November 30, 2010

ஒரிஜினல் எந்திரன்

பல வருஷங்களுக்கு முன்பேயே எந்திரனை உருவாகியவன் நான்.  என்ன, அதற்கு அப்போது அதற்கு நான் வைத்த பெயர் இயந்திரசாமி! இயந்திரசாமி ஜோக் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாயிற்று. அதன் ரசிகர்களில் ஒருவர் : “சோ” என்பது ஒரு விசேஷம். அவரும் ஒரு இயந்திரசாமி ஜோக் அனுப்பி இருந்தார். முதலில் என் ஜோக்குகளைப் பார்த்து வாருங்கள்.  கடைசியில் அவருடைய ஜோக்கைப் போடுகிறேன்.

6 comments:

  1. அடேடே எந்திரசாமி உங்களது படைப்பா? அக்காலங்களில் கண்டு களித்திருக்கிறேன்.

    பை தி வே கிங்கிணி சங்கிணி ஜோடியும் உங்களுடையதுதானா?

    அழுக்கு பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளர் ஏகாம்பரம் உங்கள் க்ரியேஷன் என்றுதான் நினைக்கிறேன், சரிதானே?

    மற்றப்படி தினமணி கதிர் நான் அதிகம் படித்ததில்லை. அக்காலகட்டத்தில் எழுத்தாளர் சாவி எம்.ஜி.ஆர். மேல் வெறுப்புடன் தாக்கினார்.

    அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த அந்த மன வேற்றுமை பற்றி நான் இட்ட பதிவு இதோ: http://dondu.blogspot.com/2006/06/blog-post_25.html

    {ஏற்கனவேயே நான் அச்சுட்டியை வேறு தருணத்தில் தந்திருந்தால் மன்னித்து விடவும்}.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. டோண்டு ராகவன் அவர்களுக்கு: கிங்கிணி சங்கிணி என் தயாரிப்பு அல்ல.

    ReplyDelete
  3. டோண்டு அவர்கள் எழுதியுள்ளார் "அடேடே எந்திரசாமி உங்களது படைப்பா? அக்காலங்களில் கண்டு களித்திருக்கிறேன்."

    என்ன டோண்டு சார்,
    என்ன "அக்காலங்களில்" என்று எழுதி விட்டீர்கள்? "சமீபத்தில்" என்று எழுதுவதுதானே உங்கள் ட்ரேட் மார்க்?

    ReplyDelete
  4. சூர்யா அவர்களுக்கு: டோண்டு அவர்களுடைய அகராதியின்படி, ‘சமீபத்தில்’ என்றால் இந்த நூற்றாண்டு, ’அந்த காலத்தில்’ என்றால் சென்ற நூற்றாண்டு என்று பொருளோ என்னவோ!:)

    ReplyDelete
  5. சோவின் இயந்திரசாமி ஜோக் எங்கே?

    ReplyDelete
  6. சுந்தர் அவர்களே: சோவின் ஜோக் பின்னால் வரும். நாளை வரும் பலாக்காயைவிட இன்று வரும் களாக்காய் மேல் என்ற பழமொழியை நினவுபடுத்துகிறேன்..ஹி..ஹி...

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!