” சோவும் நானும்” என்று ஒரு கட்டுரை எழுதத்தான் ஆரம்பித்தேன். அப்போது அவருடைய அப்பா என் நினைவுக்கு வந்தார். ஆகவே கட்டுரையின் தலைப்பை ”சோவின் அப்பாவும் நானும்” என்று மாற்றிவிட்டேன்.. சோவைப் பற்றி வேறொரு கட்டுரையைப் பின்னால் எழுதுகிறேன்.
* * * * சோவின் அப்பா திரு சீனிவாச ஐயர் ஒரு அட்வகேட். எப்போது . அவர் சென்னையை விட்டு செங்கற்பட்டுக்கு அருகில் மூன்று மைல் தூரத்தில் இருந்த ஆத்தூர் கிராமத்திற்கு வந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஐம்பதுகளில் அங்கு நிறைய நிலங்களை வாங்கி பெரிய அளவில் நவீன முறையில் விவசாயம் பண்ண ஆரம்பித்தார்- கிட்டத்தட்ட தனி ஆளாக!
(இவருடைய பண்ணைக்கு கல்கி விஜயம் செய்ததையும், அதைப் பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியதையும் ஏற்கனவே டாம் டாம் பண்ணி இருக்கிறேன்!)
அவருடைய பண்ணை வீட்டில்ஒரு பெரிய சுவரில், கருப்பு வர்ணம் அடித்துக் கட்டங்கள் போட்டு, வயல்களைப் பற்றிய விவரஙகள், எந்தெந்த பயிர்கள் சாகுபடி ஆகின்றன, என்றைக்கு உரம் இட வேண்டும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும் போன்ற பல புள்ளி விவரங்கள் குறிக்கப்பட்டு இருக்கும். இண்டர்காம் டெலிபோன்களை வயல்களில் கொம்பு நட்டு வைத்திருப்பார்.”முருகேசா, பம்ப் போட்டு அரை மணி ஆச்சு. மடை மாத்திடு” என்று போனில் சொல்வார்.
“என் பண்ணைக்குள் உப்பும். கிரசினும், உங்களை போன்ற் உதவாக்கரை ஆசாமிகளும்தான் வெளியிலிருந்து வரவேண்டும்” என்று நண்பர்களிடம் த்மாஷாகக் கூறுவார். தீவிர விவசாயி என்ற முறையில் வெளிநாடுக்ளுக்குச் சென்று வந்திருக்கிறார். அப்போதும் தன் கட்டுக்குடுமியை அவர் எடுக்கவில்லை.
சீனிவாச ஐயரின் கார்
ஆத்தூரில் வீடு என்று பெயர். ஆனால் செங்கற்பட்டு வீதிகளில் தான் அவரது கார் காணப்படும். அதென்ன காருக்கு அவ்வளவு சிறப்பு? அவருடைய காரால்தான்,அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டுக் கல்யாணங்களுக்குக் கூட் அவருக்கு அழைப்பு கிடைத்து வந்தது என்று கேலியாகக்கூடச் சொல்லலாம்! டாப் போடப்பட்ட கார். டாப்பை மடக்க முடியும். ஆகவே எங்கள் ஊரில் உள்ளவர்கள் தங்கள் வீட்டில் கலியாணம் நிச்சயமானதும் முதல் வேலையாக இவருடைய காரைத்தான் புக் பண்ணுவார்கள். ஜானவாசத்திற்கு மிகவும் ஐடியல் கார் ஆச்சே! யார் கேட்டாலும் கொடுப்பார். இவருடைய கார் ஓடிய தூரத்தை விட தள்ளிச் சென்ற தூரம்தான் அதிகம் என்று நாங்கள் கலாட்டா பண்ணுவோம்- --அவருக்குப் பின்னால்!
இவருடைய கார் அவ்வப்போது மக்கர் பண்ணும். எங்கு நிற்கிறதோ அங்கேயே அப்படியே விட்டு விட்டுப் போய் விடுவார்.. மறு நாள் மெக்கானிக்கிற்குச் சொல்லி அனுப்புவார்.
காரின் அவருடன் செல்பவர்கள் இடது கதவைக் கெட்டியாகப் பிடித்து கொள்ள வேண்டும். இலலாவிட்டால் திறந்து விடும்!. மற்ற சமயங்களில் ஒரு கயிறு போட்டு கட்டி இருப்பார்
“வாயேன்” என்று நண்பர்களை காரில் ஏற்றிக் கொள்வார். ஆத்தூருக்குப் போகும் வழியில் -- சுமார் இர்ண்டு மைல் தூரம் போன பிறகு--” இறங்கிக்கோ. இப்படியே மெதுவா உன் வீட்டுக்கு நடந்து போய்விடு” என்பார் குறும்புப் புன்னகையுடன். இறக்கியும் விட்டு விடுவார்!
* * * * *
நாங்கள் நடத்தி வந்த செங்கல்பட்டு சேவா சங்கத்திற்கு அவர் ஆலோசகர். “என்ன காந்தி ஜயந்தியா? என்ன பிளான்? எவ்வளவு பண்ம் தேவைப்படும்?” என்று கேட்பார். எப்படியாவது பணத்தைத் திரட்டிக் கொடுத்து விடுவார். அவரிடம் பேசி யாராலும் ஜெயிக்கமுடியாது. நகைச்சுவை மட்டுமல்ல். கிண்டல்,கேலி எல்லாம் அவருக்குப் பயங்கரமாகக் கைவந்த கலை.
தேர்தலுக்கு நின்ற ஓ.வி அளகேசனுக்கு வலது கரமாக இருந்து உதவியுள்ளார். எங்களைப் போன்ற இளைஞர்களை எல்லாம் வளைத்துப் போட்டுத். தொண்டர் படை உருவாக்கி பிரசாரத்தில் ஈடுபடுத்தினார்.
சென்னையிலிருந்து ஆத்தூருக்கு இடம் மாறியிருந்த ராமகிருஷ்ணா பள்ளிக்கு நிறைய சேவைகள் செய்வார். அங்கு நடக்கும் ஒன்பது நாள் நவராத்திரி விழாவிற்கு சென்னையிலிருந்து பிரபல் கலைஞர்களை வரவழைப்பார். தேவன், கல்கி போன்றவர்களும் வந்திருக்கிறார்கள். அப்படி வந்த பாடகர் வி. வி. சடகோபனுக்கு. ஊர் பிடித்துவிடவே அங்கேயே குடி பெயர்ந்து விட்டார்!
இவர் காமிரா நிபுணரும் கூட. அந்த காலத்தில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் தன் சகோதரருடன் சேர்ந்து இவர் எடுத்த படங்கள் மூர்த்தி-வாசன் என்ற பெயரில் முழு பக்க அள்வில் பிரசுரமாகி உள்ளன.
* * * * * *
மனதில் பட்டதைத் தயங்காமல் பேசக்கூடியவர். உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்.
சில ரயில்வே ஊழியர்கள் ஏதோ ஒரு ஆர்வம் காரணமாக ஒரு துண்டு படம் எடுத்தார்கள். கடைசி நிமிஷத்தில் ஓடி வந்து ரயிலில் ஏறுவது அபாயகரமானது என்பதை விளக்குவதற்காக!
தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்த காலகட்டம் அது (1952). அத்துடன் அவர்களிடம் நிதி வசதியும் மிகக் குறைவாக இருந்தது. தங்கள் பிராவிடண்ட் ஃபண்டிலிருந்து கடன் வாங்கி "டூ லேட்" என்ற தலைப்பில் ஒரு நல்ல ஆவணப் படத்தை உருவாக்கியிருந்தார்கள்
அவர்களுடைய அடுத்தப் பிரச்சனை படத்தை யாராவது வாங்குவார்களா என்பது தான். ரயில்வே துறை தான் முன்வரவேண்டும் ஆகவே அவர்கள் உயர் அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்ட டெல்லிக்குப் போனார்கள். படத்தைப் பார்த்த அதிகாரிகள் பாராட்டினார்கள். வாங்குவதைப் பற்றி மூச்சு விடவில்லை. குடியரசுத் தலைவருக்குப் போட்டுக் காட்ட குட்டிக்கரணம் அடித்து அனுமதி பெற்றார்கள். குறிப்பிட்ட தினம் படப்பெட்டி, புரொஜெக்டர் எல்லாவற்றுடனும் ராஷ்டடிரபதி பவன் சென்றார்கள்.புரொஜெக்டர் வைக்கப்பட வேண்டிய இடத்திலிருந்து சுமார் ஐம்பது கெஜ தூரம் தள்ளிதான் மின்சாரப் ப்ளக் இருந்தது. அவ்வளவு நீளத்திற்கு ஒயர் அவர்களிடம் இல்லை. ராஷ்டிரபதி பவனில் கையை விரித்துவிட்டார்கள். ஒயர் வாங்க பணம் தட்டுப்பாடு அங்கே இங்கே என்று பணம் திரட்டி, அலைந்து திரிந்து ஒயரை வாங்கி வந்தார்கள். படத்தைக் குடியரசுத் தலைவர் பார்த்தார் பாரட்டினார். “ இந்த மாதிரி முயற்சிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்க வேண்டும்.” என்று சொன்னார். எல்லோரும் சொன்னார்களே தவிர அடுத்த நடவடிக்கையை யாரும் எடுக்கவில்லை. சற்று மனம் தளர்ந்து ஊர் திரும்பினார்கள்,
அச்சமயம் ரயில்வே துறையின் டெபுடி மினிஸ்டராக இருந்த ஓ. வி. அளகேசனுக்குத் திரையிட்டு்க் காட்ட விரும்பினார்கள். (சீனிவாசய்யர் மூலமாகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது என் நினைவு.) சேத்துப்பட்டில் ஒரு வீட்டு வராந்தாவில் படம் திரையிடப்பட்டது. படம் முடிந்த உடன் திரு அளகேசன் அவர்கள் எல்லோரையும் பாராட்டினார். கடைசியில் ”இது பாராட்டப்பட வேண்டிய முயற்சி. இதற்கு நிச்சயமாக அரசு உதவியும் ஊக்கமும் தரவேண்டும்” என்று கூறி முடித்தார். அதற்குப் பிறகு சீனிவாசய்யர் பேச வந்தார். சம்பிரதாயமாகப் பேசி விட்டு அவர் உரையை இப்படி முடித்தார். "படத்தைப் பார்த்த அதிகாரிகளும், இந்த முயற்சிக்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்றார்கள். இப்போது மிஸ்டர் அளகேசன், நீங்களும் அப்படித்தான் சொல்லியிருகிறீர்கள். அரசு என்பது எது?.. நீங்கள் தானே அரசு?. நீங்கள் தானே இவர்களுக்கு உதவ வேண்டும்? இது உங்கள் பொறுப்பு." என்று சீரியஸாக பேசி முடித்தார்.
அளகேசனும் அவரும் நல்ல நண்பர்கள். "சீனிவாசய்யர் .....கவலைப் படாதீர்கள். நான் செய்கிறேன். " என்று அளகேசன் உறுதி அளித்தார்.
(அதற்குப் பிறகு ரயில்வே துறை படத்தை வாங்கியது என்று எனக்கு லேசான நினைவு.)
இதை இங்கு எழுதியதின் காரணம் சீனிவாசய்யர் "கட் அண்ட் ரைட்” டாக பேசத் தயங்க மாட்டார் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான்!
* * * *
சோ ஒரு அழுமூஞ்சி
ஒரு சமயம் அவரிடம் “ சோ என்கிற பெயர் வித்தியாசமாக இருக்கிறதே. அந்தப் பெயர் எப்படி வந்தது?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: “ராமசாமி சின்னக் குழந்தையாக இருந்த போது சதா அழுது கொண்டே இருப்பான். அழுமூஞ்சி நம்பர் ஒன் அவன். அவன் அழுகையை அடக்க “சோ” “சோ: என்று பயம் காட்டுவோம். அந்த பெயர் அப்படியே நின்றுவிட்டது!”
இது எப்படி இருக்கு!
//அவரிடம் பேசி யாராலும் ஜெயிக்கமுடியாது. நகைச்சுவை மட்டுமல்ல். கிண்டல்,கேலி எல்லாம் அவருக்குப் பயங்கரமாகக் கைவந்த கலை.//
ReplyDeleteஅப்போ, சோ அவர்களுக்கு இது தந்தை வழி சொத்துன்னு சொல்லுங்க.
நல்ல தகவல்.நன்றி, கடுகு சார்.
ReplyDeleteஆஹா....! சோ அவர்கள் தன் குடும்பத்தைப் பற்றி அவ்வளவாக எழுதியதில்லை....! உங்கள் தொடர்....யாருக்கும் தெரியாத விஷயங்களை சுவையாய் தருகிறது....!!!
ReplyDeleteVery informative and interesting about CHO's father. He seems to be a shining human being. I am sure CHO has inherited many of his father's excellent qualities. Thank you for this lively writeup; i coudn't control my laugh when reading the last para.
ReplyDeleteசோவின் பெயர்க்காரணம் உண்மையிலே இதுதானா,ச்சோ ஸ்வீட்.
ReplyDeleteநன்றி கடுகு சார் - காரம் மணம் குணம் நிறைந்த கட்டுரைக்கு.
ReplyDelete'Appavukku thappadhu pirantha pillai '- Naan Cho-vai chonnaen!
ReplyDeleteI cannot beat the above followers of your blog nowadays! It seems they have some alarm system in their PCs as soon as you post a new blog!
- R. Jagannathan
சிறந்த விவசாயிகளுக்காக இந்திய அளவில் வழங்கப்படும் “பாரத் க்ருஷிரத்னா” விருது இதுவரை இரண்டு நபர்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் சோ’ அவர்களின் தந்தையுமாவார். அக்காலத்திய காங்கிரஸ் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். உயர்ந்த மனிதர். இக்கட்டுரையை அளித்தமைக்கு கடுகு அவர்களுக்கு நன்றிகள் பல!
ReplyDelete//சோ ஒரு அழுமூஞ்சி
ReplyDeleteஒரு சமயம் அவரிடம் “ சோ என்கிற பெயர் வித்தியாசமாக இருக்கிறதே. அந்தப் பெயர் எப்படி வந்தது?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: “ராமசாமி சின்னக் குழந்தையாக இருந்த போது சதா அழுது கொண்டே இருப்பான். அழுமூஞ்சி நம்பர் ஒன் அவன். அவன் அழுகையை அடக்க “சோ” “சோ: என்று பயம் காட்டுவோம். அந்த பெயர் அப்படியே நின்றுவிட்டது!”
இது எப்படி இருக்கு!//
எனக்கு எப்போது சோ வை திரையில் பார்க்க நேர்ந்தாலும் சிரிப்பு வரும். மனிதர் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க ஆர்வமாய் இருப்பேன்.
இப்போ இதை படித்தவுடன் சிரித்து சிரித்து கண்ணில் நீர் வந்து விட்டது.
http://www.virutcham.com
மற்ற பதிவுகளையும் பாருங்கள்.
ReplyDelete-கடுகு
இப்போது உங்கள் பதிவைப் போய் பார்க்கிறேன்
ஓகோ.. இப்போதான் புரிகிறது...தகப்பன் எட்டடி பாய்ஞ்சா..பையன்..
ReplyDeleteஉங்கள் கதைகள் படித்திருக்கிறேன்.உங்கள் மைத்துனன் தொத்சுவின் அட்டகாசங்கள்,உங்கள் வீட்டிலேயே இருக்கும் மாமியார் தொத்சுவிற்கு செய்யும் உபசாரங்கள் சிரிப்பு சர வெடிகள்.இவ்வளவு நாளாக எங்கே ?
ReplyDeleteOMG! So much information!fortnate to have come across this blog! THANK You Sir.
ReplyDelete<< Anonymous28 August 2012 5:00 PM
ReplyDeleteOMG! So much information!fortnate to have come across this blog! THANK You Sir.>>
Thank you. I do not know who am I thanking if you are anonymous? The least you can do to me is to sign your name (It can be a psuedo name, no problem!)
Kadugu
<< Anonymous28 August 2012 5:00 PM
ReplyDeleteOMG! So much information!fortnate to have come across this blog! THANK You Sir.>>
Thank you. I do not know who am I thanking if you are anonymous? The least you can do to me is to sign your name (It can be a psuedo name, no problem!)
I have received your reply to my commment.
I only wanted to thank you personally. Now that you have written me a mail, I am saying thank you to you.
I see you that you are new to my blog. Keep visiting my blog. I will try my best to receive 'OMG comments' from readers like you!!!:) -Kadugu