September 24, 2010

கம்பன் வைத்த ஐஸ்!

கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழுதிய அழகானப் பாடலை
இங்கு தருகிறேன்.

கம்பனின் எழுத்தாணியின் கூர் மழுங்கி விட்டது.
மாவண்டூரில் உள்ள சிங்கன் என்பவரின் இரும்புப் பட்டறைக்குச் செல்கிறார். அவரிடம் தனக்கு ஒரு எழுத்தாணி செய்து தருமாறு கேட்கிறார். சிங்கன் விரைவாகச் செய்து தருகிறார்,. கம்பரும் மனம் மகிழ்ந்து சிங்கன் மீது ஒரு பாடல் இயற்றிக் கொடுக்கிறார். (இது ஒரு ஊகம்தான்!)
இதோ அந்தப்  பாடல்!

ஆழியான் ஆழி; அரன் மழுத்தான் என்பான்;
ஊழியான் அங்கை எழுத்தாணி அருள் என்பான்;
கோழியான் குன்றெரிய வேல் என்பான்;
மாவண்டூர் சிங்கன் உலைக்களத்திற் சென்று!

2 comments:

  1. கம்பர் பார்க்க கொஞ்சம் ஐன்ஸ்டீன் மாதிரி இருக்கார்! :-)))

    ReplyDelete
  2. +++திவா said...கம்பர் பார்க்க கொஞ்சம் ஐன்ஸ்டீன் மாதிரி இருக்கார்! :-)))+++

    மாற்றிச் சொல்லுங்கோ..ஐன்ஸ்டீன் தான் கம்பர் மாதிரி இருக்கிறார்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!