September 14, 2011

புள்ளிகள்; : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறுவனாக இருந்த போது வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டார். ஆனால் அதில் ஓரளவே தேர்ச்சி பெற்றிருந்தார்.
ஒரு சமயம அவர் ஒரு பிரபல  CELLO  கலைஞரைப் பர்க்கப் போனார். அவரிடம் “ உங்கள் முன் நான் வயலின் வாசித்துக்காட்ட விரும்புகிறேன்” என்றார்.
“செய்யுங்கள்.. வாசித்துக் காட்டுங்கள்: என்றார் அவர்.
ஐன்ஸ்டீன் வாசித்துக் காட்டினார்.சுமாராகத்தான் இருந்தது  அவரது வாசிப்பு.
பிறகு அவரிடம் ஐன்ஸ்டீன் “ நான் வாசித்தது எப்படி இருந்தது?” என்று ஆவலுடன் கேட்டார்.
 ஸெல்லோ கலைஞருக்கு என்ன சொல்வதென்று ஒரு கணம் தெரியவில்லை.
பிறகு அவர் ”  YOU PLAYED VIOLIN  RELATIVELY WELL!" என்றாராம்!

1 comment:

  1. ஐன்ஸ்டைன் பற்றி சுஜாதா எழுதிய 'யுக புருஷர்' கட்டுரை நினைவுக்கு வந்தது...

    ஐன்ஸ்டைன் என்ன சாதித்தார் என்பதைப் பற்றிப் பலருக்குக் குழப்பம் இருக்கிறது. ஆல்பர்ட் நார்த் வைட்ஹெட் என்னும் அறிஞரிடம் ஒரு பத்திரிகை நிருபர், “உலகத்தில் ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி புரிந்தவர்கள் மூன்று பேர்தானாமே?” என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “இரண்டு பேர் இருக்கிறார்கள். மூன்றாவது யார் என்றுதான் யோசிக்கிறேன்” என்றாராம்.

    “நீங்கள் ஏரோப்ளேனில் கிழக்கு நோக்கிப் பயணம் செய்யும்போது ரிலேட்டிவிட்டிபடி ஒரு மைக்ரோ செகண்டு இளமையாகிறீர்கள்… ஏரோப்ளேன் சாப்பாட்டைச் சாப்பிடாத பட்சத்தில்!” என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

    ஐன்ஸ்டைன் இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியபோது, ஸ்விஸ் நாட்டில் ஒரு பேட்டண்ட் உரிம அலுவலகத்தில் கிளார்க்காக இருந்தார். வயது 26. கல்யாணமாகி, கையில் குழந்தை. ஒழுங்காகச் சம்பளம் கிடைக்கும் என்று அரசு அலுவலில் சேர்ந்தவர், வேலைக்கு நடுவிலும் மத்தியான டிபனை விட்டுவிட்டுப் பிரபஞ்சத்தை யோசித்தார்.

    சாதனைகளை எல்லாம் மிஞ்சிய ஒரே மனிதராக… க்வாண்டம் இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ், அணுசக்தி, big bang எல்லாவற்றுக்கும் அடிகோலிய ஐன்ஸ்டைனை ‘யுகபுருஷர்’ (Person of the Century) என்று அறிவித்தது ‘டைம்‘ பத்திரிகை.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!