November 16, 2010

துவளாத மனத்தின் வெற்றி

ஃப்ரெட் ஸ்மித்தின் ( FRED SMITH) கதையைப் பாருங்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது புதிய தொழில் முயற்சி பற்றி ஒரு "தீஸிஸ்' எழுதினார்.
      "24 மணி நேரத்திற்குள் வினியோகம்' என்ற தலைப்பில்.
      இன்று ஒப்படைக்கப்பட்ட தபாலையோ, பார்சலையோ மறுநாளே நிச்சயமாக டெலிவரி செய்தால் அம்முயற்சிக்கு மகத்தான வரவேற்பு இருக்கும் என்கிற ரீதியில் எழுதித் தந்தார்.
      ஆசிரியர், ""உருப்படாத யோசனை. தனியே தபால் துறையை நடத்தலாம் என்கிறாய். சொந்தமாகப் பல ஊர்களில் அலுவலகங்கள் வேண்டும். விமானக் கம்பெனிகள் ஆயிரம் தொல்லைகள் கொடுக்கும். ஏகப்பட்ட முதலீடு தேவைப்படும். பெரிய பெரிய விமானக் கம்பெனிகள் போட்டிக்கு வந்தால் எதிர்த்து நிற்க முடியுமா?'' என்று கூறி ஸ்மித்தின் யோசனையை நிராகரித்து விட்டார்.
      ஸ்மித்திற்குத் தன் யோசனை மீதும் அது நிச்சயம் வெற்றியடையும் என்பதின் மீதும் அயராத நம்பிக்கை இருந்தது. படிப்பை முடித்த பிறகு தொழில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த போது, "24 மணி நேரத்தில் டெலிவரி' என்று உத்தரவாதத்துடன் "ஃபெடரல் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தை ஆரம்பித்தார்.
      அமெரிக்காவின் அரசு வங்கியின் (நமது ரிசர்வ் வங்கி மாதிரி) பணத்தை ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எடுத்துச் செல்ல, வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். (இதனால் வங்கிக்குக் கணிசமான செலவு மீதம் என்பதால் வங்கி இவருடன் ஒப்பந்தம் செய்து  கொண்டது.)
      ஃப்ரெட், இரண்டு விமானக் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். சுமார் நாலு கோடி டாலரைக் கடனாக வாங்கி, ஒரு விமானத்தை வாங்கினார்.
      அப்போது (1971) அவருக்கு வயது 26. ஆனால் வங்கி ஒப்பந்தத்தை ஒரு சில காரணங்களுக்காக வாபஸ் வாங்கிக் கொண்டது.
      "நான் மூழ்கிப் போக மாட்டேன்' என்று சூளுரைத்து, தனது கம்பெனியை கடிதங்கள், பார்சல்கள் எடுத்துச் செல்லும் கூரியர் கம்பெனியாக ஆக்கினார். முதல் மூன்று வருடங்கள் திவால் ஆகிவிடும் போலிருந்தது. சிறிதும் தளராமல், கம்பெனியை நடத்தினார். தன் சொந்த சொத்தக்களை எல்லாம் விற்றார். கம்பெனி மெதுவாகத் தலை தூக்கியது.
      1983-ல் அதாவது 10 வருஷங்களுக்குள் சரித்திரம் படைத்து விட்டது. மிக குறுகிய காலத்தில் நூறு கோடி வருவாயைத் தொட்டது.
      இன்று "ஃபெடக்ஸ்' இல்லாவிட்டால் அமெரிக்காவே ஸ்தம்பித்து போய்விடும் என்றாகி விட்டது. ஃபெடக்ஸ், ஃப்ரெட் ஸ்மித்தின் வெற்றி மட்டுமல்ல. துவளாத மனத்தின் வெற்றியும் கூட.

3 comments:

  1. ஐயா டப்பு இருந்தால் மனசும் தைரியமாக இருக்கும். 26 வயதில் 4 கோடி டாலர் கடன் எப்படி வாங்கமுடிந்தது? இங்கு முடியுமா? 3 வருடம் இந்த கடனோடு நஷ்டத்தையும் எல்லோராலும் தாங்க முடியுமா? இவர் ஒரு விதி விலக்கான உதாரணம் என்றே நான் நினைக்கிறேன். - ஜெ.

    ReplyDelete
  2. கேரக்டர் பதிவொன்றினை எழுதியிருக்கிறேன்... நீங்கள் படித்து பின்னூட்டம் இட்டால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்...

    http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/18.html

    ReplyDelete
  3. philosophy prabhakaran said...
    அவர்களுக்கு,
    கேரக்டரைப் பார்க்கிறேன்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!