ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும் பொய்மை
பேசாதிருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்கவேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
திருவருட்பா- ராமலிங்க அடிகள்
Sir,
ReplyDeleteYour Tamil Muthu is always superb!!!!!!!! (You are diving deep to get excellent pearls for us) Thank you.
Kothamalli
இந்த பாடலை ஸ்ரீ. செம்பை அருமையாக பாடி இருக்கிறார். தாங்கள் கூறினால் நான் அதை தங்களுக்கு அனுப்புகிறேன்.
ReplyDelete