நேர்முகப் பேட்டிகள் ஒரு கண் துடைப்பு என்பதால், சிபாரிசு இல்லாதவர்கள் பேட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு குறைந்த பட்சம் சுடச்சுடவாகவாவது பதில் சொல்லித் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ளலாம். அவர்களுடைய உபயோகத்திற்காகப் பிரபல எழுத்தாளர் ஏகாம்பரம் தயாரித்துள்ள நேர்முக பேட்டித் துணைவன் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்...
சில கேள்வி-பதில்கள்
கே: ராமசுப்பிரமணியன். . . உட்காருங்க நீங்கதான் ராமசுப்பிரமணியன்
ப: சேச்சே. நான் ராமசுப்ரமணியன் இல்லை. அவனோட பாட்டி.
கே: நீங்க தமிழ் பி.ஏ.வா? வெரி குட். நீங்க என்ன இலக்கியம் படிச்சிருக்கீங்க, தமிழ்லே?
ப: ஷெல்லி, மில்டன், கீட்ஸ் ஆகியவர்கள் எழுதியதை.
கே: இங்கிலீஷைத் தமிழ்லே படிச்சீங்களா?
ப: நான் சரித்திரத்தையே நியூ மேத்ஸ்லே படிச்சிருக்கிறேனே.
கே: மிஸ்டர்., இது பேட்டி. கன்னா பின்னாவென்று நீங்க பேசக் கூடாது.
ப: சரி. நான் அப்படிப் பேசவில்லை. நீங்களே அப்படிப் பேசுங்க.
கே: நீங்க எந்த ஊர்?
ப: தம்பூர்.
கே: ஷார்ட் ஹாண்ட் தெரியுமா?
ப: தெரியும். கடிகாரத்தில் பெரிய முள், சின்ன முள் என்று இருக்கும். சின்ன முள்தான் ஷார்ட் ஹாண்ட்.
கே: இப்போ மணி என்ன?
ப: மூன்று ஜாமம் ஏழு நாழிகை இருபது குளிகை.
கே: என்னய்யா குளிகை, தளிகை?
ப: நான் தமிழ் பி.ஏ. தட் ஈஸ் ஒய் ஐ டோல்ட் யூ தி டைம் இன் டமில்.
கே: சரி. இங்கிலீஷ் டைம் என்ன?
ப: விடிகாலை நாலரை.
கே: என்னது?
ப: ஆமாம். இப்போது இங்கிலீஷ் நாட்டிலே அதுதான் டைம்.
கே: இங்கிலீஷ் டைம் இருக்கட்டும்; உன் டைம் என்ன?
ப: இன்ஸஃபிஷியன்ட் டைம். அதாவது போதாத காலம்!
கே: சரி, ஏ என்பவன் ஒரு வேலையை ஏழு நாளில் செய்கிறான். பி என்பவன் அதே வேலையைப் பதினாலு நாளில் செய்கிறான்.
ப: அதெப்படி முடியும்! ஏ தான் ஏழு நாளில் அந்த வேலையைச் செய்து முடித்துவிட்டானே?
கே: கணக்கைப் பூரா கேளுங்க. இவர்களில் யாரைத் திறமைசாலி என்று தேர்ந்து எடுப்பீர்கள்? ஏன்?
ப: "ஏ' யைத் தேர்ந்தெடுப்பேன். "ஏ' என்றாலே தியேட்டர்ல வசூல் என்னமா ஆகிறது தெரியுமா? "ஏ"யின் மேல் எல்லோருக்கும் அட்ராக் ஷன்.
கே: விமானக் கம்பெனி வேலைக்காக வந்திருக்கும் உங்களுக்கு இந்தத் துறையில் முன் அனுபவம் உண்டா?
ப: உண்டு. சின்ன வயதில் தும்பியைக் கயிற்றில் கட்டிப் பறக்க விட்டிருக்கிறேன். அப்புறம் காற்றாடி பறக்க விட்டிருக்கிறேன்!
கே: இதெல்லாம் பறக்கிற அனுபவமா?
ப: சின்ன வயதில் "அம்மா சாதம்!' "அம்மா மிட்டாய்', "அம்மா புதுச் சட்டை' என்று நான் கேட்கும் போதெல்லாம், அம்மா ""இந்தப் பிள்ளை என்னமாய்ப் பறக்கிறது!'' என்று சொல்வார்கள். அந்த வயதிலேயே பறந்தவன் நான்!
ப: லஞ்சம் வாங்கக்கூடிய வேலையாக இருந்தால் ஆயிரம் ரூபாய். இல்லாவிட்டால் இருபதாயிரம் ரூபாய்.
கே: வெரி குட். நீங்க போகலாம்.
ப: சார்... மானேஜிங் டைரக்டரின் மருமகன் மிஸ்டர் அச்சு பிச்சு வெளியே காத்திருக்கிறார். அவரை அனுப்பட்டுமா?
கே: அனுப்புங்கள்...ஆமாம்..அவரைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?
ப: இன்றைய பேட்டிக்குப் பிறகு அவர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்றே அவருக்குக் கடிதம் வந்திருப்பதிலிருந்து தெரிந்து கொண்டேன். குட் பை!
//சின்ன வயதில் "அம்மா சாதம்!' "அம்மா மிட்டாய்', "அம்மா புதுச் சட்டை' என்று நான் கேட்கும் போதெல்லாம், அம்மா ""இந்தப் பிள்ளை என்னமாய்ப் பறக்கிறது!'' என்று சொல்வார்கள். அந்த வயதிலேயே பறந்தவன் நான்!//
ReplyDeleteஎன்னைப் போலவே இவரும் சின்ன வயதில் பறக்காவெட்டியாக இருந்திருக்கிறார்.
// இன்ஸஃபிஷியன்ட் டைம். அதாவது போதாத காலம்! // ha..ha..! - R.J.
ReplyDeleteகே:Djiboutiயின் பரப்பளவு அல்லது மக்கள் தொகை எவ்வளவு?
ReplyDeleteஇத விட்டுட்டிங்களே?
இது போன்று கேள்வியைக் கேட்க முதலில் இந்தப் பெயரை உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டுமே....!
ReplyDeleteஅருமை.
ReplyDelete