ஜேக் பார் (JACK PAAR ) ஒரு காமெடியன். அமெரிக்க ரேடியோ, டிவி, திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். சென்ற நூற்றாண்டு ஆசாமி.(1918-2004)
அவர் எழுதிய புத்தகங்களை எல்லாம் நான் வைத்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.
தன் ரேடியோ அனுபவங்களை நகைச்சுவையுடன் எழுதியுள்ளார். அதிலிருந்து ஒரு சமபவத்தை இங்கு தருகிறேன்.
ஜேக் பார் ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணினார். அந்த நிகழ்ச்சியை ரகசியமாக ரிக்கார்ட் பண்ணினார். பார்ட்டிக்கு வந்தவர்களை வாயிலிலேயே கை குலுக்கி வரவேற்றார். அப்போது அவர்களிடம், ``இன்று காலை என் அம்மாவைக் கொன்று விட்டேன்'' என்று முகத்தில் புன்னகையடன், `வெல்கம்... வெல்கம்...' என்று கூறுகிற பாவனையுடன் சொன்னார். வருகிறவர்கள் அவரிடம் கை குலுக்கியபடி அவர் என்ன சொன்னார் என்பதைக் காதில் வாங்காமல் ``ஓ... குட்... குட்...'' என்றும், `கிரேட்', `சந்தோஷம்' என்றும் சொன்னார்கள். ஒருத்தர்கூட ``என்னது... கொலை பண்ணி விட்டாயா?'' என்று அதிர்ச்சியடையவில்லை.
பின்னால் இதை அப்படியே ஒளிபரப்பினார்களாம்.
இப்படி பல பிராக்டிகல் ஜோக் செய்வாராம் இவர்.
a person with great presence of mind...
ReplyDeleteits better if you suggest us his best books
scrazyidiot.blogspot.com
Books by Jack Paar: Which I own/read:
ReplyDeleteI kid you not, My Saber is bent. P.S.Jack Paar,
Three on a tooth brush
நல்ல தமாஷ்:-) பனிரென்டாம் வகுப்பில் என் வகுப்புத் தோழன், மாடியிலிருந்து தனக்கு பிடிக்காத ஆசிரியர்களை சத்தமாக அழைத்து, "குட் மார்னிங்க்" என்ற முக பாவத்தோடும் உட்ல மொழியோடும், "வணக்கம் வை டா" என்பான், அவர்களும் பதிலுக்கு "குட் மார்னிங்க் " சொல்லுவார்கள் (என்று நினைக்கிறேன்). அந்த நியாபகம் வந்தது இதை படித்ததும்.
ReplyDelete