`திருக்குறள் எழுதியது நான்' என்ற தலைப்பைப் பார்த்ததும் `ரீல்' என்று எண்ணி விடாதீர்கள். விவரமாகச் சொல்கிறேன்.
டில்லியில் வள்ளுவர் கழகம் என்ற அமைப்பை நாங்கள் சிலர் உருவாக்கினோம். அமைச்சராக இருந்த க.ராசாராம் அதன் தலைவர். அவர் முயற்சியில் டில்லியில் வள்ளுவர் சிலை வைக்கப்பட்டது.
அந்தச் சிலையின் பீடத்தில் திருக்குறளை செதுக்கி வைக்க விரும்பினோம். சென்னையிலிருந்து செய்து கொண்டுவர நேரம் இல்லை. ஒரே இரவில் முடித்தாக வேண்டிய கட்டாயம். ஆகவே டில்லியில் உள்ளவர்களைப் பிடித்து இதைச் செய்ய முடிவு செய்தோம்.
அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதால் பீடத்தின் ஒரு பக்கத்தின் அளவுக்குப் பேப்பரில் குறளை எழுதித்தர முடிவெடுத்தோம்.எனக்கு ஓரளவு லெட்டரிங் தெரியும் என்பதால் எனக்கு இந்த வேலை தரப்பட்டது. அவ்வளவு பெரிய அளவில் எழுதிப் பழக்கம் இல்லாததால் எனக்கு உதவி செய்தவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைமை இன்ஜினியர்! பேப்பரில் கோடுகள் போட்டு, எழுத்தின் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் விவரமாகச் சொன்னார். அதன்படி நான் எழுதிக் கொடுத்தேன்
நான் பெரிய காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை கிரானைட் கல்லின் மீது ஒட்டி வைத்து, அதன் மேலேயே பொளிந்தார்கள். எல்லோரும் தமிழ் தெரியாதவர்கள். ஆகவே கூடவே இருந்து தவறு வராதபடி பார்த்துக் கொண்டு இருந்தேன்.
டில்லி சென்றால், டில்லி தமிழ்ச் சங்கத்தின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய திருவள்ளுவர் சிலையின் பீடத்தைப் பாருங்கள். சிலையின் பீடத்தில் சில திருக்குறள்கள் செதுக்கப்பட்டிருக்கும். என் கையெழுத்தில்!
.
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய தகவல் இது.
கொடுத்து வைத்தவர் நீங்கள்.
அன்புடன்
திருமதி சுப்ரமணியம்
வாராது வந்த ஒரு வாய்ப்பு.
ReplyDeleteஜெ.பாபு
கோவை
திருவள்ளுவர் சுவடியில்தான் எழுதியிருப்பார், நீங்களோ கல்லில் வடித்துவிட்டீர்கள்! - ஜெ.
ReplyDeleteWow!
ReplyDeleteMama you did not tell me this when I was in Delhi!!!!!!I would have taken a picture & kept it as a souvenir.
ReplyDeleteMeera kondu
Meera kondu said... அவர்களுக்கு,
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.