September 14, 2011

"நிஜ கிருஷ்ணன் வந்து

நாலாயிரமும் நானும் - பிற்சேர்க்கை   http://kadugu-agasthian.blogspot.com/2011/08/blog-post_08.html  பதிவிற்கு வந்த ஒரு  பின்னூட்டம். அதைப் பதிவாகப் போடுகிறேன். எழுதியவர்:: Ganpat
------------------:

//” புத்தகங்களையா தலையில் தூக்கிகொண்டு போகிறோம்? ஆழ்வார்களின் திருவடிகளைத்தானே தலை மேல் வைத்துக் கொண்டு போகிறோம்?” //
ஆஹா என்ன அறிவு! என்ன பக்தி!! என்ன ஞானம்!!! மெய் சிலிர்த்தேன்!

இதே போல ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி.. அன்று கோகுலாஷ்டமி தினம்.மதியம் ...

எல்லார் வீட்டிலும் பட்சணம் மணக்கிறது.
ஒரு குழந்தை (வயது 4 இருக்கும்)
தன் வீட்டு சமையல் அறையில் நுழைகிறது ..

அங்கு பட்சணம் செய்துகொண்டிருக்கும் தன அம்மாவிடம் பட்சணம் கேட்கிறது.அம்மா சொல்கிறாள்.
"சாயங்காலம் பூஜை முடிந்து நைவேத்தியம் ஆனதும் உனக்குதாண்டா கண்ணு முதலில்!!கொஞ்சம் பொறுத்துக்கோ ராஜா!!"
ஒரே ஓட்டம அங்கிருந்து குழந்தை போன இடம் தெரியவில்லை!
ஒரு அரை மணி நேரம் கழித்து அவன் திரும்ப வருகிறான்.வாய்,கையெல்லாம் பட்சணம்!

"எதுடா உனக்கு இது?" என அம்மா வினவ,
அவன் மழலை மாறாமல் "பக்கத்தாத்து மாமி கொடுத்தா!" என்கிறான்!

என்ன இது! இவன் ஏதாவது தெரியாமல் எடுத்து வந்து விட்டானா என்ன,என்ற ஐயத்துடன்,பக்கத்து வீட்டிற்கு விரைகிறாள் அம்மா.

அங்கு அந்த மாமியும் பட்சணம் செய்துகொண்டிருக்கிறாள்.

"மாமி! ரங்கப்பாவிற்கு பட்சணம்??" என்று இழுக்க,

"அட! அவன் ஆசையா கேட்டான்;நான்தான் கொடுத்தேன் மாமி!" என்கிறாள் அவள்.

"என்ன இது? இன்னும் பூஜை,நைவேத்தியம்!!", என்று அம்மா இழுக்க,அந்த மாமி சொல்கிறாள்..

"நிஜ கிருஷ்ணன் வந்து கேட்கும்போது,பொம்மை கிருஷ்ணனுக்கு என்ன மாமி நைவேத்தியம் வேண்டியிருக்கு?"

இதில் அம்மா எனது பாட்டி;குழந்தை என் அப்பா;
என் பாட்டி இதை சொல்லக்கேட்டு வியந்து போயிருக்கிறேன்!

அதே உணர்வு இவர்கள் சொன்னதை கேட்டதும் வந்தது!

5 comments:

  1. மதிப்பிற்குரிய ஐயா,
    நீங்கள் அளித்திருக்கும் இந்த கெளரவத்திற்கு என் மனமார்ந்த நன்றி! வணக்கம்.
    அன்புடன்,
    Ganpat

    ReplyDelete
  2. அன்புள்ள கடுகு ஸார்,

    Ganpat-ன் பகிர்வு மிக அருமை. என்ன ஒரு மனப் பக்குவம் அந்தப் பக்கத்தாத்து மாமிக்கு!!

    ReplyDelete
  3. ஆம்,, கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து வணங்குவதுதான் கிருஷ்ண ஜயந்தி. அந்த மாமியோ குழந்தையைக் கண்ணனாக பாவித்து விட்டாள்!.. இப்படி மனதைத் தொடும், பக்குவப்படுத்தும் நிகழ்ச்சிகள் அன்றாடம் நடந்து கொண்டுதானிருக்கின்றன... கண்ணில் பட்டாலும் நம் மனதில் படுவதில்லையே!

    ReplyDelete
  4. நெகிழ்ந்துவிட்டேன்.. இந்த பக்குவம் வர என்ன பேறு பெற வேண்டுமோ!

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    நிஜம் தான்.
    குழந்தையை விட தெய்வம் பெரிதில்லை.
    நன்றி ஐயா.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!