கூகுளாண்டவர் என்ற பெயரை யார் யோசித்துக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பெயர் மிகவும் பொருத்தமானதுதான் என்பது என் அபிப்பிராயம்.
கடவுளுக்கு மூன்று சிறப்பு உண்டு.என்று MORAL STUDIES -வகுப்பில் படித்திருக்கிறேன்.
அவை -OMNIPOTENT, OMNISCIENT மற்றும் OMNIPRESENT என்று விளக்கப்பட்டது. அதாவது அவர் சர்வ வல்லமை படைத்தவர், சர்வ வியாபி, மற்றும் அனைத்தையும் அறிந்தவர்.
கூகுளாண்டவரருக்கும் இந்த மூன்று திறமையும் இருக்கிறது.
அலாஸ்காவாக இருந்தாலும் அய்யம்பேட்டையாக இருந்தாலும் இந்த ஆண்டவரைத் தரிசிக்க முடியும்.. ( சர்வ வியாபி!)
கோடிக்கணக்கான கோப்புகளிலிருந்து நாம் தேடும் தகவலைக் கண்டுபிடித்துக் கொண்டு வரும் சர்வ வல்லமை படைத்தவர்..
நாம் எந்தெந்தவிஷயங்களைத் தேடினோம், எங்கு நுழைந்து எங்கு வெளியே வந்தோம் எனபவை போன்ற தகவல்களை அறிந்து வைத்திருப்பதுடன் தன் நினைவிலும் வைத்திருப்பார்!. (சர்வ ஞானி))
கூகுளாண்டவர் அவதாரம் எடுத்தபின் பல சிறு தேவதைகள் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டன.
அகராதி தேவதை, கலைக்களஞ்சிய காவல் தெய்வம், பொது அறிவு பகவான் தெஸாரஸ் ஈஸ்வரன் போன்ற பலருக்கு மௌஸ் (!) போய்விட்டது!
பின்குறிப்பு -1 கூகுளாண்டவர் பற்றிய ஒரு ஆன்மீகக் கட்டுரையை யாராவது எழுதி இருக்கிறார்களா? தல வரலாறு? கூகுளாண்டவர் பதிகம்? அகவல்?
பின்குறிப்பு -2 : இதை எழுதும்போது ’என்சைக்ளோபீடியா பிரிட்டனிகா”வைப் பற்றி நான் படித்த சில சுவையான தகவல்கள் நினவுக்கு வந்தன. அவற்றைத் தனிப் பதிவாகத் தருகிறேன்.

கடுகு தாளிப்பு அபாரம்.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஒரு கண்டுபிடிப்பு வரும்போது இன்னொன்று சிறிதாகி விடுகிறது.
நன்றி ஐயா.