அன்புடையீர்,
வணக்கம்,
நமது வலைப்பூவிற்கு இன்று ஒரு வயது பூர்த்தியாகிறது. இந்த ஒரு வருடத்தில் நான் போட்ட பதிவுகள் எல்லாவற்றிற்கும் வரவேற்பு இருந்தது - ஒரு பதிவு நீங்கலாக. அது ஒரு நகைச்சுவைக் கட்டுரையாக இருந்தபோதிலும் அரசு ஊழியர்கள் மனதைப் புண்படுத்தும் என்று சிலர் கருத்துத் தெரிவித்தமையால் அதை எடுத்து விட்டேன்.
இந்த வலைப் பூவைத் துவங்கிய அன்றே பலர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இட்லி வடையில் சற்று முக்கியத்துவம் தந்து அறிவிப்பு போட்டதால் பலருக்கு இந்த தளத்தைப் பற்றி தெரிந்தது,
எழுத்தாளர் பா.ரா. அவர்கள், என் மெயில் முகவரியைக் கண்டு பிடித்து வாழ்த்துகளை அனுப்பியிருந்தார். எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள் என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார், சுஜாதா தேசிகன் ‘சபாஷ்’ போட்டார், ஆலோசனைகளையும் தந்தார். நிறைய பேர் பின்னூட்டங்களில் பாராட்டினார்கள்; பாராட்டி வருகிறார்கள்.
அனைவருக்கும் நன்றி.
நான் படித்ததை, பார்த்ததை, கேட்டதை, அனுபவித்ததை நாலு பேருக்குப் பயன் தரும் என்ற எண்ணத்தில் பதிவுகளைப் போட்டு வருகிறேன்.
” உங்கள் நகைச்சுவை கட்டுரைகளைப் படித்துச் சிரிக்கும்போது கண்களில் நீர் வந்து விடுவது உண்டு: அதே மாதிரி மனதைத் தொடும் உங்கள் கட்டுரைகளைப் படித்து நெகிழ்ந்து கணணீர் பெருக்கி இருக்கிறோம்” என்று பலர் எழுதியதை படிக்கும்போது என் கண்கள் ஈரமாயின. ஆகவே எத்தனை சிரமமாக இருந்தாலும், பொருட்படுத்தாமல் பதிவுகளை எழுதி, டைப் செய்து போட்டு வருகிறேன். இதில் கிடைக்கும் மன நிறைவுக்கு முன் என் சிரம்ங்கள் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன.
(போட்டோஷாப்பிலும் சுமார் தேர்ச்சி இருப்பதால் MASTHEAD கிராபிக்ஸும் நான உருவாக்குபவைதான்.)
இன்று டிசம்பர் 5-ம் தேதி. கல்கி அவர்கள் காலமான தேதி. காலமான தேதி என்பதை விட காலமாக ஆன தேதி என்று சொல்வதே சரியாக இருக்கும்.
என்றும் நான் வணங்கும் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை விரல்களால் தொட்டு, கண்களில் ஒற்றிக் கொண்டு, தொடர்ந்து என்னை இயக்கும்படி அவரிடம் பிரார்த்திக் கொள்கிறேன்.
மீண்டும் வணக்கத்துடன்
-கடுகு
ரீடரில் படிக்கிறதால கமென்ட்ஸ் அதிகம் போடறதில்லை. வாழ்துக்கள்! தொடார்ந்து எழுதுங்க!
ReplyDeleteAll the best.
ReplyDeleteவலைப்பூவில் பொன் விழா காண வாழ்த்துக்கள்
உங்கள் பெயர் சுண்டுவா? சூப்பர்.
ReplyDeleteஎன் முதல் நாவல்: ஐயோ பாவம் சுண்டு. ஹீரோவின் பெயர்: சுண்டு
மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,
ReplyDeleteபொன்விழா காண மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள்!
அன்புடன்
திருமதி சுப்ரமணியம்
கடுகு சார்,
ReplyDeleteஓராண்டு நிறைவு நாள் நல் வாழ்த்துக்கள். உங்கள் நற்பணி தொய்வில்லாமல் தொடர எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவாராக!
சூர்யா
திருமதி சுப்ரமணியம் மற்றும் சூர்யா அவர்களுக்கு:
ReplyDeleteமிக்க நன்றி
your wrting is different and keep originality. Keep it up sir. We pray all mighty to give you longer life to carry out this activity.
ReplyDeleteGood thing happening around you அவர்களுக்கு, இப்படி முகம் தெரியாத வாசகர்கள் தெரிவிக்கும் வாழ்த்துகளை எனக்கு அளிக்கப்பட்ட மெடல்களாக பாவிக்கிறேன். நன்றி
ReplyDeleteஎன்னுடைய ரிடயர்ட் லைஃபை உங்கள் வலைப்பதிவுகள் ரொம்பவும் அர்த்தமுள்ளதாக ஆக்கிவிட்டன. முடிந்தவரை நிறைய பின்னூட்டங்களும் போட்டிருக்கிறேன் - அதனால் உங்களுக்கு (என் பெயர்) தெரிந்தவனாக முயற்சித்திருக்கிறென்! உங்கள் உடல் நலத்திற்கு என் பிறார்த்தனைகள். நீண்ட காலம் உங்கள் திறமையை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன். நன்றி. - ஜெ.
ReplyDeleteJagannathan அவர்களுக்கு, உங்கள் பெயர் தெரிந்த பெயர்.பாராட்டுகளுக்கு நன்றி,
ReplyDeleteCongrats, Sir.
ReplyDeleteஅன்புள்ள அனானிமஸ்: நன்றி அனானிமஸ் என்பதற்குப் பதில் ஏதாவது புனைப்பெயர் வைத்துகொண்டு எழுதினால் நன்றாக இருக்குமே!
ReplyDeleteThanks for your advise, Mr. Kadugu. Now new a/c name.
ReplyDeleteRESHSU said... அவர்களுக்கு, நல்ல பெயர்தான். எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை. சீன பெய்ர் மாத்ரி இருக்கிறேதே!!!
ReplyDeleteஅடடே.. அதற்குள் ஒரு வருடமா??
ReplyDeleteவாழ்த்துகள்.
மேலும் பல வருடங்களுக்கு இந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் ப்ரார்த்திக்கிறேன்.
Sir,
ReplyDeleteOne year has gone like a second.....This one year was really superb!!!! My best wishes for the second year!!! Let the KADUGU fry with more smell & sound.
Kothamalli
Thanks to all
ReplyDeleteகடுகு சார்,
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
Just ஒரு வருடம்தானா? I thought (felt?) ரொம்ப நாளான மாதிரி...ஒரு ஒட்டுதல்...
நீங்கள் சொன்ன மாதிரி நிறைய முகம் தெரியாத விறிகள் உங்களுக்கு...You deserve that!!!
ஜமாயுங்கள்! நாங்கள் இருக்கிறோம்!
Essex சிவா
<<<< ஜமாயுங்கள்! நாங்கள் இருக்கிறோம்!
ReplyDeleteEssex சிவா >>>>
மிக்க நன்றி.”நாங்கள் இருக்கிறோம்!” என்று எழுதி இருப்பதைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தேன். இந்த ஆண்டு மேலும் சிறப்பான பதிவுகளைப் போடப் பார்க்கிறேன்.
Dear Sir,
ReplyDeleteVanakkam. I'm a regular reader of your blog.
I thoroughly enjoy reading it, but never bothered to drop in a comment, very sorry for that. Your blog is very interesting and highly informative. Please continue your efforts.
Thank you,
Shriram
Shriram அவர்களுக்கு,
ReplyDeleteThanks for your comments. It is OK if you had not commented earlier.