October 19, 2012

உன் டெய்லரைவிட என் டெய்லர் ஒஸ்தி-5

  கவர்களைப் பிரிக்க அழகான தந்தப்பட்டையை ஹாங்காங் கடைத்தெருவில் வாங்கினேன் முதல் கவரைப் பிரித்தபோதே அது உடைந்து விட்டது! வாங்கும்போது அதன் நடுவே கோடு மாதிரி ஒரு ரேகை ஓடுவதைப் பார்த்தேன். அது ஒரு அழகுக்காகச் செதுக்கியது என்று நினைத்துக்கொண்டேன்! ஆனால்  அது விரிசல்!
ஒரு டெய்லர் கடை பக்கமும் போகக்கூடாது என்று நினைத்த நான் ஏன் ஹோ-சாங் கடைக்கும் மட்டும் போக விரும்பினேன் என்று தெரியவில்லை.காரணம் தெரியாத சக்தி ஒன்று என்னை அங்கே இழுத்துச் சென்றது.
பழைய முகவரியில் கடை இல்லை. அந்தக் கடை நடக்கிறதா என்பதும் யாருக்கும் தெரியவில்லை. ஹென்றி-லும் (மானேஜர் என்று சொல்லிக் கொண்ட) அவனேதான் ஹோ சாங்-காக இருக்கும் என்று எனக்கு சந்தேகம்.
அவன்  என் செக்கை மாற்றிக் கொண்டு ஓய்வு பெற்று விட்டானோ அல்லது லி-மியுடன் கை கோத்துக் கொண்டு எங்கேயாவது உல்லாசபுரிக்குச் சென்று விட்டானோ என்று நினைத்தேன்.அந்த டெய்லரிங் கடை அங்கு இல்லாது போனதும் என் அதிர்ஷ்டம்தான். அது மட்டும் இருந்திருந்தால், என் விசிட்டிங்  கார்டை ஒரு பெரிய பாறாங்கல்லுடன் கட்டி, அந்தக் கடையின் கண்ணாடி  ஜன்னல் மீது பயங்கரமாக வீசிவிட்டு வந்திருப்பேன். அப்படி செய்திருந்தால் இப்போது சிறை டயரி எழுதி கொண்டிருப்பேன்.

அளவு எடுத்து சூட் தைத்துக் கொள்வதை நான் எப்போதோ விட்டு விட்டேன். அதே சமயம் ரெடிமேட் சூட் வாங்கினாலும் எனக்குப் பிரச்னை இருந்தது. பிரமாதமாகத் தைத்த சூட்கள்கூட என்னுடைய ஏறுமாறான தோள்களில்  சரியாக உட்காருவதில்லை. சரியான அசமந்த ஆசாமியாக அதில் காட்சி அளிப்பது போல் இருக்கும். சாதாரணமாக இரண்டு ‘பேட்’கள் வைத்த கோட்டை போட்டுக் கொள்ளும்போது  நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் கொண்டவனாகக் காட்சி அளிப்பேன்.

சூட் வாங்குவதை உண்மையில் கடினமான வேலையாக்குவது - அதை வாங்குவதற்கான பணத்தைச் சேமிப்பது தவிர! - முப்புறமும் கண்ணாடி சூழ்ந்த அறையில் சூட்டைப் போட்டு சரி பார்க்கும்போது என்னையே நான் பார்த்துக் கொள்வதுதான். எத்தனையோ முறை என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்திருக்கிறேன் என்றாலும் என் முதுகுப் புறம், பக்க வாட்டு, பின்புறம்,  என்று நான் பார்த்தில்லை. அப்படிப் பார்க்கும்போது எனக்கு லேசான ஷாக் அடிக்கும்.
சூட் தைத்துக் கொள்வதெல்லாம் இப்போதுகுறைந்து போய் விட்டதால் நான் எந்த மாதிரி காட்சி அளிக்கிறேன் என்பதே மறந்து போய் விட்டது,
அதை எதற்கு  மறுபடியும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் - வேறு  எதுவும் நான் செய்ய முடியாதபோது!


கண்ணாடி அறை வைப்பவர்கள் ஒயின் பார்காரர்களிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ளவேண்டு மிக குறைவான வெளிச்சமே அங்கு இருக்க வேண்டும். 
எதை உங்களால் பார்க்க முடியாதோ அது உங்களுக்கு  ஒரு கெடுதலையும் செய்யாது.
********************

என் குறிப்பு 1:
இந்த கட்டுரையை எழுதியவர் Richard Armour என்ற நகைச்சுவையாளர்.
ஆர்மர் எழுதிய  OUT OF MIND  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் இந்த ஹாங்காங் டெய்லர் கட்டுரை.  தமிழ் மொழிபெயர்ப்பு சுமார்தான் என்று என் மனசாட்சி  சொல்லவில்லை. காரணம், அதை அடகு வைத்து ரொம்ப நாளாயிற்று.

ரிச்சர்ட் ஆர்மர் : 65 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 5000க்கு மேல் நகைச்சுவைக் குட்டிக் கவிதைகளை எழுதி இருக்கிறர்.


அவர் எழுதிய   LIGHT ARMOUR  புத்தகத்தைத் தேடிப்படிக்க  நான் 1967’ம் ஆண்டு அலைந்த பாடு எனக்குத்தான் தெரியும். பின்னால் அதிர்ஷ்டவசமாக அமெரிக்கா செல்ல வாய்ப்புகள் வந்தன.   அந்த சமயங்களில் கல்லூரி புத்தகசாலைகளிலும் பொது நூலகங்களிலும் அவர் எழுதிய பல புத்தகங்களைத் தேடிப் படித்தேன்.

OUR PRESIDENTS, SPOUSE IN THE HOUSE, For partly proud parents: light verse about children, The Medical Muse, Armoury of Light verse  ஆகிய புத்தகங்களை அப்படியே முழுதுமாக என் நோட்டில் எழுதி வைத்துக் கொண்டேன்.


அவர் எழுதிய சில புத்தகங்கள்: (எல்லாம் லட்டுகள்!)

It All Started with Columbus (1955)
It All Started with Europa (1955)
It All Started with Eve (1956)
It All Started with Marx (1956)
Twisted Tales from Shakespeare (1957)
Drug Store Days: My Youth Among the Pills & Potions (1959, memoir)
A Safari into Satire (1961)
Armour's Almanac (1962)
The Classics Reclassified (1963)
The Medical Muse (1963)
It All Started with Hippocrates: A Mercifully Brief History of Medicine (1966)
Going Around in Academic Circles: A Low View of Higher Education (1966)
It All Started with Stones and Clubs (1967)
My Life with Women: Confessions of a Domesticated Male (1968, memoir)
A Diabolical Dictionary of Education (1969)
Punctured Poems (1969)
English Lit Relit (1970)
AmericanLit Relit (1970)
A Short History of Sex (1970)
All in Sport (1972)
Going Like Sixty (1974)
The Academic Bestiary (1974)
Punctured Poems: Famous First and Infamous Second Lines (1982)
Our Presidents (1983)


இரண்டு  சாம்பிள் பாடல்கள்:
Well, Come In
 You can have your Welcome mats.
I ask for just a little more
When I come home from work, and that’s
A Welcome mate inside my door.அவரை பற்றி கூடுதல் தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Richard_Armour

ஒரு சமயம் கமல்ஹாசன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ரிச்சர்ட் ஆர்மர் பற்றியும் அவர் எழுதிய எழுதிய   IT ALL STARTED WITH EVE புத்தகம் பற்றியும் பேச்சு வந்தது.  


”ஆ,அந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கிறதா? என்று ஆர்வமாகக் கேட்டார்.
“இருக்கிறது. தருகிறேன்” என்றேன். மறு நாள் அவரிடம் கொடுத்தேன். 


 என் குறிப்பு 2: சோகமான விஷயம். இந்தக் கட்டுரையை எழுதியது யார் என்று ஒருத்தர் கூட சரியான விடையை எழுதவில்லை.

என் குறிப்பு 3:  'கடுகு தாளிப்பு' வில் இனி சில சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளை/ அல்லது சில பாராக்களைப்  அப்படியே எடுத்துப் போடலாம் என்று இருக்கிறேன்.

9 comments:

 1. /// Well, Come In
  You can have your Welcome mats.
  I ask for just a little more
  When I come home from work, and that’s
  A Welcome mate inside my door. ///

  புரியவில்லை! (சத்தியமாக!) கொஞ்சம் இதில் உள்ள நகைச்சுவையை விளக்க முடியுமா?

  அனானிமஸ்

  ReplyDelete
 2. அனானிமஸ் அவர்களுக்கு,
  என் விளக்கம்:
  “வீட்டு வாயிற்படியில் WELCOME என்று எழுதப்பட்ட மிதியடிகளைப் (MAT) போடுவது இருக்கட்டும். வீட்டில் மனைவி (MATE ) இருப்பதுதான் நான் விரும்புவது”. --- மணா

  ReplyDelete
 3. இரண்டாவதாக வரும் MATE-ஐயும் அவசரத்தில் MAT- என்றே முதலில் படித்துக் கமெண்டும் போட்டுவிட்டேன்! பிறகு சரியாகப் படித்துவிட்டேன். அதற்குள் கமெண்ட் வந்துவிட்டது!

  Anonymous

  ReplyDelete

 4. மணாவிற்கு நன்றி - கடுகு

  ReplyDelete
 5. அன்பு கூர்ந்து அனானிமஸ் என்று போடுவதைத் தவிர்க்கவும். ஏதாவது புனைபெயரை வைத்துக் கொள்ளுங்கள்.- கடுகு

  ReplyDelete
 6. God, How on earth you found time to do so many things in these 80 years! I may need 3 or 4 births for this. It is clear that you have been a voracious reader all your life, had the penchant to pick up the right writers, had the patience to note / register them and finally remember them so sharply to share with your readers after many many years. Salutations and grateful thanks to you for allowing us an opportunity to know such names and to sample their writings. Your translation seemed as if it is the original. - R. J.

  ReplyDelete
 7. To Mr R J: Thanks for your comments. Please do not embarrass me .
  You are right.. I, by the grace of god stumbled upon right writers and right books and right interests.
  I will work with renewed eenrgy.
  -Kadugu

  ReplyDelete
 8. I didn't mean to flatter or embarrass you; it was how and what I felt immediately on reading the blog. Thanks again, Sir, - R. J.

  ReplyDelete
 9. ஹாங்காங் சென்று எடுத்த கோட் சரியில்லாவிட்டாலும் அருமையான் கட்டுரை கிடைத்ததே !!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :