November 11, 2010
புள்ளிகள்” சாவி
ஒரு சமயம் சாவி அவர்கள் டில்லியில் என் வீட்டிற்கு வந்திருந்தார். ``சும்மா உங்களுடன் ஒரு வாரம் இருப்பதற்காகவும் உங்களுடன் பேசி என்னை `சார்ஜ்' பண்ணிக் கொள்வதற்காகவும் வந்தேன்'' என்றார்.
ஒரு வாரம் ஒரே அரட்டை. ஊருக்குக் கிளம்புகிற சமயம் அவரிடம் ஒரு பிளாஸ்டிக் பாயைக் காண்பித்தேன். அப்போதுதான் அத்தகைய பாய்கள் டில்லிக்கு வந்திருந்தன. ``ஆஹா... டிசைன் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கிறது'' என்று என்னிடம் பேசியபடியே பாயை நிதானமாகச் சுருட்ட ஆரம்பித்தார்.
``அகப்பட்டதைச் சுருட்டறது என்பது இதுதான். நல்ல பொருளைப் பார்த்தால் சுருட்டி விடுவேன்'' என்றார்.
Labels:
புள்ளிகள்
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு வார அரட்டையில் சாவி சுருட்டியது இவ்வளவுதானா?! - ஜெ.
ReplyDeleteஇட்லி வடையிலிருந்து க்ளிக்காகி இங்கே குதித்தேன்....ரிஸித்தேன்....!
ReplyDeleteபுள்ளிகள்” சாவி -
ReplyDeleteபுள்ளிகள்” சாவி -என்கின்ற இடுகை குறிப்பிற்கான
கோபுலு அவர்கள் வரைந்த சாவி அவர்களின் சித்திரம்
அருமையாக இருக்கின்றது.
அடடா...
இடுகையைப் பற்றிச் சொல்ல மறந்தேனே. வாய்கொள்ளாமல்
சிரித்தேன். படா சுருட்டல்பேர்வழியாய் இருந்திருக்காரே சாவி!