October 02, 2010

கடிதப் புத்தகங்கள் இரண்டு - கடுகு ( UPDATED)

 சமீபத்தில் இரண்டு புத்தகங்களைப் படித்தேன். இரண்டு புத்தகங்களும் கடிதங்களின் தொகுப்பு. பிரபல எழுத்தாளர்களின் கடிதங்கள்.
முதல் புத்தகம் இசாக் அசிமாவ் எழுதியவை.( தன் பெயர் இப்படித்தான் உச்சரிக்கப்பட வேண்டும்  என்று அவரே எழுதி இருக்கிறார்.)
இரண்டாவது புத்தகம் நகைச்சுவை கவிதைகளை எழுதிக் குவித்த அக்டன் நாஷ்  தன் குடும்பத்தினருக்கு எழுதிய அன்புக் கடிதங்கள்.

அசிமாவ் ஒரு மேதை. விஞ்ஞான கதைகளிலிருந்து ஷேக்ஸ்பியரிலிருந்து பைபிளிலிருந்து நகைச்சுவை ஜோக்குகள் வரை ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். "மூன்று நாட்களில் ஒரு புத்தகத்தை எழுதிவிடுவேன். ஆனால் ஒருவாரம் பத்து நாள் தாமதித்துத் தான் பதிப்பகத்தாருக்கு அனுப்புவேன். இல்லாவிட்டால் அவர்கள் நான் அவசரக்கோலமாக எழுதிவிட்டேன் என்று எண்ணி விடுவார்கள்” என்று அசிமாவ் தன் சுய சரிதத்தில் சொல்லியிருக்கிறார். 
546 புத்தகங்களை எழுதியுள்ளவர் அசிமாவ்.   அத்துடன்,  தனிப்பட்ட முறையில் நிறைய பேருக்கு கடிதங்களை எழுதியுள்ளார், அவர் வாழ்நாளில் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டுமாம். அவர் எப்போதும் கார்பன் பேப்பரை வைத்துத்தான் கடிதங்களைஎழுதுவாராம். சிலசமயம் அவர் கார்டுகளில் எழுதுவதும் உண்டு  அவைகளுக்குக் கணக்குக் கிடையாது.
அசிமாவ் எழுதிய எல்லாப் புத்தகங்களின் பிரதிகளையும் கடிதங்களையும் விஸ்கான்சின் சர்வகலாசாலையில் ஒரு பெரிய ஹாலில் நிரந்தரமாக காட்சியாக  வைத்தி்ருக்கிறார்கள்.
அசிமாவ் காலமான சில வருடங்களுக்குப் பிறகு அவரது மனைவி ஜேனட் ஜப்சன் அசிமாவின் கடிதங்களிலிருந்து பல கடிதங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளார். புத்தகத்தின் தலைப்பு யுவர்ஸ்... (YOURS..). இப்படி ஒரு புத்தகத்தைத் தொகுக்கப் போகிறேன் என்று ஜேனட் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்த பலர், அசிமாவ் தங்களுக்கு எழுதிய கார்டுகளை ஃபோட்டோ காபி எடுத்து அனுப்பினார்களாம். சுமார் 330 பக்கப் புத்தகம். ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு வரியும் மிக மிக அபாரமானவை. ஒரு வரி கூட   ஆம் ஒரு வரி கூட-- விடாமல் ரசித்துப் படிக்கக் கூடிய புத்தகம். அசிமாவ் கடிதங்களைப் பின்னால் தனிப் பதிவாகப் போடுகிறேன்.

இரண்டாவது புத்தகம் ஆக்டன் நாஷ் தன் குடும்பத்தினருக்கு எழுதிய அன்புக் கடிதங்கள் தான். புத்தகத்தின் தலைப்பு:    LOVING  LETTERS  (லவ்விங்க் லெட்டர்ஸ்). கடிதங்கள் பாசத்திலும் நகைச்சுவையிலும் பரிவிலும் தோய்த்து எடுக்கப்பட்டுள்ளன.கடிதங்கள் எழுத சளைக்க மாட்டாராம்.  வெளியூர் சென்றால் தினமும் ஒரு கடிதம் போடுவாராம்.இந்த 400 பக்கப் புத்தகத்தைத் அவருடய மகள் லினெல் நாஷ் ஸ்மித் தொகுத்துள்ளர். அங்கங்கு குறிப்புகளையும் தந்துள்ளர். இன்னும் புத்தகத்தை  நான் படித்து முடிக்கவில்லை. ஆனால் அவரது பாடல் புத்தகங்களை ரசித்துப் படித்திருக்கிறேன். TRASHERYOF NASHERY. CANDY IS DANDY, THE BEST OF OGDEN NASH, OGDEN NASH OMNIBUS என்று   14  கவிதைப் புத்தகங்களை எழுதியுள்ளார். தான் எழுதிய சில   கவிதைகளை  சிறிது மாற்றி வேறொரு கவிதையாகவும் எழுதி இருக்கிறார் .
இவர் பாடல்களின் சிறப்பு நகைச்சுவை மட்டுமல்ல, சிலவற்றில் கடைசி வரிகளைச் சற்று அளவுக்கு அதிகமாக  நீட்டி  இருப்பார்..வித்தியாசாமான ஸ்பெல்லிங்க் இருக்கும்.
இந்தப் பதிவில் அவரது மூன்று கவிதைகளைத் தருகிறேன்.  சில கடிதங்களை மொழிபெயர்த்து ஒரு தனிப்பதிவாகப் போட எண்ணி இருக்கிறேன்.

THE PEOPLE UPSTAIRS
The people upstairs  all practice ballet
Their living room is bowling alley.
Their bedroom is full of conducted tours.
Their radio is louder than yours.
They celebrate weekends all the week.
When they take  a shower, your ceiling leak.
They try to get their parties mix
By supplying their guests with Pogo sticks,
And when their orgy atlast abates,
They go to the bathroom on roller skates.
I might love the people upstairs wondrous
If instead of above us, they just lived under us!
                                     (Written in 1949)
---------------------
GRANDPA IS ASHAMED
A child need not be very clever
To learn that "Later, dear" means "Never."
---------------
A CAUTION TO EVERYBODY
Consider the auk:
Becoming extinct because he forgot how to fly, and could only walk.
Consider man, who may well become extinct
Because he forgot how to walk and learned how to fly before he thinked.

பின் குறிப்பு: அப்பார்ட்மென்ட் அவதிகள் என்ற கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன் . அவர் மேலே எழுதியுள்ள கவிதையில் உள்ள  இரண்டு மூன்று ஐடியாக்கள்  என்னை அறியாமலேயே என் கட்டுரையிலும் இடம் பெற்றுவிட்டன.  சரி, யாராவது கேட்டால் நாஷ் என்னைப் பார்த்து காபி அடித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டியதுதான்!

9 comments:

  1. In memory yet green & In joy still felt ஆகிய இரு புத்தகங்கள் அவருடைய சுயசரிதைகள். பிறகு அவை அவுட் ஆஃப் ப்ரிண்ட் ஆகி வேறு ஒரு சுயசரிதை வந்தது என்று படித்துள்ளேன்.

    In memory yet green என்னும் தலைப்பு அப்படியே எனது மனநிலையை பிரதிபலிக்கிறது. என்னைப் போலவே அவருக்கும் அநியாயத்துக்கு ஞாபகசக்தி. அந்த நினைவுகள் அவருக்கு நேற்று நடந்தவையாக தோன்றியுள்ளன.

    எனக்கும்தான். அதைத்தான் நான் அடிக்கடி சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலை பள்ளையில் அஞ்சாப்பு படித்தபோது என்றேல்லாம் எழுதி பலரை டென்ஷனாக்கி வருகிறேன் என்பது தனி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. டோண்டு அவர்களுக்கு:
    I,ASIMOV என்பது அவரது மூன்றாவது சுய சரித்திரம்.

    அநியாயத்துக்கு ஞாபகசக்தி இருந்தால் தப்பில்லை.” நான் அடிக்கடி சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலை பள்ளையில் அஞ்சாப்பு படித்தபோது என்றேல்லாம் எழுதி பலரை டென்ஷனாக்கி வருகிறேன்” என்று எழுதி இருக்கிறீர்கள். அது உங்களை டென்ஷனாக்காமலிருக்கிறதா என்பதுதான் முக்கியம்!

    ReplyDelete
  3. எனக்கு என்ன டென்ஷன் இதில்? பழைய ஞாபகங்கள் வரும்போது அவை தத்ரூபமாகவே இருக்கும். பல தருணங்களில் துல்லியமாகவும் ஞாபகத்துக்கு வரும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. டோண்டு அவர்களுக்கு, சில விஷயங்களை மறக்க விரும்புவோம். அவைகளை மறக்கமுடியவில்லை என்றால் டென்ஷன் வர வய்ய்ப்பு உண்டே!

    ReplyDelete
  5. நீங்கள் கூறுவதை புரிந்து கொள்கிறேன். பல பாதகமான விஷயங்கள் நடந்துள்ளனதான். அவையும் நினைவில் இருந்தாலும் அவற்றை வெளிக்கொணர முயற்சிப்பது இல்லை. ஆகவே டென்ஷன் இல்லை.

    அதே சமயம் அவை ஏன் நடந்தன என்பதை உணர்ந்து, அந்தக் காரணங்கள் திரும்ப உருவாகாமலும் பார்த்துக் கொள்ளலாம்தானே.

    பை தி வே, “மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமை என்னும் எனது பதிவில் நான் கேலண்டர் தினங்கள் பற்றி எழுதியதை சமீபத்தில் 1974-ல் ஐசக் அசிம்மோவுடன் கடிதம் மூலம் பகிர்ந்து கொண்டேன். அவர் தனது பதிலில் “Your calendar discussion is quite interesting" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_26.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. டோண்டு அவர்களுக்கு, பதிவைப் பார்த்தேன். மிகவும் வியப்பூட்டுவதாக உள்லது, உஙள் செயல் முறை விளக்கம் எனக்குப் புரியவில்லை.
    எனக்குத் தெரிந்த ஒரு பையன் - 3 வயதில் இப்படி தேதிகளைச் சரியாச் சொல்வான். ”எப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்டால், ”தெரியும். அவ்வளவுதான்” என்பான். அவன் பெற்றோர்கள் சில மாதங்களூக்குப் பிறகு கேட்பதை நிறுத்தி விட்டார்கள். இப்போது அவன் நியூயார்க் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான்.

    ReplyDelete
  7. Dondu is also reading kadugu !!!!!!!! Great Mr.Kadugu - Did you notice
    that dondu is following/copying you by comparing himself with
    asimov....i dont know who are all going to compare themselves with Real
    great people!!!! (These are all side effect of your blog)-- Kothamalli

    ReplyDelete
  8. dondu , me and few people have the faculty , memory is working fine presently.

    but i was told same type of people are affected by the AZILMEYER's problem, ie MEMORY LOSS of the recent past, but not DONDU type of "sameebatil in 1962 at Hindu high school"..

    my father had the problem.. he was asking for his long long ago secretary to bring the jerky GOVT Jeep..

    ReplyDelete
  9. ஆல்ட்ஸ்ஹைமர் வியாதி பற்றி ஒரு நாவலைப் படித்த பிறகு, எனக்கும் பயம் வந்ததௌ. மருத்துவரான என் தமக்கையிடம் அந்த பயம் பற்றிப் பேசியபோது அவர் காக்கேசிய இனத்தைச் சார்ந்தவர்களுக்குத்தான் அது வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறினார். ஒரு வேளை என்னை சமாதானப்படுத்தத்தான் அவ்வாறு கூறினாரோ என்பதை நான் அறியேன்.

    கடவுள் காப்பார்றுவார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!