December 31, 2010

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

வணக்கம்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பழைய பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். 1845ல் பிரசுரமான புத்தகம். பிரமாதமாக இருந்தது நகைச்சுவை. படிக்கும் போதே உள் மனதில் ’இதுமாதிரி நாமும் முயற்சி பண்ணலாமே' என்று தோன்றியது.
எழுத ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் எழுதி முடிக்கத் திட்டமிட்டேன். ஆனால் பல காரணங்களால் 10, 20 பக்கங்கள் எழுதியதும் தொடரமுடியவில்லை. அதன் பிறகு திடீரென்று `’உன்னால் எழுதிவிட முடியும்' என்று என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு ஒரே மூச்சில் எட்டு அத்தியாயங்கள் எழுதினேன். தனித் தனி எபிஸோட் மாதிரி அமைந்திருப்பதால் அத்தியாயங்கள் எழுதிக் கொண்டே போகலாம்.
கதையின் பெயர்: அம்புஜத்தின் அர்ச்சனைகள். அத்தியாயங்கள் ஒரு தொடர்புடன்  இருந்தாலும் தனித் தனி அர்ச்சனைகளாகவும் படிக்க இயலும். கதைக்குப் படம் போட யாரைப் பிடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். படங்கள் இல்லாமல்கதை ரசிக்குமா என்று சந்தேகம் எற்படுகிறது/. ஓவியர்  ஒருவர் அகப்பட்டு, அவரும் காலதாமதம் செய்யாமல் படம் போட்டுக் கொடுத்தால், பொங்கலன்று அந்தத் தொடரைத் துவங்குகிறேன்..

மீண்டும் அனைவ்ருக்கும்  நலவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் - கடுகு

8 comments:

 1. நான் தங்கள் ஆக்கங்களை தினமும் படிக்கிறேன். தங்களுக்கு என் நன்றி கலந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்!

  தங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி!

  உங்கள் மனதில் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் சிறப்பாக நிறைவேறி, உங்கள் மனம் மகிழ்ந்திருக்க, இறைவனைப் பிரார்த்தித்து, எங்களது வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறோம்!

  அம்புஜத்தின் அர்ச்சனைகளைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். இன்னும் இரண்டு வாரம் பொறுமையாக இருக்கணும். அதற்குள் உங்களுக்குப் பிடித்த மாதிரி, படம் வரைய ஓவியர் கிடைத்து விடணும்.

  நன்றி,

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 3. வணக்கம் கடுகு சார்,
  (belated|) Christmas மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  Gothenburg (Sweden) போன வருடம் சென்றிருந்த போது, ஒரு கடுகு பாக்கெட் கிடைக்காமல் அலைந்தது ஏனோ இப்போது நியாபகத்திற்கு வருகிறது! கடுகை சும்மா நினைக்ககூடாது!!!

  Essex சிவா

  ReplyDelete
 4. மதிப்புக்குரிய கடுகு சார் அவர்களுக்கு,

  வணக்கம். தங்களின் வலைப்பூவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இந்த வயதிலும் (?!) சளைக்காமல் எழுதி வருகிறீர்கள். தலைப்புப் படத்தையும் விதம் விதமாக டிஸைன் செய்கிறீர்கள். விடாமுயற்சிக்கும் சலியாத உழைப்புக்கும் திரும்பத் திரும்ப கலைஞரை உதாரணம் காட்டுவதை விட்டுவிட்டு இனி தங்களை உதாரணமாகச் சொல்லலாம் என்பது என் கருத்து.

  மிக்க அன்புடன்,
  ரவிபிரகாஷ்.

  ReplyDelete
 5. புதிய தொடர் ஒன்றைத் தாங்கள் வலைப்பூவில் ஆரம்பிக்கவுள்ளது குறித்துப் பெரிதும் மகிழ்கிறேன். அப்படியே, 'பேராசிரியர் பெரியசாமி' கட்டுரைகளையும் இயன்றபோதெல்லாம் பதிவிட்டால் மகிழ்வேன்.
  ‍- ரவிபிரகாஷ்

  ReplyDelete
 6. அன்புள்ள ரவி அவர்களுக்கு,
  உஙகள் பாராட்டுக்கு மிக்க நன்றி. பெரியசாமி கதைகளைப் போடுகிறேன்.

  ReplyDelete
 7. ESSEEX SIVA அவர்களுக்கு, ஸ்வீடன் போனாலூம் கடுகு உங்களைப் பாடு படுத்துகிறது என்று சொல்லுகிறீர்கள். புரிந்து கொண்டேன்! இதைத்தான் அறிஞர்கள் ‘விடாது கறுப்பு’என்கிறார்களோ!:)

  ReplyDelete
 8. Sweden சென்றாலும் நான் கடுகை (வலைப்பூவையும்!) விட மாட்டேன் என்று சொல்ல வருகிறேன்!
  எளிதாக கிடைக்கும் (நம்ம ஆட்கள் கடைகள் தான் எங்கும் இருக்குமே!) என்று சிறிது அலட்சியமாக இருந்து விட்டேன்!
  இது கிடைக்காமல் செய்த சமையல்...என்ன கொடுமை சார் அது!

  Essex சிவா

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :