Behind every great man stands a woman
ஒரு பொன்மொழியையோ, பழமொழியையோ லேசாகத் திரித்துச் சொல்வது ஒரு வித சாமர்த்தியமான நகைச்சுவை. இந்த வகையான நகைச்சுவைப் பதிவுகளை அவ்வப்போது போட எண்ணியுள்ளேன்.
மேலே தரப்பட்டுள்ள ஆங்கிலப் பொன்மொழி மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு பிரபலமான மனிதனின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். அதாவது அவளுடைய ஆதரவும் ஊக்கமூட்டலும் அவளது கணவனுக்கு உறுதுணையாக உள்ளன என்பது இதன் கருத்து.
சரி, சில குயுக்தியான மாறுதல் வரிகளைப் பார்க்கலாம்.
* ஒவ்வொரு நல்ல மனிதனின் பின்னாலும் ஒரு நல்ல பெண்மணி இருக்கிறாள்- அப்பாடா என்று ஓய்ந்து போய்!
* ஒவ்வொரு முட்டாளின் பின்னாலும் ஒரு மகத்தான பெண் இருக்கிறாள்.
* ஒவ்வொரு வெற்றியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள் -- நல்லதாக ஒரு நகை உண்டா, நட்டு உண்டா என்று அழுது கொண்டு!
* ஒவ்வொரு வெற்றிகரமான ஹீரோவின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறார்; அவளுக்குப் பின்னால்? அவருடைய மனைவி எரிச்சலுடன் இருக்கிறாள்!
* ஒவ்வொரு தோல்வியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள்.
* ஒவ்வொரு வெற்றிகரமான ஆசாமியின் பின்னாலும் அவனுடைய மாமியார் இருக்கிறார், ஆச்சரியம் தாங்காமல்!
*பிரிட்டனின் பிரதமராக இருந்த மெக்மில்லனின் மனைவி லேடி டோரதி மெக்மில்லன் ஒரு சமயம் சொன்னார். ``எந்த ஒரு மனிதனும் வெற்றியாளனாக முடியாது- அவனுக்குப் பின்னால் அவன் மனைவியோ அல்லது அம்மாவோ இல்லாவிட்டால்! இரண்டு பேருமே இருந்து விட்டால் அவனுக்கு இரட்டை அதிர்ஷ்டம்தான்!''
* ஒவ்வொரு பிரபலமானவரின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். ...ஆனால் ஒவ்வொரு பிரபலமான பெண்மணியைப் பொறுத்தவரை ஒரு ஆண் அவளுக்கு முன்னே இருக்கிறான், பல சமயம் அவள் காலைத் தடுக்கி விட்டுக் கொண்டு!\\
===========\
ரவிபிரகாஷ் அவர்கள் அனுப்பிய பின்னூட்டத்தை. முன்னூட்டமாகப் போட்டிருக்கிறேன்!.
ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - சின்ன வீடாக!
ஒவ்வொரு முன்னேறிய மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - அவனைப் பிடித்துப் பின்னால் இழுப்பதற்கு!
ரவிபிரகாஷ் said...
ReplyDeleteபொன்மொழியை லேசாகத் திரித்தால் - கட்டுரைக்குப் பின்னூட்டம் இட நினைத்தேன். அங்கே இந்த கமெண்ட் பாக்ஸ் திறக்கவில்லை. எனவே, இங்கே போடுகிறேன்.
ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - சின்ன வீடாக!
ஒவ்வொரு முன்னேறிய மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - அவனைப் பிடித்துப் பின்னால் இழுப்பதற்கு!
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
ஒரு வேண்டுகோள் -
நகைப் பெட்டி, நகைச்சுவைப் பெட்டி, ஆஹா விளம்பரங்கள் இவையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியவில்லையே, அதாவது ARCHEIVE ஆக இல்லை, அதனால், மீண்டும் மீண்டும் படித்து ரசிப்பது என்பது முடியாமல் இருக்கிறது. இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
எனக்கு எப்பவுமே கதை, கட்டுரைகளை, நல்ல விஷயங்களை, திரும்பத் திரும்ப, படித்துப் பார்க்கப் பிடிக்கும். (ஒரு விஷயத்தைப் பல முறை படித்தால்தான் புரியுமான்னு கேட்டுடாதீங்க, ப்ளீஸ்:))
அன்புடன்
திருமதி சுப்ரமணியம்
திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு, உங்கள் பிரச்னைதான் எனக்கும். BLOGSPOT காரர்கள் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்..
ReplyDeleteSidebar-ல் போட்டதை archive-ல் சேமிக்க வ்ழியில்லை. அவ்வப்போது டவுன்லோட் பண்ணிக் கொள்வதுதான் வழி. இந்தத் துறையில் இதற்கு என்ன செய்வது என்று யாராவது சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும்.
Behind every successful man, you will find a woman (criticizing his each and every action!)
ReplyDelete