டு குட்டித்தகவல்கள்:
1. பீட்டில்ஸுக்கு 1965-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு மிகப் பெரிய விருதுகளில் ஒன்றான M.B.E ( Most Excellent Order of the British Empire ) விருதை அளித்தது.
அப்போது பீட்டில்ஸ் கூறியது:
M.B.E என்பது
M-மிஸ்டர்
B-ப்ரையன்
E-எப்ஸ்டீ ன்தான்!
என்ன எளிமை!
2. ஒரு நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பால் மெக்கார்ட்னிக்கு , ஒலிம்பிக்கில் பாடுவதற்குத் தரப்பட்டத் தொகை ஒரே ஒரு பவுண்டு. கிட்டதட்ட 100 ரூபாய்தான்!
அவருக்கு மட்டுமல்ல கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற எல்லா பிரபலங்களுக்கும் ஒரு பவுண்டுதான்!
அறிந்தேன்... மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteபுதிய தகவல்கள். சுவாரஸ்யம்.
ReplyDeleteQUITE INTERESTING TO READ!
ReplyDeleteதிரு கடுகு அவர்களுக்கு, உங்களின் நீண்ட நாளைய விசிறி நான். எங்கள் வீட்டில் அம்மா, அக்கா, நான் எல்லோருமே உங்கள் 'கமலா, தொச்சு' கதைகளை விரும்பிப் படித்து சிரித்து மகிழ்ந்தது உண்டு.
ReplyDeleteஉங்கள் வலைப் பக்கம் நான் இன்று வந்தது என் பாக்கியம் என்று நினைக்கிறேன்.எனது வலைத்தளம் ranjaninarayanan.wordpress.com.
இணையம் மூலமாக உங்களை தொடர்பு கொண்டதில் மகிழ்ச்சி!
தொடர்ந்து உங்கள் படைப்புகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
அன்புடன்,
ரஞ்ஜனி
I recollect that CM Jayalalitha also took home 1 Re as salary last time. Don't know about this time! - R. J.
ReplyDeleteகலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற எல்லா பிரபலங்களுக்கும் ஒரு பவுண்டுதான்!
ReplyDeleteபாவம் என்ன கஷ்டமோ ஒலிம்பிக்ஸ் நடத்துறவங்களுக்கு