October 07, 2010

வாயு மைந்தன்

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக,  ஆருயிர் காக்க  ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்-  

இது அனுமனைக் குறிக்கும் துதிப் பாடல்.

பஞ்சபூதங்களையும் (காற்று , வானம், நீர், நெருப்பு,  நிலம்,)  இந்தப் பாடலில் கொண்டு வந்துள்ளார் கவிச் சக்ரவர்த்தி கம்பர். 

அனுமன் வாயுவின் மகன்;
ஆகாயம் வழியாகத் தாவி.
கடல் மேல்  செல்கிறன்.
பூமியின் மகள் சீதாபிராட்டியை க் காண்கிறான்.
அயல் நாட்டில் தீயை வைக்கிறான்

5 comments:

  1. ஆரியர்க்காக ஏகி என்று படித்திருக்கிறேன். இன்று தான் முதன்முதலில் ஆருயிர் காக்க ஏகி என்று படிக்கிறேன்.

    ReplyDelete
  2. Sir,
    Translation superb!!!!!! (Kalakitel Poongo)- Kamban thotethellam pon, Kadugu's tranlation is also gold)

    Kothamalli

    ReplyDelete
  3. <<< குமரன் (Kumaran) said...ஆரியர்க்காக ஏகி >>>
    அப்ப்டியும் ஒரு பாட பேதம் இருக்கிறது.

    ReplyDelete
  4. The historians say that this song was not written by Kambar and is a "idai cherugal" writen and inserted by some one later.. The other such song is " UranguginRa Kumbakarna .... Ezhundirai ezhundhirai"

    ReplyDelete
  5. இந்த பாடல் இடைச்செருகல் என்று படித்திருக்கிறேன். கற்பனைச் சிறப்பாக இருப்பதாலும் கம்பன் எழுதி இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!