February 07, 2010

அன்புள்ள டில்லி -- 8

கரண் சிங்கின் திறமை
டில்லியில் இருந்த போது, எம்.பி.க்களுடன் ஒரு சில அமைச்சர்களைத் தனிமையில் சந்தித்து இருக்கிறேன். அப்படி நான் சந்தித்த அமைச்சர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர் டாக்டர் கரண் சிங்.
தமிழர்கள் நடத்தும் கலை, கலாசார, இலக்கிய விழாக்களில் இவர் அதிகம் பங்கு கொள்வார். (அதாவது அவரைப் பங்கு கொள்ளச் சொல்வார்கள்.) அழகாக உரையாற்றுவார். ஜபர்தஸ்து எதுவும்  இருக்காது. அமைச்சராக இருந்த போதும் பலரை அவர் கவர்ந்தார்.
         ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்.. இது என் சொந்த அனுபவம்.  ஒரு சமயம் நான் ஒரு துக்ககரமான சூழ்நிலையில் டில்லியிலிருந்து அஸ்ஸாமில் உள்ள ஜோர்ஹட் நகருக்கு விமானத்தில் போக வேண்டியிருந்தது. ராணுவ டாக்டரான என் சிறிய சகோதரன் (26) சென்ற விமானம் அஸ்ஸாம்- சீனா எல்லையில் எதிரி குண்டுகளுக்கு பலி ஆனது. முன் தினம் பங்களாதேஷ் போர் முடிந்திருந்தது..ஈமக் கடன்கள் செய்ய நான் போக வேண்டியிருந்தது          
பதினைந்து நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலகத்தா விமான சேவை அன்று தான் துவங்கி இருந்தது. ஆகவே கல்கத்தா விமானத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை. ,உயர் ராணுவ அதிகாரிகளின் சிபாரிசில் டிக்கெட் கிடைத்தது. விமானம் கிளம்பப் பத்து நிமிஷத்திற்கு முன்புதான் விமான நிலையத்திற்குப் போக முடிந்தது. செக்-இன் பண்ணும் போது. பெட்டியை விமானத்திற்கு அவசரமாக அனுப்பும்படிச் சொல்லிவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடி விமானத்தை அடைந்தேன். (அந்த காலத்தில் விமானத்தின் கீழே எல்லா பெட்டிகளும் சேர்த்து  வைக்கப்பட்டிருக்கும். பயணிகள் தங்கள் பெட்டிகளை அடையாளம் காட்டிய பிறகுதான்  விமானத்திற்குள் ஏற்றுவார்கள். பாதுகாப்புக்காக இப்படி ஒரு ஏற்பாடு. விமானத்தில் ஏறியதும், நான் ”பெட்டி ஏறிவிட்டதா என்று தெரியவில்லயே. நான் அடையாளம் காட்டவில்லையே” என்று டிராபிக் அசிஸ்டென்டிடம் சொன்னேன். . "அதெல்லாம் வந்திருக்கும். இப்போது செக் பண்ண நேரமில்லை. சீட்டில் உட்காருங்கள்'' என்றார்.
"எப்படி சார் வந்திருக்கும்? நானே ஓடி வந்திருக்கிறேன். பெட்டியை உங்கள் ஆட்கள்தானே கொண்டு வர வேண்டும்?''
"சார் வீணாக விவாதம் செய்யாதீர்கள். பைலட் விமானத்தைக் கிளப்ப அவசரப்படுத்துகிறார்'' என்றார். அந்தச் சமயம் பைலட்டும் வந்து, "இனிமேல் டிலே பண்ண முடியாது'' என்றார். டிராபிக் அதிகாரி, "சார்..பெட்டி, கிட்டி என்று தகராறு பண்ணினால், உங்களை இறக்கிவிட்டு பிளேனைக் கிளப்பி விடுவோம்'' என்றார்.
"என்னப்பா, டிக்கெட் வாங்காதவன் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள? என் தம்பி ஒரு ஃப்லைட் லெஃப்டினென்ட். டாக்டர். இந்த யுத்தத்தில் செத்து விட்டான். அவனுக்கு ஈமக்கடன்கள் செய்யப் போகிறேன். உங்களுக்கு இரக்கமே கிடையாதா? பெட்டி, துணிமணி இல்லாமல், முன்பின் தெரியாத ஊரில் நான் என்ன செய்வேன்?'' என்று கதறினேன்.
விமானத்தில் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த மத்திய அமைச்சர் மொய்னூல் ஹக் சௌத்ரி உடனே எழுந்து வந்து, என் தோளின் மீது கையைப் போட்டு என்னைச் சமாதானப்படுத்தினார். "உங்கள் பெட்டி வராவிட்டால் என்ன? உங்களுக்கு எல்லாவித உதவியையும் தர நான் எற்பாடு செய்கிறேன்'' என்றார்.
 மிதமிஞ்சிய துக்கம் என்  கோபத்தை, அடக்க,  நான் சமாதானமாகிவிட்டேன். விமானத்தில் வந்த ஒரு வங்காள எம்.பி. என்னைத் தன் பக்கத்தில் உட்கார வைத்து ஆசுவாசப படுத்தினார்.
விமானம் கல்கத்தா போய் நின்றது. என் பெட்டி வரவில்லை. டில்லியிலேயே தங்கி விட்டது என்று  தகவல் வந்ததாக கல்கத்தா நிலையத்தில் சொன்னார்கள்.. அந்த எம்.பி. என்னோட் இருந்தார், அதிகாரிகளிட்ம் எனக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும்படி சொல்லிவிட்டு.  தன் டெலிபோன் நம்பரையும் கொடுத்துவிட்டுப் போனார். இரவு கல்கத்தாவில் தங்கி, மறு நாள் அஸ்ஸாம் போய். ஈமக் கடன் செய்துவிட்டு வந்ததெல்லாம் தனிக்கதை.  நான் சென்னை வந்த பிறகு தான் என் பெட்டி என்னிடம் வந்து சேர்ந்தது!.
டில்லி திரும்பிய பிறகு ஒரு மாதம் கழித்து, விமானத்துறை அமைச்சராக இருந்த கரண்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினேன். கோபமாக அல்ல, கண்ணீர் மல்க.
மூன்றாவது தினம் கரண்சிங்கிடமிருந்து ஆறுதல் கடிதம் வந்தது.  என் சகோதரனின் துயர முடிவிற்கு வருத்தம் தெரிவித்து எழுதியிருந்தார்.  என் கடிதம் பற்றி ஒன்றும் எழுதவில்லை. ஆனால்  அன்று பகல் இந்தியன் ஏர்லைன்ஸின் சேர்மனே எனக்குப் போன் செய்து, "உங்களைப் பார்க்க வேண்டும். அப்பாயின்ட்மென்ட் (!) கொடுக்க முடியுமா?'' என்று கேட்டார். "நீங்கள் எதற்குச் சிரமப்பட வேண்டும்? நானே வந்து சந்திக்கிறேன்'' என்று கூறினேன். பிறகு அவரைப் பார்த்தேன். என் சகோதரர் மரணத்திற்கு வருத்தமும் ஆறுதலும் சொன்னார்.  வீட்டிற்கு வந்தால், இந்தியன் ஏர்லைன்ஸின் மற்றொரு உயர் அதிகாரி காத்திருந்தார். "விமானத்திலிருந்து இறக்கி விடுவேன் என்று மரியாதைக் குறைவாகப் பேசியவர் யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். "பெயரெல்லாம் தெரியாது. மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான்  எழுதவில்லையே!'' என்றேன், ஆனால் அவர் விடவில்லை.
குறிப்பிட்ட தினத்தில் டியூடியில் இருந்தவர்களை எல்லாம் திரட்டி அவரது அலுவலகத்திற்கு ஒரு நாள் வரச் செய்து, எனக்குக் காரை அனுப்பினார்.
சென்றேன். என்னைப் "பயமுறுத்திய' அதிகாரியைச் சுட்டிக் காண்பித்து விட்டு, "போனது போகட்டும். வேண்டுமானால் எனது குற்றச்சாட்டை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். யாரையும் பழிவங்க எனக்கு இஷ்டமில்லை'' என்றேன். அந்த டிராபிக் அசிஸ்டென்ட் கதி கலங்கிப் போயிருந்தார். இப்படி நான் சொன்னதும், தான் செய்ததற்கு மன்னிப்பும் கோரினார்.
கரண் சிங் அமைச்சராக இருந்த போது அவர் எப்படிச் செயல்பட்டார், மற்றவர்களைச் செயல்படச் செய்தார் என்பதற்கு இது ஒரு சோற்றுப் பதம்!
          ஒரு பத்திரிகை ஆசிரியரைப் பற்றி
தமிழகத்திலிருந்து பிரபல நிறுவனத்திலிருந்து வெளி வரும் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் டில்லி வந்திருந்தார். என் வீட்டிற்கும் வந்திருந்தார். இத்தனைக்கும் அவரது பத்திரிகையில் ஒரு தரம் கூட என் எழுத்துக்கள் வந்ததில்லை. அதனாலோ என்னவோ, கமலா அவருக்குத் தடபுடலாக உபசாரம் செய்தாள். பூரி, மசாலா பாதாம்கீர் என்று தடபுடலாக செய்தாள் என்றால். எவ்வளவு பெரிய ஐஸாக வைக்க முயற்சித்தாள் என்று கற்பனை செய்து பாருங்கள்!
கரோல்பாக் மண்டே மார்க்கெட்டிற்குப் போனோம். ஏதேதோ சாமான்கள எல்லாம் வாங்கினார். வீட்டிற்கு வந்து சாப்பிட்ட பிறகு விடை பெறும்போது, "கொஞ்சம் பணம் இருக்குமா? ஊருக்குப் போனதும் அனுப்புகிறேன்'' என்றார். அதைக் கேட்டு என் மனைவி கண் சிமிட்டினாள். அதன் பொருள்: "கொடுங்கள், நாளைக்கே உங்கள் கட்டுரைகளைப் போடுவார்.''  மனைவி சொல்லே மந்திரம் என்ற கொள்கை உடைய நான், "அதற்கென்ன சார்...தருகிறேன். எவ்வளவு பணம் வேண்டும்?'' என்று கேட்டேன். ஏதேதோ கணக்குப் போட்டு, "எழுநூறு ரூபாய்'' என்றார். நானும் கொடுத்தேன்.
அவரும் ஊருக்குப் போனார். ஆனால் பணம் வரவில்லை. பெரிய பத்திரிகையின் ஆசிரியர் ஆயிற்றே என்று. நானும் சில மாதங்கள் பொறுத்துப் பார்த்தேன்.
அதற்கப்புறம்தான் ஆரம்பித்தது எனது கஜனி முகமது ஸ்டைல் முயற்சிகள்.
அவை.... (தொடரும்)

14 comments:

 1. அடடா அதற்குள் தொடரும் போட்டு விட்டீர்களே...

  ReplyDelete
 2. முகமூடிFebruary 7, 2010 at 9:58 AM

  உங்க பேனா-ல இப்பதான் இன்க் தீரனமா; புள்ளிய வச்சு தொடரும்னுடீங்களே...ஹ்ம்!!

  ReplyDelete
 3. Karan Singh's smiling face and his Royalty are known to me. It is new to know of his personal care in his ministerial duties. Hmmm., those were the days!

  I do hope you will expose the தமிழகத்திலிருந்து பிரபல நிறுவனத்திலிருந்து வெளி வரும் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர்'s name. I always wonder why writers use 'kisu kisu'style and not mention the 'villain's'name.

  - R. Jagannathan

  ReplyDelete
 4. Dr Karan Singh seems to be a gem of a man and a Minister. Such personalities are becoming rarer nowadays. Your writing is, as usual, brilliant, poignant, and touching.

  ReplyDelete
 5. Dear Sir,

  Even I met Dr. Karan Singh once in Colombo that too in lift. His security gaurds did not allow me to get into the lift. But he allowed me and we got down at the lobby. I just smiled at him thanking his gesture he acknowledged it. I just compared Karan Singh with our TN MLAs. He is a gentleman.
  Regards
  Rangarajan

  ReplyDelete
 6. Dear Mr Jagannathan,

  "I always wonder why writers use 'kisu kisu'style and not mention the 'villain's'name. "... I got the answer. It is AV..

  Regards
  Rangarajan

  ReplyDelete
 7. Dear Mr Rangaarajan and others:
  My intention is not to defame any individual. What do we gain by knowing the name of the person in question.It would only tantamount to gossip.
  Even bad examples are good lessons.
  I have given the names of persons who deserve to be known and told about.Let us get inspired by those persons.
  In the chapters to come, I may be writing about some more persons without mentioning their names.

  AV??

  ReplyDelete
 8. அவர் பிரபல பத்திரிகை குழுமத்தின் ஆசிரியர்?

  ReplyDelete
 9. I agree with the response in not mentioning the names of the person/s with a negative strait. But I still believe they should be exposed. It will save others from going through similar experience and may be that person feels ashamed and changes himself for the better. Having said that, I will go with your decision and respect it.

  AV? I also didn't get it. Is it 'Auto Varum?'
  - R. Jagannathan

  ReplyDelete
 10. சார் 'எங்களு'க்கு மட்டும் அவர் யாருன்னு சொல்லிடுங்க. நாங்க யாரு கிட்டயும் சொல்ல மாட்டோம். எங்கள் மெயில் : engalblog@gmail.com

  Thanks.

  ReplyDelete
 11. ஒருமத்திய மந்திரியின் அரவணைப்பும், ஒரு பத்திரிக்கை ஆசிரியரின் ந்டவடிக்கையும்,நேர்மாறாக உள்ளன. பொதுவாக அரசியல்வாதிகள்தான் முறைதவறி ந்டப்பார்கள். பத்திரிக்கை ஆசிரியர்கள் நேர்மையின் உறைவிடமாக இருப்பார்கள். ஆனால் இங்கு இரண்டுமே நேர்மாறாக நடந்துள்ளது!
  பதிவிற்கு மிக்க ந்ன்றி
  மதி
  சென்னை

  ReplyDelete
 12. அஞ்சா நஞ்சன்February 14, 2010 at 7:12 PM

  'AV' -ஐ தெரியாதா? காதை கொண்டாங்க சொல்றேன்

  ReplyDelete
 13. I JUST WONDERED TO KNOW THE AVIATION MINISTERS RESPONSE AND THE NATIONAL CARRIERS OFFICIALS.


  I JUST SHARE MY EXPERIENCE THAT HAPPENED LAST YEAR. I HAD TO SEND 18 REMINDERS ABOUT MY GRIEVANCES ABOUT THE “NATIONAL CARRIER” WITH THE COPY TO ALL MOST ALL THE TOP RANKING OFFERS AND AVIATION MINISTER TO GET A ONE LETTER JUST TO ACCEPT THE ISSUE, NOT EVEN TO APOLOGIZE.


  YOU ARE BLESSED TO LIVE IN THAT GOLDEN ERA.

  ReplyDelete
 14. Please await some more great anecdotes of ministers of past

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!