உப்பும் மிளகும்
அமெரிக்கவில் பிரசுரமாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித் தாளைப்
புரட்டினால் எல்லம் பிஸினஸ் செய்திகளாகவும் பங்கு மார்க்கெட்
நிலவரங்களும் மில்லியனும் பில்லியனுமாக இருக்கும்.
ஆகவே அமரிக்கன் லைப்ரரியில் அதன் கிட்டேயே போகமாட்டேன்.. இந்த செய்திதாளில் நிச்சயமாக எனக்குப் பிடித்த நகைச்சுவை அம்சமே இருக்காது .என்பது எனக்குத் தெரியும். ஆனால் மற்ற பகுதிகளுடன் தொடர்பில்லாத்த ஒரு பத்தி அவ்வப்போது வெளியாகிறது என்பது, ஒரு பழைய புத்தகத்தை நடைபாதைக் கடையில் வாங்கியபோதுதான் தெரிந்தது,
புத்தகத்தின் தலைப்பு: உப்பும் மிளகும். வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இந்த தலைப்பில் அவ்வப்போது பிரசுரமாகும் ஜோக்குகள்,ஒரு வரி சிரிப்புகள், நகைச்சுவைக் குட்டி பாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. ஒரு பத்து ஆண்டுகளில் வந்தவற்றில் சிறந்தவற்றைப் போட்டிருந்தார்கள்: அதிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.
No comments:
Post a Comment
............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!