எது சுலபம்?
கிரஹாம் கிரீன் ஒரு பெயர் பெற்ற இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர். நம் ஆர். கே. நாராயணின் திறமையைக் கண்டு ஊக்குவித்தவர் அவர்.
கிரீன், TRAVELS WITH MY AUNT' என்ற புத்தகத்தை எழுதினார், அதன் கையெழுத்துப் பிரதியை நியூ யார்க்கில் உள்ள தனது பிரசுரகர்த்தருக்கு அனுப்பினார், சில வாரங்கள் கழித்து பிரசுரகர்த்தர் ஒரு பதில் தந்தி அனுப்பினார்.”புத்தகம் பிரமாதமாக இருக்கிறது. புத்தகத்தின் தலைப்பை நாம் மாற்ற வேண்டும்” என்று எழுதியிருந்தார்,
இதற்கு கிரீன் பதில் தந்தி அனுப்பினார்: அதில் “ தலைப்பை மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதை விடச் சுலபமானது, பிரசுரகர்த்தரை மாற்றி விடுவது!”
என்று எழுதியிருந்தார்!
==================
மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குறை
அமெரிக்க எழுத்தாளர் JAMES THURBER எழுதிய ஒரு நகைச்சுவைப் புத்தகம் MY LIFE AND HARD TIMES. இதை 1933-ல் பிரஞ்சில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்.
பிரஞ்சு மொழி தெரிந்த அவருடைய நண்பர், தர்பரிடம் : “ பிரஞ்சு மொழியில் வந்திருக்கிற உங்கள் புத்தகத்தைப் படித்தேன். ஒரிஜினல் புத்தகத்தை விட பிரஞ்சில் இன்னும் நன்றாக இருக்கிறது என்று சொல்வேன்” என்று சொன்னார்:
தர்பர் மிகவும் சாவதானமாக, அதே சமயம் சற்று குறும்புடன் ” ஆமாம், ஆமாம், என் புத்தகங்களை மொழிபெயர்க்கும்போது ஒரிஜினலில் இருக்கும் பல சிறப்புகள் விட்டுப் போய்விடுகின்றன. அதனால் தான் இப்படி அமைந்து விடுகின்றன” என்றார்!
===============
ஆறாம் ஜார்ஜ்
இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ், இரண்டாம் உலகப்போருக்கு முன்பு ஒரு சமய கனடா நாட்டுக்கு விஜயம் செய்தார், அவர் மாண்ட்ரியல் நகருக்கு சென்ற போது அந்த நகரின் மேயர் அவரை வரவேற்று விருந்தளித்தார். மேயர் வழக்கமான சூட்- கோட் உடைதான் அணிந்திருந்தார், மேயருக்கான விசேஷ உடை, அங்கி ஆகிய எதையும் அணிந்திருக்கவில்லை.
அவரிடம் மன்னர்,” ஏன்,. மேயருக்கான விசேஷ உடைகள் எதையும் அணிந்து கொள்வதில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு மேயர் பரபரப்புடன், “ அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் அங்கி அணிந்துகொள்வது உண்டு. ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிகளின் போது (!) போட்டுக் கொள்வேன்" என்று சொன்னார்!
இது எப்படி இருக்கு!
( வெகு நாள் வரை மேயர் இப்படிச் சொன்னதை வெளியே வராமல் பார்த்துக் கொண்டது கனடா அரசு. ஆனால் ஒரு சாமர்த்தியமான பத்திரிகையாளர் எப்படியோ கண்டுபிடித்து அம்பலப் படுத்தி விட்டாராம்!
=======
ப்ரோக்கலிக்குத் தடை
அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் ஒரு நொறுக்குத்த்தீனி பிரியர். வாப்பாட்ட்டு ரசிகர். அவருக்கு பிடிக்காதது ப்ரோக்கலி என்னும் கறிகாய்தான். ( படத்தைப் பார்க்க,) காலிஃப்ளவர் இனத்தைச் சேர்ந்தது.
“ ப்ரோக்கலியின் சுவை. மருந்து மாதிரி இருக்கிறது, எவன் அதைச் சாப்பிடுவான்? எந்த காரணத்தையும் கொண்டு என் உணவில் அது இருக்கக்கூடாது, என்னுடைய தனி விமானமான
ஏர்-ஃபோர்ஸ் ஒன்னில் ப்ரோக்கலி முழு தடை, இது அதிபர் என்ற முறையில் நான் இடும் உத்தரவு! நான் சிறுவனாக இருந்த போது என் அம்மா ப்ரோக்கலி சாப்
பிடும்படி கட்டயப்படுத்துவார். நான் இப்போது அமெரிக்க ஜனாதிபதி, நான் ப்ரோக்கலி சாப்பிடப் போவதில்லை” என்று (மார்ச் 18, 1990) அறிவித்தார்.
அவ்வளவுதான், ப்ரோக்கலி பண்ணயாளர்கள் பொங்கி எழுந்தார்கள். அவர்களுக்குப் பயம், ப்ரோக்கலியை மக்களும் ஒதுக்கி விடுவார்களோ என்று!
தங்கள் எதிர்ப்பைக் காட்ட சுமார் 10,0000பவுண்ட் ப்ரோக்கலிகளைக் கொண்டு வந்து அதிபரின் வெள்ளை மாளிகையின் முன் இறக்கினார்கள். வெள்ளை மாளிகை புல்வெளி மைதானத்தில் ஒரு நிகழ்ச்சியாக அமைத்து அதிபரின் மனைவி பார்பரா புஷ் அதைப் பெற்றுக்கொண்டார். பிறகு அதை இலவசமாக உணவு வழங்கும் விடுதிகளுக்கு அனுப்பிவிட்டார்!