செப்டம்பர் 11’ம் தேதி அமெரிக்க சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்ட தேதி. நியூயார்க் நகர இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு எரிந்து நொறுங்கி வீழ்ந்தது. ஏன். ராணுவ கேந்திரமான பென்டகன் கட்டடமும் தாக்கப்பட்டது.
2001 செப்டம்பர் 12 அன்று நடந்த உண்மைச் சம்பவம் ஒன்று சமீபத்தில் எனக்குத் தெரிய வந்தது. அதை இங்கு தருகிறேன்.
· *
ஒரு வகையான புற்று நோய்ப் பிணியாளர்களுக்குப் புதிதாக BONE MARROW செலுத்தப்பட்டால் அவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு. ரத்த தானம் மாதிரி. இதுவும் ஒரு தானம் தான், என்றாலும் தானம் செய்பவரை சில நாட்களுக்கு முன்னதாகத் தயார் செய்ய வேண்டும். அவருக்கு மருந்து, மாத்திரைகளும் சில ஊசி மருந்துகளும் தரப்பட வேண்டும். இந்த மருந்துகள் மிகுந்த வலியை ஏற்படுத்துமாம்.;
ஒரு நோயாளிக்கு BONE MARROW தேவை என்று கேள்விப்பட்ட ஒருவர் தானம் கொடுக்க முன்வந்தார். (அவர் ஒரு மருத்துவர் மட்டுமல்ல; புற்றுநோய் மருத்துவரும் கூட. மேலும் அவர் ஒரு இந்தியர்..) தானம் BONE MARROW செய்வதற்கு முன் போடப்படவேண்டிய மருந்துகளைக் கொடுத்தார்கள்.. செப்டம்பர் 11’ம் தேதி காலையில் அவரிடமிருந்து தேவையான அளவு BONE MARROW எடுத்தார்கள், நார்த் கரோலினா மருத்துவமனை டாக்டர்கள். அதை நோயாளி உள்ள மருத்துவமனைக்கு மறு நாள் அனுப்ப வேண்டும்.
அப்போது அவர்களுக்கு டி.வி.,யில் வந்த அறிவிப்பு அதிர்ச்சியைத் தந்தது: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து சிவில் விமான சேவைகளும் உடனடியாக நிறுத்தப்படுகின்றன. இரட்டை கோபுரம் தாக்கபட்ட செய்தியையை விட இந்த செய்தி அதிக அதிர்ச்சியை அந்த மருத்துவர்களுக்கு ஏற்பட்டது. காரணம், BONE MARROW போய்ச்சேர வேண்டிய மருத்துமனை இத்தாலியில் இருந்தது. அங்கு BONE MARROW-வைப் பெறவேண்டிய ஒருவரைத் தக்கபடி தயார் பண்ணி வைத்திருந்தார்கள். மறு நாள் இந்த BONE MARROW அவருக்கு கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் இறந்து போவது நிச்சயம்.
மருத்துவர்களுக்கு ஒரே கலக்கம். என்ன செய்வது என்று தெரியவில்லை. நாடே பெரிய அதிர்ச்சியில் அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை. தீவிரவாதிகள் இன்னும் எங்காவது குண்டு வைத்திருப்பார்களோ என்று அரசு அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் அச்சப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பாதுகாப்புப் பணிகளை அசுர வேகத்தில் செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த சமயத்தில் யாரிடம் என்ன உதவி கேட்பது? யார் காது கொடுத்துக் கேட்பார்கள்? என்று அமெரிக்க மருத்துவர்கள் மட்டுமல்ல, இத்தாலியில் உள்ள மருத்துவர்களும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள்.
முயன்றுதான் பார்ப்போமே என்று மருத்துவமனை அதிகாரி, ஒரு உயர் ராணுவ அதிகாரியிடம் விவரங்களைச் சொன்னார். “BONE MARROW இத்தாலிக்குப் போகவேண்டும்; அதுவும் இன்றே! ராணுவம் தவிர வேறு யாராலும் உதவி செய்ய முடியாது.” என்றார்.
அத்தனை பரபரப்பிலும் அந்த ராணுவ அதிகாரி யார் யாருக்கோ போன் பண்ணினார். உயர் மட்டத்தில் மிகவும் விரைவாக முடிவெடுத்தார்கள்: அந்த BONE MARROW வை இத்தாலிக்கு எடுத்துச் செல்ல ஒரு ராணுவ விமானத்தை மறுநாள் கொடுக்கச் சம்மதித்தார்கள்.
ஒரு டாக்டர் BONE MARROW வை எடுத்துக் கொண்டார். விமானப் படை தளத்துக்குச் சென்றார்.. ஒரு விமானம் தயாரக இருந்தது.
ஒரு டாக்டர் BONE MARROW வை எடுத்துக் கொண்டார். விமானப் படை தளத்துக்குச் சென்றார்.. ஒரு விமானம் தயாரக இருந்தது.
ஒரே ஒரு பயணியை ஏற்றிகொண்டு BONE MARROWவும் இத்தாலிக்குக் குறித்த காலத்திற்குள் சென்றது.
அங்கு நோயாளிக்கு அது தரப்பட்டது.. அவர் பிழைத்துக் கொண்டார்.
மனிதம், அர்ப்பணிப்பு, காருண்யம், தீர்மானம், செயல் திறன் - என்ற எல்லாவற்றிற்கும் உதாரண புருஷன் அந்த டாக்டர். - ஜெ.
ReplyDelete