December 17, 2010

காபியில் ஈ -கடுகு

``என்னப்பா காபியிலே ஈ'' என்று ஓட்டலில் ஒருவர் கேட்டதும் அதற்கு சர்வர் சொல்லும் பல்வேறு பதில்களும் நல்ல நகைச்சுவைத் துணுக்குகளாக ரொம்ப நாட்களாகப் புழங்கி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது `காபியில் ஈ' டைப் ஜோக்குகள் தொகுப்பு புத்தக விமர்சனத்தைப் படித்தேன். கிட்டத்தட்ட 170 ஜோக்குகள் அதில் இருந்ததாக எழுதப்பட்டு இருந்தது.. ஒரு சில பதில்களை விமர்சனத்தில் போட்டிருந்தார்.
அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன். கடைசியில் என் சொந்த ஜோக்கையும் தந்துள்ளேன்!..

``என்னப்பா... காபியில ஈ இருக்குதே...''
சர்வர்: ``ஏன் சார் இல்லாததையும் பொல்லாததையும் சொல்றீங்க? எங்க சார் காபி... எங்க இருக்குதுன்னு பார்க்கலாம். இதென்ன சார் இது? ஈயா? இது கொசு..!''

* சர்வர்: காபியில ஈயா? இது மிலிடரி ஓட்டல்னு போர்டு போட்டு இருக்கறதைப் பார்க்கலையா? உங்களுக்காக ஈக்குப் பதிலா ஏதாவது வெஜிடபிள் போட முடியுமா?”

* சர்வர்:  என்னது சார்... ஈயா? செத்துக் கிடக்கிறதா, சார்.”.. உங்களையெல்லாம் திருப்திப் படுத்தவே முடியாது. காபி சூடாவும் இருக்கணும். ஈயும் உயிரோடு இருக்கணும்னா நடக்காது சார்...”

* சர்வர்: சார்... இது சாதா காபி. ஈதான் இருக்கும். ஸ்பெஷல் காபி ஆர்டர் பண்ணியிருக்கணும். அப்ப பெரிசா தேனியைப் போட்டிருப்போம்,”

* சர்வர்: அந்த ஈயைப் பத்தி சொல்லாதீங்க. அடங்காப் பிடாரி. தினமும் ”சூடான காபி பக்கமே போகாதடா என்று அடிச்சு அடிச்சு சொல்லியிருக்கேன். கேட்டாதானே... வேணும் அதுக்கு. நீங்க விடுங்க. அதுக்காகப் பரிதாபப்படாதீங்க.”.


இப்போது என் ஜோக்:
* சர்வர்: காபியில ஒரு ஈயா சார்?.. நீங்க படிச்சவங்க. நான் படிக்காதவன். அதான் இந்த ஓட்டல்ல சர்வர் வேலையில் இருக்கிறேன். காபியிலே ஒரு ஈ இருக்கக் கூடாதுன்னு எனக்கு இப்பதான் முதலாளி சொல்லிக் கொடுத்தார். COFFEEயில் இரண்டு ஈ போடணும்னு எனக்குத் தெரியாது. TEA யில் மட்டும்தான் ஒரு ஈ இருக்கணும். இல்லையா சார்?'
======================================================

பாரதசாரி   அவர்கள் அனுப்பிய பின்னூட்டம்
மேலும் சில நான் கேட்டவை: 1. விடுங்க சார் அது எவ்வளவு குடிச்சிடும்?. 2. அத நீங்க ஏன் சார் குடிச்சீங்க? அது ஈ ஆர்டர் பண்ண காபி. 3. சும்மா கவலைபடாம குடிங்க, ஈ  ஃப்ரீ தான்,  சார்ஜ் செய்ய மாட்டோம்.

7 comments:

  1. //Labels: ஜோக்..ஜோக்//

    ஆஹா...
    இது செமை கடி ஜோக்!

    ReplyDelete
  2. அற்புதமான தொகுப்பு
    மேலும் சில நான் கேட்டவை:
    1. விடுங்க சார் அது எவ்வளவு குடிச்சிடும்?.
    2. அத நீங்க ஏன் சார் குடிச்சீங்க? அது ஈ ஆடர் பண்ண காபி.
    3. சும்மா கவலைபடாம குடிங்க, ஈ ஃப்ரீ தான் சார்ஜ் செய்ய மாட்டோம்.

    ReplyDelete
  3. பாரதசாரி அவர்களுக்கு,
    இதோ ஒன்று:
    ஒளவையார் என்ன சொல்லி இருக்கிறார்?: ஈ அது விலக்கேல்!( உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் உதித்த /உதைதத ஐடியா!)

    ReplyDelete
  4. :-)நல்ல டைமிங்க் சார் :-)

    ReplyDelete
  5. ஒரு முறை வெப் உலகம் பத்திரிக்கைக்கு இருபது ஜோக்குகள் எழுதி கொடுத்தேன் (எனது மாமா அங்கு இன்றும் பணிபுரிகிறார்) எல்லா ஜோக்கும் "அதோ போறாரே" என்று தொடங்கியது வேடீகை:-).அவற்றுள் இரண்டிற்கு லேசாக சிரிக்கலாம்.. அடுத்து "தப்பா போச்சு "வகையில் (உ.ம்:வாத்தியார கட்டிகிட்டது தப்பா போச்சு )20 கேட்டார்கள் திணறிவிட்டேன், தாங்களாக இருந்தால் 200 க்கு மேல் தேறும் போல் தெரிகிறது :-)

    ReplyDelete
  6. பிரமாதம் சூப்பர் ஈ...........ஈ............. ஹு..ஹு.. ஹுஹுஹு.....

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!