என் அருமை மனைவி கமலாவைப் போல் ஒரு சிக்கன திலகம் இருக்க முடியுமா என்ப்து சந்தேகமே! கமலாவின் பல அற்புத சிக்கன யோசனைகளைப் பலருக்கும் தெரியப்படுத்த முன்வருகிறேன். அனைவரும் பலன் பெற்று இன்புற்று இருப்பீர்களாக!
* 1958-ல் நாலு ரூபாய் எட்டணா கொடுத்து ஒரு இரும்புப் பக்கெட்டை கமலா வாங்கினாள். சில மாதங்கள் கழித்து அதன் அடியில் ஓட்டை விழுந்து விட்டது வேறு யாராவதாக இருந்தால் அதைத் தூக்கிப் போட்டு விட்டு புதிதாக ஒரு பக்கெட் வாங்கிருப்பார்கள்.. அந்த மாதிரி ஊதாரித்தனமெல்லாம் கமலாவுக்குத் தெரியாது. ஆகவே பக்கெட் ரிப்பேர் செய்பவனிடம் கொடுத்து அடியை வெட்டி வேறு ஒன்று போடச் செய்தாள். கொஞ்சம் உயரம் குறையுமே த்விர கிட்டதட்ட புது பக்கெட் மாதிரி ஆகிவிடும். இப்படி வருடா வருடம் செய்து வருகிறாள். இத்தனை வருடங்களாகியும் அதே பக்கெட் உழைக்கிறது என்றால் கமலாவின் சிக்கன முறைதான் காரணம். (ரகசியப் பின் குறிப்பு. இத்தனை வருடங்களில் ரிப்பேருக்காக ஆன செலவு 93 ரூபாய் என்பதை நான் சொல்லப் போவதில்லை!) எங்கள் விட்டுக்கு வந்தால் பக்கெட்டைக் காண்பிக்கிறேன். அதன் பிறகுதான் நம்புவீர்கள் ! தாம்பாளத்திற்குக் கைப்பிடி வைத்த மாதிரி இருக்கும் பக்கெட் உலகத்திலேயே எங்கள் வீட்டில் மட்டும் தான் இருக்கிறது. வருஷா வருஷம் வெட்டியதில் உயரம் குறைந்து விட்டது. இருந்தால் என்ன, முழுதாக ஒரு டம்ளர் தண்ணீர் பிடிக்குமே!)
* ஒரே ஒரு கெஜம் துணி வாங்கி என் மூன்று வயதுப் பெண்ணுக்குப் பாவாடை தைத்தாள் கமலா. என் பெண் மூன்று வருஷம் அதைப் போட்டுக் கொண்டாள். தழையத் தழைய இருந்த பாவாடை, கணுக்காலுக்கு ஏறி பாதி காலுக்கு ஏறி
முழங்காலுக்கு வந்து விட்டது. அதைப் பிரித்து அரை ஸ்கர்ட்டாகத் தைத்தாள். ஒரு வருஷம் கழித்து, அதைப் பிரித்து டேபிள் கிளாத்தாக மாற்றினாள். ஆறு மாதத்துக்குப் பின் டேபிள் கிளாத் ரேடியோவுக்கு உறையாக மாறியாது. பின்னும் ஒரு வருஷத்துக்குப் பிறகு அதை ஜோல்னாப் பையாகத் தைத்தாள். ஆறு மாதத்தில் ஜோல்னாப் பை நைந்து விடவே, பிரித்துச் சாதாரண கைப் பையாகத் மாற்றினாள். ஒரு வருஷம் ஆயிற்று. கைப் பையைப் பிரித்து, சமயலறையில் உபயோகிக்க ஆறு பிடிதுணியாகத் தைத்து உபயோகித்து வருகிறாள்.
இதுவல்லவோ சிக்கனம்! (பிரித்துத் தைப்பதற்கு மட்டும் 34 ரூபாய் செலவானதைப் பற்றி ஒன்றும் கேட்காதீர்கள்.). அடுத்து என்ன செய்வாள் என்று தயவு செய்து கேட்காதீர்கள். எங்கே எனக்குக் கைக்குட்டையாகத் தைத்து கொடுத்து விடப் போகிறளோ என்று நானே கதி கலங்கிக் கொண்டிருக்கிறேன்!,
* என் வீட்டில் மொத்தம் 67 பேனாக்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு பேனாவில் கூட காப், கிளிப், பாரல், கழுத்து, நாக்கு, நிப்பு ஒத்து இருக்காது. பழைய பேனாக்களிலிருந்து பாகங்களை எடுத்து ஒரு பேனாவை உருவாக்கி யிருக்கிறாள். "ரொம்ப நன்னா எழுதறது, வெச்சுக்கோங்கோ. இரண்டு ரூபாய் கொடுத்து நிப் வாங்கிப் போட்டிருக்கிறேன். சூப்பர் பேனா'' என்று, தானே ஒரு ஐ.எஸ்,ஐ, முத்திரை கொடுத்து, அன்புடன் கொடுக்கும் பேனாவை வாங்கி எழுதினால், உடனே ஒரு கட்டி டாய்லெட் சோப்பும் ஒரு கட்டி வாஷிங் சோப்பும் தேவைப்படும்.காரணம், நிப்பைத் தவிர மற்ற எல்லா வழியாகவும்
இங்க் வெளியே வரும். எழுதும்போது பத்து மில்லி இங்கியும், சட்டைபையில் வைத்திருக்கும்போது இருபது மில்லியும், பொங்கல், தீபாவளி சமயத்தில் போடும் புது சட்டையாக இருந்தால் போனஸாக ஐந்து மில்லி கூடுதலாகவும் லீக் ஆகும். சிக்கனத்திற்கு சிக்கனமும் ஆச்சு: செலவில்லாமல் என்னை நீலமேக சியாமளனாக ஆக்கிய மாதிரியும் ஆச்சு! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!!
* ஒரு வத்திக் குச்சியைப் பற்ற வைத்தால், இரண்டு சுவாமி விளக்கு, இரண்டு
காஸ் அடுப்பு, ஒரு ஊதுவத்தி ஆகியவைகளைக் கொளுத்துவாள். தனித் தனியாகக் கொளுத்தினால் வீண் செலவுதானே? (ஒரு நாளைக்கு எட்டுத்தரம் அடுப்பைப் பற்ற வைத்தாலும் இத்தனையையும் பற்ற வைப்பாள்.) ஊதுவத்தி, எண்ணெய் ஆகியவற்றிற்கு ஆகும் செலவைப் பற்றிக் கேட்காதீர்கள். அது வேறு ஐட்டம். தீப்பெட்டிச் செலவில் வரவே வராது, சந்தேகம் இருந்தால் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்டிடம் போய்க் கேளுங்கள்!
இது போதுமா? என்னது? இன்னமும் வேண்டுமா ? அப்படியானால் கமலா சிக்கன கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் சேருங்கள்.முதலில் சேரும் ஐம்பது பேருக்கு கட்டணத்தில் 50 சதவிகிதம்சலுகை தரப்பப்டும்..மேலும்..........
இன்னும் எவ்வளவோ எழுதலாம். “பேப்பர் என்ன மரத்திலிருந்து வருகிறதா? கெக்கே பிக்கே என்று கிறுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. இந்தாங்கோ, இந்த வாழைப்பூவை ஆய்ந்து, வெட்டிக் கொடுங்கள் சமையலுக்கு” என்று கமலா சொல்லிவிட்டாள். இதற்கு நான் வைத்திருக்கும் பெயர் “ வாழைப்பூ தண்டனை”!
போகட்டும், வீட்டில் வாழைப்பூ இல்லாத நாளாகப் பார்த்துக் கட்டுரையைத் தொடர்கிறேன்.
Thanks for sharing the " TRIPLE S ",,(super saving schemes) ...kadugu sir...just to remind you that once an ad man always an ad man..right
ReplyDeleteSir..
ReplyDeleteIn your article, I see my mom's activity in place of your wife Mrs.Kamala. She does the same thing.. But she use kid's underwear as kitchen towel.. Nobody in our house touch that towel, except my mom. She will say "this is our kid's dress.. Dont feel bad.."
But in my mind, I used to re-collect the poo incidents happened on that dress.. :)
சார் முடியல.
ReplyDelete"தாம்பாளத்திற்குக் கைப்பிடி வைத்தார்ப் போன்று....". எங்கே இருந்து சார் இப்படி ஒரு அற்புதமான வார்த்தைப் பிரயோகங்கள் உங்களுக்கு மட்டும் வருகிறது? பேஷ் பேஷ்! ரொம்பப் பிரமாதம். அதற்கு சூப்பராக ஒரு "கிராபிக்ஸ்" படம் வேறு! சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் கமலா மாமி கடந்த நாற்பது வருடங்களாக நீங்கள் "ஊதாரித்தனமாக" செய்த செலவையெல்லாம் நிச்சயம் சுட்டிக் காட்டி இருப்பார். அவைகளை எங்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும் (:
ReplyDeleteபேஷாருக்கு போங்கோ (பாஷைக்கு மன்னிக்கவும் கடுகு சார்) அதென்னமோ வரவர பதிவுகளைப்படித்தால் அந்தந்த பாஷையிலேயே பின்னூட்டம் போடச்சொல்லுது. இந்த வியாதிக்கு என்ன பெயர் வைக்கலாம் சொல்லுங்கோ.
ReplyDeleteபதிவுலகத்திலே இரண்டாவது சீனியர் (முதல் சீனியர் நீங்கதான்) இதுக்கெல்லாம் ஒரு விருது கொடுக்க மாட்டாளோ.
Nice story. Kamala Mami's recycling actions reminds me the "Joseph had a little overcoat" children's book
ReplyDeleteகாந்தியார் சொல்லிய சிக்கனத்தை சிறுவர் உடை விஷயத்தில் கடைபிடிக்கும் கமலா மாமிக்கு எங்கள் பாராட்டுகள்.
ReplyDeleteOh. I have not read that book. May be Kamala is Joseph's great great grand daughter!
ReplyDeleteஅருமையான சிக்கன டிப்ஸ் :))
ReplyDeleteWhat a style in your writing! I thought of quoting from the passage and record thaey are very humourous but as I completed reading the only way is to quote the entire posting. Couldn't control the laughter and appreciate the detailed descriptions of each case (eg. 5 milli bonus leak)and the accompanying graphical picture of the bucket! (Yella Iyengar-aaththilum,kizhintha banian thaan pidithuNiyo? )- R. Jagannathan
ReplyDelete:-)))))))))))))))))
ReplyDeleteஅறிவிலி அயயா அவர்களுக்கு,..
ReplyDeleteநான் வாழைப்பூ ஆய்வது உங்களுக்கு அவ்வளவு சிரிப்பாக இருக்கிறது! ஹூம்....
வாழைப்பூ உசிலி பிரமாதமா இருக்குமே..
ReplyDelete(சிக்கனத்துக்கு தோலையும் சேத்து சமைக்காம இருந்தா.:-))
Siriththu siriththu vayiru punnaagi vittathu; udaney ethenum marunthu anuppavum.
ReplyDeleteExcellent. As usual. The "story" of the bucket and the "thazhaiya thazhaiya paavadai" was fantastic - these happen in my house also even today.
ஒன்னு சொல்ல மறந்துடீங்க .அவங்க வீட்ல கடுகே வாங்கறதில்ல .அதான் நீங்க இருக்கீங்களே போட்டு தாளிக்க.அந்த வாளி படம் எங்க சார் பிடிச்சீங்க simply superb
ReplyDeleteபத்மா அவ்ர்களுக்கு: ஆமமாம் அவங்க வீட்லே கடுகே வாங்கறதில்லே. ஏன்னா அவங்கதான் ‘கடுகு”வை ’வாங்கு வாங்கு’ன்னு வாங்கிடறாங்களே! :)
ReplyDeleteபத்மா அவ்ர்களுக்கு: ”அந்த வாளி படம் எங்க சார் பிடிச்சீங்கன்னு கேட்கறது எனக்குப் புரியவில்லை. வாளி படததை என் டிஜிட்டல் காமிராவில் பிடிச்சேன்!!!:)
ReplyDeletesimply super.... i like that thlaya thalya pavadai. i too use the discarded clothes as pidithuni
ReplyDeleteSUMI அவர்களுக்கு
ReplyDeleteஇவ்வளவு தாமாதமாக வந்தாலும் ஷொட்டு கொடுத்ததற்கு நன்றி. பிடி துணி விஷயம் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. பேரே‘பிடி’ துணி ஆச்சே!
இந்த போஸ்ட்ட படிச்சதும் என் பாட்டி பண்ற ஒரு சிக்கன நடவடிக்கை ஞாபகம் வரது ....என் பாட்டி தீப்பட்டில தீகுச்சிய கொளுத்திட்டு அத தூக்கி போடமாட்ட...அதை பத்ரமா.. அந்த டப்பாலையே போட்டு வெச்சுப்பா... இந்த மாதிரி நிறைய எரிஞ்சு போன தீக்குச்சி டப்பா இருக்கும்...எங்க பாட்டி கிட்ட ஏன் இப்டி பன்றேல்னு கேட்டதுக்கு... கார்த்திகை போது நிறைய விளகேத்த வேண்டியிருக்குமே அப்போ புதுசு புதுசா எத்தன தீப்பட்டி வேஸ்ட் பண்றது அதான் இப்போவே சேத்து வேக்கறேனு சொல்லுவா
ReplyDeleteபக்கெட் படத்தைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை..நிஜமாவே அந்த பக்கெட் இருக்கா?
ReplyDeleteRAJARISHI said... >>>>
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.. பிப்ரவரியில் போட்ட பதிவு. இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீங்க, ராஜரிஷி? காட்டில் தவம் பண்ணப் போயிருந்தீங்களா?