குறிப்பு: சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன்பு புத்தகசாலையில் FOOTPRINTS என்ற இந்த அற்புதமானப் பாடலை படித்து மெய்மறந்தேன். அப்போதே அதைத் தமிழ்ப் படுத்த முனைந்தேன். சுமாராக மொழிமாற்றம் செய்தேன். ’சாவி’க்கு அனுப்பினேன். முதல் பக்கத்தில் பிரசுரமாயிற்று.
இப்போது மீண்டும் படிக்கும்போது இதை இன்னும் சிறப்பாக மொழிபெயர்த்து இருக்கலாமே என்று தோன்றியது. அதற்கு எனக்குத் திறமை இல்லை என்றும் உணர்ந்தேன்.
படிப்பவர்கள் முயற்சி செய்யலாம். திருத்தமும் கூறலாம்.
=================================
FOOTPRINTS
By Margaret Fishback Powers
One night I dreamed a dream.
I was walking along the beach with my Lord.
Across the dark sky flashed scenes from my life.
For each scene,
I noticed two sets of footprints in the sand,
One belonging to me and
One to my Lord.
When the last scene of my life shot before me
I looked back at the footprints in the sand.
There was only one set of footprints.
I realized that this was at the lowest
And saddest times of my life.
This always bothered me
And I questioned the Lord
about my dilemma.
"Lord, You told me when I decided to follow You,
You would walk and talk with me all the way.
But I'm aware that during the most troublesome
Times of my life there is only one set of footprints.
I just don't understand why, when I need You most,
You leave me."
He whispered, "My precious child,
I love you and will never leave you,
never, ever, during your trials and testings.
When you say only one set of footprints,
It was then that I carried you."
சுவடுகள்
ஓர் இரவு கனவொன்று கண்டேன்
கடல் மணற்பரப்பினில் கடவுளுடன் கைகோத்துச் செல்கிறேன்.
வான்வெளியில் பலவகைக் காட்சிகள்
யாவும் என் வாழ்க்கை நிகழ்ச்சிகள்.
ஆங்காங்கே இரண்டிரண்டு காலடிச் சுவடுகள்.
ஒன்று என்னுடையவை;
மற்றது கடவுளுடையவை.
என் வாழ்க்கையின் கடைசிக் காட்சி விரிந்ததும்
மீண்டும் முனைப்புடன் நோக்கினேன்,
முன்பு விரிந்த காட்சிகளை.
ஒரு சில காட்சிகளில் ஒரு ஜோடி காலடிதான்.
அந்தக் காட்சிகள் யாவும் என் வாழ்வின் சோக அத்தியாயங்கள்;
சோதனைப் படலங்கள்./
எப்படி ஆகப் போயிற்று இப்படி என்று குழம்பினேன்.
கடவுளை வினவினேன் குழப்பம் நீங்கிட.
“ எனை ஆண்டவனே, என்னிடம் நீ சொன்னதென்ன,
உன்னைப் பின்பற்ற நான் முன் வந்த போது?
என்றும் உன்னுடன் வழிநெடுக வருவேன், உரையாடுவேன் என்று சொன்னாய் நீ.
என் வாழ்க்கையின் சோதனைக் காலங்களில், வேதனை விநாடிகளில்
ஒரு ஜோடி சுவடுகள்தான் உள்ளதே!
உன் உதவிக்கரம் தேவைப்பட்டகாலங்களில் காணோமே காலடிச் சுவடுகள்.
ஏன் என்னைவிட்டு விலகிச் சென்றாய் அந்நேரங்களில்? ஏன்? ஏன்?
மெல்லச் சொன்னார் அவர்:
“ என் செல்ல மகனே,. உன்னை நான் நேசிக்கிறேன்.
என்றும் உன்னை விட்டு நீங்கமாட்டேன்.
உன் இருள் சூழ்ந்த நாட்களிலும்கவலை தோய்ந்த தருணங்களிலும்
ஒரு ஜோடி சுவடு மட்டும் உள்ளதாகச் சொன்னாய்.
ஆம்,அந்த சமயங்களில் உன்னை
அணைத்துத் தூக்கிச் சென்றது நான்!
ஆன்மீக சொற்பொழிவு மற்றும் ஆன்மீக புத்தகங்களில் இதை கதை வடிவில் கேட்டிருக்கிறேன். இது ஏதோ புராணங்களிலிருந்தோ, இதிகாசங்களிலிருந்தோ எடுக்கப்பட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் ஒரு ஆங்கில கவிதையின் மொழிபெயர்ப்பு என இப்போதுதான் தெரிய வருகிறது. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteஜெ.பாபு,
கோவை
Mama can you remember? When you showed me this poetry I tried to translate it in Tamil & got a shoddu from you?
ReplyDeleteMeera Kondu
Good Thought!!
ReplyDelete- VENKAT
CBE
”””Meera kondu said... When you showed me this poetry I tried to translate it in Tamil & got a shoddu from you?++++
ReplyDeleteit was not 'shoddu' IT was 'gooddddu'!