February 01, 2010

ஜயச்சந்திரன் -கடுகு

"இந்த வாட்டர் பிராப்ளம் இப்படிப் படாத பாடு படுத்துகிறது. இதைச் சுலபமா சால்வ் பண்ண முடியும். அமெரிக்காவிலிருந்து ஆளுங்களை வரவழைக்க வேண்டிய அவசியமில்லை..
"கடலில் தண்ணீர் இருக்கு. அதிலிருக்கிற உப்பைப் பிரிச்சு எடுத்தால் போதும். உப்புக்கு உப்பும் கிடைக்கும்;  குடி தண்ணீரும் கிடைக்கும். பிரிக்கிறதுதான் முக்கியம்.
"அணுவை எப்படிப் பிளந்தான்? அதே பிரின்ஸிபள்தான். ஒரு எலக்ட்ரானிக் முறையில் பிரிச்சுடலாம்.
"தண்ணீரையும் பாலையும் கலந்து வெச்சால் அன்னம் எப்படி பாலை மட்டும் குடிக்கிறது? கேவலம் ஒரு பறவை செய்யற காரியத்தை மனுஷனால் செய்ய முடியாதா? நான் யோசிச்சேன். இதுக்காக நூற்றுக்கணக்கான அன்னங்களை வாங்கி ஆராய்ச்சி பண்ணினேன். அந்த சமயத்தில் தான் கடல் தண்ணீரைப் பிரிக்கிற மெதட் தெரிஞ்சது.
"நம்மவங்க என் ஐடியாவை அலட்சியம் பண்ணிட்டாங்க. அதை அமெரிக்காவிற்கு அனுப்பி வெச்சிருக்கேன்.
"இரும்பு இல்ல இரும்பு.  அதில் எப்படி துரு பிடிக்கிறது? தண்ணீர் படவே தான். சரி, துருவை எடுத்துக் கொண்டு அதை ஒரு முறைப்படி பிராஸஸ் பண்ணால், நிச்சயம் இரும்பும் தண்ணீரும் கிடைக்கும். இதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறேன்
"இது மாதிரி நிறைய ஆராய்ச்சி வெச்சிருக்கிறேன். "ஐயா, எடுத்துக் கொள்ளுங்கள் நம் ஐடியாவை' என்று சொல்ல மாட்டேன். உனக்கு நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால் நீ வா ஜயச்சந்திரன்கிட்டே.''
ஆம், பேசுவது திருவாளர் ஜயச்சந்திரன் தான்!
கலைந்த தலை, துண்டு மீசை, அடர்ந்த புருவம், காலர் கிழிந்த கட்டம் போட்ட சட்டை, வயிற்றுக்குக் கீழே இறங்கிய தொள தொள பாண்ட், அது மேலும் கீழே இறங்கியபடி பெரிய பட்டை பெல்ட்டால் கட்டப்பட்டிருக்கும். காலில் பூட்ஸ், அதன் மேல் பாகம் ஒட்டு. இடது கையில் ஒரு பெரிய தோல் பை. கிட்டத்தட்ட அவர் வயது அதற்கும் ஆகியிருக்கும். அவர் சட்டைப்பை, கைப்பை மாதிரி ஏகப்பட்ட காகிதம், (பிளான்கள்?) கடிதங்கள் ஆகியவைகளால் பரிதாபமாகப் பிதுங்கிக் கொண்டிருக்கும்.
ஜயச்சந்திரன் பார்க்காத வேலையில்லை, எதிலும் நிலைத்ததில்லை. பாவம், சதா ஆராய்ச்சியில் அவர் மனம் ஈடுபட்டிருப்பதால், சாதாரண வேலைகளில் அவரால் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை..
தற்சமயம் அவர் முன்னாள் ஜோத்பூர் திவானிடம் இருக்கிறார்.
"மாஜி திவான் ரொம்ப கெட்டிக்காரர். எனக்கென்று தனி பங்களாகூட  கொடுத்திருக்கிறார். நம்ப மாட்டீங்க, மாஜி திவானை பம்பாய் பீச்சில் தற்செயலாகப் பார்த்தபொழுது என் ஆராய்ச்சிகளைப் பற்றிச் சொன்னேன். அசந்து போய்விட்டார்.... அவருக்கு ரொம்ப நாளா ஒரு ஐடியா, இந்தக் கண்ணாடிப் புட்டிகள் உடைந்து போனால் என்ன செ.ய்கிறோம். தூக்கித்தானே போடுகிறோம்? அவர் கேட்டார், "மிஸ்டர் ஜயச்சந்திரன், இந்த கண்ணாடி புட்டிகளை நைஸ் பவுடராகச் செய்து  ஒரு ஸ்பெஷல் கோந்துடன் கலந்து விசேஷ திரவத்தைப் போட்டுக் கலக்கி மறுபடியும் புட்டிகள், டம்ளர்கள் இப்படி வார்ப்பு எடுக்க முடியாதா?''  இதைக் கேட்டு எனக்கே மலைச்சுப் போச்சு. இத்தனை வருஷமா எனக்கே தோன்றாத ஐடியா, இல்லையா?
"மூணு மாசமா ஜோத்பூரில் தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்óகிறேன். ஒரு மாதிரி வெற்றிகரமாகப் பண்ணினேன். அப்படி தயார் செய்த புட்டியில் தண்ணீர் ஏற்றினேன். புட்டியே கரைஞ்சு போச்சு! இதனால் வேறு லைன்லே ஆராய்ச்சி பண்றேன். பார்த்துக் கொண்டிருங்களேன். இதற்கு உரிமைப் பதிவு செய்து கொள்ளப் போகிறோம். கோடி கோடியாக டாலர் கொடுத்து அமெரிக்காக்காரன் உரிமை வாங்கிக்க வருவான்.”
"வாங்க, காப்பி சாப்பிடலாம்.''
ஓட்டலுக்குப் போனால்  ஒன்று உறுதி. பில் நீங்கள் தான் கொடுக்க வேண்டும்.
"இந்த மாசம் ஆராய்ச்சிக்காக நிறைய கெமிக்கல் வாங்கிவிட்டேண். காசு ’ஷார்ட்டாக' இருக்கிறது. நூறு ரூபாய் கொடுங்கள். ஊருக்குப் போய் எம். ஓ. பண்ணிவிடுகிறேன்.'' என்பார்
ஜயச்சந்திரன் தன் கைப்பையைத் திறந்தால் உங்களுடைய ஒரு மணி நேரத்தையாவது தியாகம் செய்ய வேண்டி இருக்கும்.
"இந்த பைலைப் பாருங்கள், நைன்டீன் தர்டி டூ விலிருந்து குறிப்பு வைச்சிருக்கேன். கென்னடிக்கு ஒரு லெட்டர் போட்டேன். மூன் லாண்டிற்கு நான் ஒரு "ஐடியா' கொடுத்தேன். சும்மா ஃப்ரீயாத்தான்! "வேண்டும் என்றால் நானே ஒரு நடை அமெரிக்கா வருகிறேன்' என்று சொன்னேன். ஆனால் அமெரிக்கர்கள் கில்லாடிகள், நான் எழுதி அனுப்பிய குறிப்பை நன்றாகப் புரிஞ்சிகிட்டாங்க. இல்லாவிட்டால்  ஆர்ம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கினாரே அது ஃபெயில் ஆகியிருக்கும். நம்ப  ஐடியா என்னன்னு கேட்காதீங்க. இப்ப நான் சொன்னால் அமெரிக்காவையே கேவலப்படுத்தற மாதிரி இருக்கும், சார். ஆராய்ச்சிக்காரர்கள் ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுக்கிறது வழக்கமில்லை. பார்க்கப் போனால், உலக முன்னேற்றத்துக்குத் தானே அவங்களும் இத்தனை முயற்சிகளை எடுத்துக்கறாங்க, என் மாதிரி....''
       ஜயசந்திரனின் ஆராய்ச்சிகள் யாவும் அந்தப் பையில்தான் இருக்கின்றன. எவ்வளவு கடிதங்கள், எவ்வளவு குறிப்புகள், பத்திரிகைச் செய்திகள்! (ஒரு பத்திரிகைக் குறிப்பின் பின் பக்கம் ஹரிதாஸ் சினிமாப் படத்தின் விளம்பரத்தைப் பார்க்கலாம்.)
இந்தியாவின் வீட்டுப் பிரச்னையைத் தீர்க்க ஒரு சின்ன ’புக்லெட்'டை அவர் தயார் செய்திருக்கிறார். அதை அச்சடித்து எல்லா எம்.பி.க்கள், அமைச்சர்கள், பிரமுகர்களுக்கு அனுப்பியிருக்கிறார். (இந்தியாவில் மொத்தம் 46786 கோடி மரங்கள் இருக்கின்றன. அவைகளை அறுத்து வீடு கட்டினால் மொத்தம் 32676 லட்சம் வீடுகளை......") 
 ஜயசந்திரனின் பிளான்கள் வெற்றிகரமாக அமைகின்றனவோ இல்லையோ, அவரது வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்துவிட்டது. இரண்டு பெண்களையும் நன்றாகப் படிக்க வைத்து ஜாம் ஜாமென்று கலியாணம் செய்து வைத்து விட்டார். ஜோத்பூர் மாஜி திவான்கள் இருக்கும்வரை ஜயசந்திரன்களுக்குத் தோல்விதான் ஏது? கவலைதான் ஏது?

13 comments:

  1. :)... Excellent...Please post one blog each day. So, that we guys also enjoy.

    Regards
    Rangarajan

    ReplyDelete
  2. Perhaps Jayachandran was the elder brother of G.D.Naidu? (I do respect late G.D.Naidu) - R. Jagannathan

    ReplyDelete
  3. jolly a na aathma..

    ReplyDelete
  4. Dear Mr Rangarajam.
    Thanks for your comments. You are asking me to make one posting a day. Much as I would like to do this or even more than this, the physical work like typing in Tamil,scanning and coloring sketches in GIMP,replying to comments etc take lot of time. i will try to feed the bloog with lot of interstng matter.
    -Kadugu

    ReplyDelete
  5. Interesting to read like this special charactors. Excellent writing. Thank you sir.

    ReplyDelete
  6. Dear Sir,

    Thanks. You are posting two or three postings in one day... Instead you can make it one post per day.

    Daily we guys are visiting your blog looking for for new posting. But you are disappointing us... :) If you post 3 (postings) in one issue, in one go we read it.. and waiting for the next post very next day..... ;)...

    So, post one per day... so each day we will visit your blog...and keep munching it...

    Regards
    Rangarajan

    ReplyDelete
  7. I do not know whether I have bitten more than I can chew!
    Many of you seem to be sort of "bahaasoorars." You are gobbling everything in one go and asking for more!
    I am working single handedly. I am neither a genii nor a genius!!-- Plaese bear with me.
    -- kadugu

    ReplyDelete
  8. நல்லா இருக்கு சார் . நானும் இதுபோன்ற கேரக்டர்களை ஒவ்வொரு ஊரிலும் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. யதிராஜ சம்பத் குமார்February 2, 2010 at 5:12 PM

    கடுகு அவர்கள் கேரக்டர் வரிசையில் சித்தரிக்கும் அனைத்து பாத்திரங்களுமே அற்புதமானவர்களாக இருந்து வருகின்றனர். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அனைவரும் நம்முடைய வாழ்விலும் வந்து போனவர்கள் போலவே இருப்பது எனக்கு மட்டுமே தோன்றும் உணர்வா என்று தெரியவில்லை. கடுகு அவர்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  10. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. என் திறமை எதுவும் இல்லை. என்னைப் படைத்தவன் தான் இவற்றையும் படைத்திருக்கிறான். நான் பேனா; அவன்தான் மை! --எளியோன் கடுகு

    ReplyDelete
  11. // I am working single handedly. // Rendu kaiyaiyum use pannungalaen! Enga Peraasaikku neengal mattu
    mae kaaranam! Seriously, we do understand it is a big task and big responsibility to post only interesting articles to maintain reader interest - instead of useless space fillers like most bloggers do. Thanks for keeping us engrossed in your site and also for the very prompt responses. Please do take care of yourself. Regards, - R. Jagannathan

    ReplyDelete
  12. அன்புள்ள ஜகன்னாதன் அவர்களுக்கு,
    ந்ன்றி. உங்கள் குறிப்பு எனக்கு நிறைய ஊக்கம் அளித்தது.-- கடுகு

    ReplyDelete
  13. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் அது போல க டு கு ஐயா உருவாக்கும் ஒவ்வொரு கதை மாந்தர்களும் ஓரிரு வரிகளிலேயே நம் மனதில் உயிர்பெற்று எழும்பிவிடுகிறார்கள்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!