July 07, 2011

கிண்டல்கார மகாராஜா

கிண்டல்கார மகாராஜா

நகைச்சுவைக்குப் புகழ்பெற்ற ஏர் இந்தியா மகாராஜா பல வருஷங்களுக்கு முன்பு  `திஸ் மேக்ஸ் நோ ஸென்ஸ்' ன  THIS MAKES NO SENSE என்ற துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டிருக்கிறார். . அதிலிருந்து சில பகுதிகள்:

இந்தியாவிற்கு வந்தால் வயிற்றுக் கடுப்பு, சீதபேதி எல்லாம் ஏற்படும் என்பதை நம்பாதீர்கள். தினமும் ஒரு `இன்டெஸ்டொபான்' மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும்.

உலகில் ஒரே ஒரு இந்தியாதான் இருக்கிறது. வருஷத்தில் 15 மிலியன் ஜனத்தொகை ஏறுவதால் இந்தியா மாறிக் கொண்டே இருககிறது. ஆகவே விரைவில் வாருங்கள்.

பம்பாயில் பல பெண்கள் வாழைப்பழம் விற்பதைப் பார்க்கலாம். வருஷம் முழுவதும் ஒரு பழம் கூட விற்க மாட்டாள். ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று போலீஸ் நிர்ப்பந்தம். அதற்காகத்தான்...

கிராப் செய்து கொள்ள வேண்டுமெனில் நடைபாதையிலேயே முடி அலங்காரக் கலைஞர் செய்து விடுவார். ஹேர் கட்டிங்கிற்கு 12 சென்ட். ஆனால் அவரால் ஏற்படும் கத்திக் காயத்திற்கு டிராவலர் செக் கொடுத்தால் போதும்.

பம்பாயில் உங்கள் உறவினர் இருந்தால் அவர்களைச் சந்திக்க வாருங்கள். உங்களுடன் எங்கள் கார்ப்பரேஷன்காரர்கள் கண்ணாமூச்சி விளையாடுவார்கள். ஆமாம், நகரில் வீதிகளின் பெயர்களை எல்லாம் மாற்றி விட்டார்கள். பம்பாய் தபால்காரர் உங்களிடம் வழி கேட்டால் தயவு செய்து உதவுங்கள்.

டெலிபோனுக்கு அருகில் வெண்தாடிக் கிழவர் ஒருவர் உட்கார்ந்திருந்தால் அவரிடம் அன்பாக இருங்கள். ஒரு டெலிபோன் நம்பரைப் பிடிக்க அவர் கறுத்த முடி இளைஞனாக இருந்த காலத்திலிருந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்!


உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆக்ஸ்போர்டில் படித்தவர்கள் கூட போஸ்டாபீஸ் வாசலில் உட்கார்ந்து எழுதித் தரும் வேலை செய்வதைப் பார்க்கலாம். காதல் கடிதங்களுக்கு குறைந்த சார்ஜ் வாங்குவார்கள்.


எங்கள் ஓட்டலில் `டிப்ஸ் தராதீர்கள்' என்று நிறைய போர்டுகள் இருக்கும். விடிவதற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பு ஓட்டலை விட்டுக் கிளம்பினால் ஓட்டல் வராந்தாக்கள் தூங்கிக் கொண்டு இருக்கும் போது புறப்பட்டால் பிழைத்தீர்கள்!


இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இந்தியன் ஏர்லைன்ஸின் தனி உரிமையாக இருக்கிறது. அதிர்ஷ்டக்காரர்கள்! ஒரு நாளைக்கு இரண்டு தரம் விமான டிக்கட்டுகளின் விலையை ஏற்றி விடுகிறார்கள்!

3 comments:

  1. Dear Sir,
    A pleasure to read your "Nanum" series.Raa.Ki.Ra says he is related to you;then may be I also!!
    Regards
    Srinivasan
    Mumbai

    ReplyDelete
  2. //தபால்காரர் வழி கேட்டால் சொல்லுங்கள்//

    அட்டகாசமான நையாண்டி‍ சார் இது,

    ReplyDelete
  3. அருமை.
    அத்தனையும் அருமை.
    நன்றி ஐயா.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!