November 25, 2010

ஆவியும் நானும் - ஆச்சரியமான பின்னூட்டம்!

’ ஆவியும் நானும்’ என்ற பதிவைப் பார்த்து விட்டு, திரு ஸ்ரீராம் (Rochester, New York)  நீண்ட பின்னூட்டம் போட்டிருந்தார். அது நீண்டதாகவும் அதே சமயம் ஆச்சரியமான தகவல் கொண்ட பின்னூட்டமாகவும் இருந்தது. ஆகவே அதைப் பதிவாகவே இங்கு போடுகிறேன்,
==============
உங்கள் ஆவியும் நானும் பதிவைப் பார்த்தேன். ரசித்தேன்; அதே சமயம் வியந்தேன்.காரணம் அதில் விவரித்த பல நிகழ்ச்சிகள் எங்கள் குடும்பத்திலும் அச்சு அசலாக நிகழ்ந்தன. உங்கள் ஆவி உலக ஆராய்ச்சி 1950 வாக்கில் என்றால்  எங்கள் வீட்டில் நடந்தவை சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தவை.
மீடியம் என் சொந்த  சகோதரி. 12 வயதிலிருந்து 14 வயது வரை மீடியமாக இருந்தாள். பிறகு என் பேற்றோர்  அவளை ஊக்கப்படுத்தவில்லை. மீடியமாக இருப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள்.
விவரமாகக் கூறுகிறேன்.என் தந்தையின் சின்ன தம்பி, சுமார் 24 வயதில் ஒரு விபத்தில் காலமானார், எங்கள் குடும்பத்திற்கு  மிகப்பெரிய அதிர்ச்சி; சோகம்.
அந்த சமயத்தில் பிளான்சட் ஜோதிட மோகம பரவி இருந்தது, என் பாட்டிக்குத் தன் மகனுடன் மீடியம் மூலமாகப் பேசவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. என் ச்கோதரியை மீடிமாக இருக்கச் சொன்னார்கள். அவளுக்கு ஒன்றும் தெரியாத வயது, பிளான்செட் போர்ட் தயார் பண்ணி அவளை உட்கார வைத்தார்கள். எல்லாரும் மௌனமாகப் பிரார்த்தனை செய்தார்கள். அவளுடைய  கை மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒவ்வொரு ஆங்கில எழுத்தாகக் காண்பித்தது. என் சித்தப்பாவின் ஆவி தான் என்பதை பல கேள்வி- பதில் மூலம் உறுதி படுத்திக் கொண்டோம். எங்கள் மூதாதையர் பற்றி பாட்டி விசாரித்தாள். என் சகோதரி கொடுத்த பதில்கள் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தன. அவளுக்கு தெரிய வாய்ப்பே இல்லாத விவரங்களையெல்லாம் சரியாகச் சொன்னாள்.
போர்டில் எழுத்துகளைக் காட்டி கொண்டிருந்தவள் சில நாட்கள் கழித்து பேப்பர். பேனா கேட்டாள். அதில் அவள் எழுத ஆரம்பித்தாள் ” என் பிள்ளை --------தான் பேசறான். இந்த சின்னப் பொண் பிறக்கிறதுக்கு முன்னே நடந்த விஷயங்கள். எல்லாம் சரியாக இருக்கிறது,” என்று என் பாட்டி உத்திரவாதமாகச் சொன்னாள்
இப்படி அவள் நாள்தோறும் மீடியமாக இருப்பது, அவளுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம் என் அப்பாவிற்கு வந்ததால், இந்த ஆவி உலக தொடர்பு முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கச் சொல்லிவிட்டார்,  பேத்திக்காக பாட்டியும் அதை நிறுத்தி விட்டாள்.
என் சகோதரி சொன்ன பல விஷயங்கள் நூறு சத விகிதம் உண்மை. அவளால் எப்படிச் சொல்ல முடிந்தது என்று தெரியவில்லை. அவளாலும் விளக்க முடியவில்லை.
ஆவிகள் நாலு நிலைகளில் இருப்பதாக அவளும் சொன்னாள். உங்கள் ஆராய்ச்சியிலும் அது மாதிரி தகவல் வந்திருப்பதைக் கவனித்தேன் துரதிர்ஷ்டம, உங்கள் ஆராய்ச்சியை நீங்கள் தொடர முடியாமல் போனது,
முற்பிறவியை உணர்ந்த ஒரு பெண்மணியைப் பற்றி உங்கள் “ அன்புள்ள டில்லி” யில் எழுதி இருந்தீர்கள். அவரை பற்றிய கட்டுரையைப் பதிவாகப் போடுங்கள். பீட்டர் ஹர்க்காஸ் கட்டுரையையும் போட்டால் நல்லது.
 - ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன், ராச்செஸ்டர் (நியூயார்க்)

2 comments:

  1. அட, ஆச்சரியமா இருக்கே!- டில்லி பல்லி

    ReplyDelete
  2. ஆச்சரியமான தகவல்கள் அய்யா. கீழ்கண்ட வலைப்பூவில் ஆதாரங்களுடன் ஆவிகள்/முற்பிறவி, மறுஜென்மம் பற்றிய கட்டுரைகள் உள்ளன. அதுவும் ஜஸ்டிஸ் கிருஷ்ண அய்யரின் அனுபவம் வியப்பைத் தருகிறது. இயாண் ஸ்டீவன்சனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீஇர்களா? தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எழுதவும். நன்றி

    - ரமேஷ்

    சுட்டி

    http://ramanans.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%C2%A9/

    http://ramanans.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!