September 19, 2011

படம் யாரோ: ஜோக் நான்!

 பல பல வருஷங்களுக்கு முன்பு குமுதம் இதழில் ஒரு போட்டி வைத்தார்கள். அரசியல் தலைவர்களின்  சம்பந்தமான  7,8 புகைப்படங்களைப்   போட்டு அதற்கு எற்ற மாதிரி சுவையான வசனங்களை எழுதச் சொல்லியிருந்தார்கள்.   (இப்போது  குமுதத்தில் வரும் கிளிக் கலாட்டா பாணியில்). அதில் நான் கலந்து கொண்டேன். முதல் பரிசும் பெற்றேன். அதிலிருந்து எந்தப் பத்திரிகையில் எந்த புகைப்படத்தை பார்த்தாலும், ஜோக் எழுத முயற்சிப்பேன். சும்மா டயம் பாஸ்தான்!
 இன்டர்நெட்டில் 60-70 வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த பல பத்திரிகைகளை  இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் வரும்  பல ஜோக்குகள்  புரிவதில்லை. சில படங்களுக்கு ஏற்ற மாதிரி நாமே ஜோக் எழுதலாமே என்று அதி அற்புதமான  (!) யோசனை தோன்றியது.. அதன் பலனை அனுபவியுங்கள்!  முதலில்  ஒரு படம் .

1. பைசா கோபுர ஸ்டாப் வந்தாச்சு.. எல்லாரும் இறங்கிடலாம்...

2. என்னிக்கும்  இவன் நம்ப மாதிரி  இருக்கமாட்டான்...கோணல் புத்திக்காரன்.

3. அவன் நிக்கற ஸ்டைலைப் பாரேன்.

4. இவர்தான் கோபுரத்தை கட்டின கான்டிராக்டராம்!

5. பாவம். இடது கால் ஊனம் போல் இருக்கிறது.

5 comments:

  1. இப்ப சரி பண்ணி இருக்கிறேன்.ஹி..ஹி..

    ReplyDelete
  2. கடுகு சார்,
    அம்புலிமாமா புத்தகங்கள் அனைத்தும்,மாதம் வாரியாக 1948லிருந்து,2006 வரை HTML Format இல் அவர்கள் வலைதளத்தில் கிடைகின்றன.மிக அருமையாக உள்ளது.இதைப்போல ஹிந்து,விகடன்,கல்கி,குமுதம் ஆகியோரும் இதே போல செய்தால் மிக நன்றாக இருக்கும்.நல்ல ஒரு நிரந்தர ஆவணமாகவும் மாறும். உங்கள் influence ஐ பயன்படுத்தி நீங்கள் முயலுவீர்களா?
    நன்றி

    ReplyDelete
  3. இதுக்குத் தான் குளிச்சிட்டு பஸ்ஸில ஏறனுங்கிறது

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!