போய்க் கேளு, சொல்லுவார்கள்!
அமெரிக்க ரேடியோ, டி.வி.களில் பல நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ் பெற்றவர் ஆர்ட் லிங்க்லேட்டர். (ART LINKLETTER) அவர் KIDS SAY THE DARNDEST THINGS, KIDS STILL SAY THTE DARNDEST THINGS, Oops! Or, Life's Awful Moments, I Wish I'd Said That! My Favorite Ad-Libs of All Time என்று பல நகைச்சுவைப் புத்தகங்களை எழுதி உள்ளார். (சில புத்தகங்கள் என்னிடம் உள்ளன.)
ஒரு சமயம் அவர் ஒரு மன நோய் மருத்துவ மனைக்கு விஜயம் செய்தார். அங்கு ஒருமூதாட்டியைப் பார்த்தார். அவர் மன நோயாளி மாதிரி இல்லாமல் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
அவரிடம் சென்று ” ஹல்லோ...குட் மார்னிங்...நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
மூதாட்டி அவரை ஏற இறங்கப்பார்த்து விட்டு “ தெரியலையே.. ஒண்ணு செய்.. இங்கு ரிசப்ஷனில் போய் கேட்டால், அவர்கள் நிச்சயமாகச் சொல்வார்கள்.. போ.. போய் கேட்டுத் தெரிஞ்சுக்கோடாப்பா..!” என்றார்!
No comments:
Post a Comment
............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!