நான் வார்த்தைகளின் காதலன். அழகான கருத்துகளை அழகான முறையில் அழகான வார்த்தைகளைக் கொண்டு தொடுக்கப்படும் கவிதைகளையும் பொன்மொழிகளைம் படிக்க எனக்கு ஆர்வம் உண்டு.. தமிழ், ஆங்கில பாடல்களிலும் இலக்கியங்களிலும் உள்ள அழகை ரசிப்பவன். பலவற்றை என் நோட்டுப்புத்தகஙகளில் எழுதிக் கொள்வேன். சமீபத்தில் ஒரு பத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு அழகான பொன்மொழி கண்ணில் பட்டது:
சுமார் 500 வருஷங்களுக்கு முன்பு, பிரஞ்சு எழுத்தாளர் Montaigne எழுதியது. இவரது புத்தகங்கள் 75 மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளனவாம்.
அவர் எழுதிய ஒரு அழகிய கருத்தைப் பாருங்கள். I have gathered a posie of other men's flowers,
and nothing but the thread that binds them is my own.
--Montaigne, 1533-1592
*a small bunch of flowers
அடாட,என்ன நயம்! என்ன அடக்கம்!
* * *
தாளிப்பு என்ற பெயரை வைப்பதற்கு முன்னால், படித்ததில் பிடித்தது, பலசரக்கு, அஞ்சறைப் பெட்டி, சரடு, தேங்காய்- மாங்காய்- பட்டாணி,-சுண்டல், கதம்பம், மஞ்சரி, நான் நெய்தது என்றெல்லாம் யோசித்தேன் அப்போது இந்தக் கவிதையைப் படிக்கவில்லை. படித்திருந்தால்

தொடுத்த மலர்கள் என்று பெயர் வைத்திருப்பேன்.
No comments:
Post a Comment
............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!